ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த முதல் இரு T20I போட்டிகளுக்கான டிக்கெட்டுகள்!

Australia tour of Sri Lanka 2022

835

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் 2 T20I போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரின் முதலிரண்டு போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த இந்த இரண்டு போட்டிகள் உட்பட ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான டிக்கெட்டுகள் இன்றைய தினம் விற்பனைக்குவந்த நிலையில், ஒரே நாளில் முதலிரண்டு T20I  போட்டிகளுக்குமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.

எனவே, தொடரின் ஏனைய போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை www.srilankacricket.lk  என்ற இணையத்தளம் ஊடாகவும், இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகம், கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானம் (ஜூன் 8ம் திகதி முதல்) மற்றும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் (ஜூன் 26ம் திகதி முதல்) போன்றவற்றில் நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணியானது 3 T20I, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதுடன், T20I தொடர் எதிர்வரும் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<