மனிதநேயப் பணியில் இணைந்த வனிந்து ஹஸரங்க, அகில தனன்ஞய

90
Wanindu Hasaranga
Wanindu Hasaranga

கொவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் காரணமாக முழு இலங்கையும் முடங்கியிருக்கும் நிலையில், மக்களின் அன்றாட வாழ்க்கையும் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டவர்களில் வருமானம் குறைந்த ஏழைகள் மிகவும் பலத்த இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

வீட்டுத்தோட்ட சவாலில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீடுகளில் முடங்கிப்…

இந்த  ஏழை மக்களுக்கு உதவும் முகமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்துவரும் சகலதுறை வீரர்களில் ஒருவரான வனிந்து ஹஸரங்க அத்தியவசிய பொருட்கள் அடங்கிய குறித்த அளவு உலர் உணவுப் பொதிகளை வழங்கியிருக்கின்றார்.

இதன் மூலம், ஏனைய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் போன்று மனித நேயப் பணிகளில் ஒரு கனவானாக வனிந்து ஹஸரங்கவும் இணைந்து கொள்கின்றார்.

வனிந்து ஹஸரங்க தனது மனித நேயப் பணியின் அங்கமாக வழங்கிய அத்தியவசியய பொருட்கள் மாத்தறை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன.

வனிந்து ஹஸரங்கவின் இந்த மனிதநேயப் பணியினை, இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மலிந்த புஷ்பகுமார நெறியாள்கை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வனிந்து ஹஸரங்க தவிர, தற்போது பந்துவீச்சு சர்ச்சையில் போட்டித் தடையினைப் பெற்றிருக்கும் மாய சுழல்பந்துவீச்சாளரான அகில தனன்ஞயவும் கொரோனா வைரஸினால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அத்தியவசிய பொருட்களை வழங்கி உதவி புரிந்திருக்கின்றார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மனித நேயப்பணிகள் ஒரு புறமிருக்க, கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் 178 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 5 இறப்புக்களும் பதிவாகியிருக்கின்றன. அதேநேரம், 38 பேர் இந்த வைரஸ் நோயிலிருந்து முழுமையாக குணமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும்  பல கிரிக்கெட் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<