ஹேஷான் இரட்டைச் சதமடிக்க; தரிந்து, பிரபாத், லசித் அபார பந்துவீச்சு

SLC Major League Tournament 2022

142

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது வாரத்துக்கான 12 போட்டிகள் நேற்று (18) நிறைவுக்கு வந்தன.

ராகம கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் பொலிஸ் கழக வீரர் ஹேஷான் தனுஷ்க (233) இரட்டைச் சதமடித்து அசத்தியிருந்தார். இம்முறை மேஜர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரில் பதிவாகிய 4ஆவது இரட்டைச் சதம் இதுவாகும்.

முதல்தர கிரிக்கெட்டில் தன்னுடைய முதலாவது இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்த 24 வயதான ஹேஷான், முன்னதாக நடைபெற்ற BRC கழகத்துக்கு எதிரான போட்டியில் சதமடித்திருந்தார்.

இதனிடையே, NCC கழக வீரர் சஹன் ஆரச்சிகே நீர்கொழும்பு கழகத்துக்கு எதிரான போட்டியில் சதம் கடந்து 110 ஓட்டங்களைக் குவித்தார். அத்துடன், BRC கழகத்தின் துஷான் ஹேமன்த (103), சிலாபம் மேரியன்ஸ் கழகத்தின் ரவீன் யசஸ் (118), கோல்ட்ஸ் கழகத்தின் ஹஷான் துமிந்து (138), ராகம கழகத்தின் யொஹான் லியனகே (118) ஆகிய வீரர்கள் சதங்களைக் குவித்து பிரகாசித்திருந்தனர்.

இந்த நிலையில், குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழக வீரர் தரிந்து ரத்நாயக 209 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அதேபோல, துடுப்பாட்டத்திலும் பிரகாசித்த அவர் 74 ஓட்டங்களைக் குவித்து வலுச்சேர்த்தார்.

மேஜர் பிரீமியர் லீக்கில் சுழலில் மிரட்டிய துனித், பிரபாத், சொனால்

அதேபோன்று களுத்துறை நகர கழகத்துக்கு எதிரான போட்டியில் காலி கிரிக்கெட் கழக வீரர் ரகு சர்மா, முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அபாரம் காண்பித்தார்.

இதனிடையே, SSC கழகத்துக்கு எதிரான போட்டியில் BRC கழக வீரர் திலகரட்ன சம்பத் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல்தரப் போட்டிகளில் 300 விக்கெட் மைல்கல்லை எட்டினார்.

அத்துடன், இலங்கை டெஸ்ட் அணிக்காக விளையாடி வருகின்ற SSC கழக வீரர் பிரபாத் ஜயசூரிய, BRC கழகத்துக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்த, NCC கழகத்துக்காக விளையாடி வருகின்ற லசித் எம்புல்தெனிய, நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இது இவ்வாறிருக்க, முவர்ஸ் மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழகங்களுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் கொழும்பு கழகத்துக்காக சகலதுறையிலும் பிரகாசித்த வனிந்து ஹஸரங்க, பந்துவீச்சில் 73 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், துடுப்பாட்டத்தில் 46 பந்துகளில் 56 ஓட்டங்களையும் குவித்தார்.

மறுபுறத்தில் முவர்ஸ் கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ரமேஷ் மெண்டிஸ் மற்றும் மொஹமட் சமாஸ் ஆகிய இருவரும் அரைச் சதங்களைக் குவித்ததுடன், பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட ரமேஷ் மெண்டிஸ், 2ஆவது இன்னிங்ஸில் 65 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் – 400 (118.1) – நிஷான் மதுஷ்க 125, ஜனித் லியனகே 71, துலாஜ் பண்டார 47, சமிந்த பெர்னாண்டோ 44, நளின் ப்ரியதர்ஷன 4/95, சுபுன் மதுஷங்க 2/58, நுவன் பிரதீப் 2/76

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 460/6d (112) – ஹேஷான் தனுஷ்க 233, துலாஷ் உதயங்க 73, மதுரங்க சொய்ஸா 60, அஷேன் பண்டார 25, சன்ஜுல பண்டார 2/43

ராகம கிரிக்கெட் கழகம் – 202/3 (32) – யொஹான் லியனகே 106, நிஷான் மதுஷ்க 81, சுபுன் மதுஷங்க 2/40

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


SSC கழகம் எதிர் BRC கழகம்

SSC கழகம் – 373 (103.2) – கவிந்து நதீஷான் 87, நுவனிது பெர்னாண்டோ 72, நிபுன் தனன்ஜய 54, சரித் அசலங்க 44, ரொஷேன் சில்வா 25, துஷான் ஹேமன்த 4/105, துவிந்து திலகரட்ன 3/77, உமெஷ்க மொரைஸ் 2/33

