இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலைய (High Performance Center) பயிற்சியாளராக ஒரு மாத ஒப்பந்த அடிப்படையில் டிம் பூன் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
>>குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட மெண்டிஸ்!<<
அதன்படி இங்கிலாந்தின் கவுண்டி கழகமான லெய்கெஸ்டர்ஷைரின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான டிம் பூன் தனது புதிய பதவியினை இம்மாதம் 08ஆம் திகதியில் இருந்து பொறுப்பேற்றிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் இங்கிலாந்தின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனுபவம் கொண்டிருக்கும் டிம் பூன், நுட்பம் சார்ந்த விடயங்களில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள், இலங்கையின் வளர்ந்து வரும் அணி மற்றும் இலங்கை 17 வயதின் கீழ் அணி ஆகியவற்றுக்காக பணிபுரியவிருக்கின்றார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<