ஆசியக் கிண்ணத்தில் பணியாற்றவுள்ள இலங்கை மகளிர் நடுவர்கள், மத்தியஸ்தர்!

Women’s T20 Asia Cup 2022

157

இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண் நடுவர்கள் மற்றும் ஒரு பெண் போட்டி மத்தியஸ்தர் என மூவர், அடுத்து நடைபெறவுள்ள மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பணியாற்றவுள்ளனர்.

பெண் நடுவர்களாக தெதுனு டி சில்வா மற்றும் நிமல் பெரேரா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதுடன், வனீஷா டி சில்வா போட்டி மத்தியஸ்தராக செயற்படவுள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

>> ஹேஷான் இரட்டைச் சதமடிக்க; தரிந்து, பிரபாத், லசித் அபார பந்துவீச்சு

மேற்குறித்த மூவரும் இலங்கையின் உள்ளூர் போட்டிகளில் அனுபவம் வாய்ந்த நடுவர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தராக உள்ளனர். மகளிருக்கான போட்டித் தொடர்கள் மாத்திரமின்றி, இலங்கையில் நடைபெறும் ஆடவருக்கான முதற்தர மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளிலும் பணியாற்றியுள்ளனர்.

மகளிர் ஆசியக்கிண்ணத் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 16ம் திகதிவரை பங்களாதேஷில் நடைபெறவுள்ளது. குறித்த இந்த தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<