தரவரிசையில் சூர்யகுமார் யாதவை நெருங்கிய இங்கிலாந்து வீரர்

115

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பில் சோல்ட் ஐசிசி வெளியிட்டுள்ள புதிய T20i துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற T20i தொடரில் பில் சோல்ட் அபாரமான இன்னிங்ஸ்களை ஆடியிருந்தார். தொடரை இங்கிலாந்து அணி இழந்திருந்த போதும், மிகச்சிறப்பாக ஓட்டங்களை குவித்திருந்தார்.

>> கண்பார்வைச் சிக்கலுக்கு முகம் கொடுத்த சகீப் அல் ஹசன்

இதில் ஒரு போட்டியில் 119 ஓட்டங்களை விளாசியிருந்த நிலையில் 18 இடங்கள் முன்னேறி தன்னுடைய அதியுயர் மதீப்புட்டு புள்ளியுடன் (802 புள்ளிகள்) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

அதேநேரம் இங்கிலாந்து அணியின் மற்றுமொரு துடுப்பாட்ட வீரர் லியம் லிவிங்ஸ்டன் 27 இடங்கள் முன்னேறி 38வது இடத்தை பிடித்துள்ளதுடன், சகலதுறை வீரர்கள் வரிசையில் மொயீன் அலி 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பந்துவீச்சை பொருத்தவரை இலங்கை அணியின் வனிந்து ஹஸரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோரை முறையே ஐந்தாம் மற்றும் ஆறாம் இடங்களுக்கு பின்தள்ளி மேற்கிந்திய தீவுகளின் சுழல் பந்துவீச்சாளர் ஆகில் ஹொஸைன் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து அணியை பொருத்தவரை ரீஸ் டொப்லே 10வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச T20i தரவரிசையை பொருத்தவரை துடுப்பாட்டத்தில் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சில் ஆதில் ரஷீட் மற்றும் சகலதுறை வீரர்கள் வரிசையில் சகீப் அல் ஹஸன் ஆகியோர் முதலிடங்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<