BRC கழகம் – 213 (51.1) – திலகரட்ன சம்பத் 61, மலிந்த ஜயேத் 39, பிரபாரத் ஜயசூரிய 6/71, நிசல தாரக 3/31

SSC கழகம் – 203/8d (41.3) – நுவனிது பெர்னாண்டோ 56, ரொஷேன் சில்வா 45, நிபுன் தனன்ஜய 43, திலகரட்ன சம்பத் 7/77

BRC கழகம் – 250 (40.5) – துஷான் ஹேமன்த 103*, லஹிரு சமரகோன் 39, உமெஷ்க மொரைஸ் 31, பிரபாத் ஜயசூரிய 5/110, நிம்னக ஜயதிலக 4/41

முடிவு – SSC கழகம் 113 ஓட்டங்களால் வெற்றி


குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 239 (83.3) – அசன்த பஸ்நாயக்க 61, ரன்தீர ரணசிங்க 48, கயான் மனீஷன் 40, தரிந்து ரத்நாயக 5/93

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 352 (110.5) – தரிந்து ரத்நாயக 74, சஷ்ரிக புஸ்ஸேகொல்ல 69, சௌராப் துபே 50, சகிந்து விஜேரட்ன 4/109

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 297 (79.3) – அசன்த பஸ்நாயக 95, தனுஷ்க தர்மசிறி 84, தரிந்து ரத்நாயக 5/116, சாமிக எதிரிசிங்க 4/97

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


Ace Capital கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

Ace Capital கிரிக்கெட் கழகம் – 288 (92) – ரொஷான் ஜயதிஸ்ஸ 77, ஸ்வப்னில் அனில் 63, தனுக தாபரே 62, லசித் லக்ஷான் 4/65, ரஜிந்த புன்சிஹேவா 2/20

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 290 (111.1) – ரவீன் யசஸ் 118*, லசித் லக்ஷான் 70, கசுன் விதுர 25, நிம்சர அத்தரகல்ல 2/51, லசித் குரூஸ்புள்ளே 2/60

Ace Capital கிரிக்கெட் கழகம் – 150/7d (52.5) – ஓஷத பெர்னாண்டோ 55, டி. பாஸ்கரன் 30, லசித் லக்ஷான் 4/21

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 409/9d (162.2) – இஷிவர திஸாநாயக 88, கசுன் அபேரட்ன 71, தேஷான் டயஸ் 61, துனித் வெல்லாலகே 5/90

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 413/8d (98.4) – ஹஷான் துமிந்து 138*, தனன்ஜய லக்ஷான் 60, கவிஷ்க அன்ஜுல 55, முதித லக்ஷான் 51*, துனித் வெல்லாலகே 31, கீத் குமார 4/74, சந்துன் அபேவர்தன 2/114

லங்கன் கிரிக்கெட் கழகம் – 33/0 (5)

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


களுத்துறை நகர கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

களுத்துறை நகர கழகம் – 190 (51.2) – சவன் கன்கானம்கே 37, யெசித் ரூபசிங்க 17, ரகு சர்மா 5/52

காலி கிரிக்கெட் கழகம் – 405/6d (111) – சாலித் பெர்னாண்டோ 133, விநுர துல்சர 77, கவிந்து எதிரிவீர 72*, சமீன் கந்தனராச்சி 71, தரிந்து சிறிவர்தன 2/52

களுத்துறை நகர கழகம் – 202 (71.1) – சவன் கன்கானம்கே 43, யசித் ரூபசிங்க 39, நிபுன கமகே 32, ரகு சர்மா 6/56, சந்துன் மதுஷங்க 2/19

முடிவு – காலி கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 13 ஓட்டங்களால் வெற்றி


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் முவர்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 249 (76.4) – லசித் அபேரட்ன 73, கமிந்து மெண்டிஸ் 59, மினோத் பானுக 41, பிரவீன் ஜயவிக்ம 3/71, மிலான் ரத்நாயக்க 2/24, திலங்க உதேஷன 2/29, தீசன் விதுஷன் 2/52

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 215 (56.3) – ரமேஷ் மெண்டிஸ் 89, பபசர வதுகே 37, மிலான் ரத்நாயக 24, சொனால் தினூஷ 8/67

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 269 (80.2) – வனிந்து ஹஸரங்க 56, சொனால் தினூஷ 34, நிமேஷ குணசிங்க 28, ரமேஷ் மெண்டிஸ் 6/65, பிரவீன் ஜயவிக்ரம 2/60

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 241/8 (55) – மொஹமட் சமாஸ் 59, சொஹான் டி லிவேரா 47, பசிந்து சூரியபண்டார 41, ரமேஸ் மெண்டிஸ் 36*, வனிந்து ஹஸரங்க 4/73, சொனால் தினூஷ 3/65

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் NCC கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 353 (96.4) – அஞ்சலோ ஜயசிங்க 123, ஜடின் சக்சேனா 111*, அஷேன் சில்வா 25, லசித் எம்புல்தெனிய 4/132, அஷேன் டேனியல் 2/63

NCC கழகம் – 364 (106.3) – சந்துன் வீரக்கொடி 150, சஹன் ஆரச்சிகே 110, லஹிரு உதார 40, உபுல் இந்திரசிறி 5/143, தனுஷ்க சந்தருவன் 3/67

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்  – 271/9 (62) – அஞ்சலோ ஜயசிங்க 55, உமேஷ் லக்ஷான் 44. லசித் எம்புல்தெனிய 6/121

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

இராணுவ விளையாட்டுக் கழகம் – 471/9d (116.5) – ஷெஹான் பெர்னாண்டோ 166, கிஹான் கோரலகே 113*, துலின டில்ஷான் 111, மஹேஷ் குமார 22, சலன டி சில்வா 4/72

பதுரெலிய விளையாட்டுக் கழகம் – 230 (68.3) – ரமீஸ் அலாம் 51, சாஹித் மன்சூர் 46, லக்ஷான் எதிரிசிங்க 4/51, கௌமால் நாணயக்கார 4/77

பதுரெலிய விளையாட்டுக் கழகம் – 278/7 (78) – சாஹித் மன்சூர் 113, ரமீஸ் அலாம் 66, அநுக் பெர்னாண்டோ 46, அஷான் ரன்திக 2/34, யசோத மெண்டிஸ் 2/37, கௌமால் நாணயக்கார 2/59

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 180 (48.5) – அதீஷ நாணயக்கார 93, மாலிங்க மாலிகஸ்பே 30, சுபுன் லீலாரத்ன 28, சுவத் மெண்டிஸ் 5/49, சஹன் நாணயக்கார 4/66

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 243 (77.2) – ரனித லியனாரச்சி 77, அபிஷேக் லியனாரச்சி 60, நயன பெர்னாண்டோ 51, நவின் கவிகார 6/100

கடற்படை விளையாட்டுக் கழகம் – 302/9d (83) – அதீஷ நாணயக்கார 96, மதுர மதுஷங்க 60, மாலிங்க மாலிகப்சே 49, சுவத் மெண்டிஸ் 3/64, சமிந்த பண்டார 2/67

நுகோகொட விளையாட்டுக் கழகம் – 133 (52.1) – ரனித லியனாரச்சி 72, பெதும் டில்ஷான் 24, நவீன் கவிகார 5/49, அசன்த சிங்கப்புலி 2/04

முடிவு – கடற்படை விளையாட்டுக் கழகம் 106 ஓட்டங்களால் வெற்றி


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 440 (85.4) – உதயவன்ச பராக்ரம 119, மொவின் சுபசிங்க 114, மதுஷான் ரவிசந்தர்குமார் 59, கலன விஜேசிறி 37, இவன்க சன்ஜுல 3/89, நிமேஷ் விமுக்தி 4/151

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 446/9d (142.2) – அபிஷேக் குப்தா 90, லக்ஷான் ரொட்றிகோ 84, பார்த் பல்வத் 73, கோஸான் தனுஷ்க 51*, துலான்ஜன மெண்டிஸ் 5/76, மொவின் சுபசிங்க 2/88

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 152/5d (33.4) – சசிந்து நாணயக்கார 54, ரொஸ்கோ தட்டில் 35*,

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 253 (87) – சிதார கிம்ஹான் 89, நவிந்து விதானகே 66, மொஹமட் வகாஸ் 32, ஷிரான் பெர்னாண்டோ 4/33, ரவீன் டி சில்வா 4/53

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 299 (72.4) – நவோத் பரணவிதான 89, ரொன் சந்திரகுப்த 82, சதீர சமரவிக்ரம 29, இஷித விஜேசுந்தர 4/73, ப்ரமோத் மதுவன்த 2/29

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்  – 169 (63.1) – ப்ரமோம் மதுவன்த 69*, நிபுன் கருணாநாயக்க 35, ரவீன் டி சில்வா 3/64, கவிந்து பத்திரன்னே 2/18

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 125/6 (24.5) – நவோத் பரணவிதான 33, சதீர சமரவிக்ரம 23, லசித் விஜேசுந்தர 2/35, சந்துன் மெண்டிஸ் 2/38

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<