இம்முறை உலகக் கிண்ணத்திலும் ஹட்ரிக் எடுக்க எதிர்பார்க்கும் லசித் மாலிங்க

294
Lasith Malinga

வயது அதிகரித்துச் செல்கின்ற போதிலும், இலங்கையின் வேகப்பந்து நட்சத்திரமான லசித் மாலிங்கவின் திறமை குறையவில்லை.

தற்போது தனது 35ஆவது அகவையினை கடக்கும் லசித் மாலிங்க ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் பத்து பந்துவீச்சாளர்களில் ஒருவராக வர இன்னும் ஒரு விக்கெட்டினை மாத்திரம் கைப்பற்றவேண்டிய நிலையில் இருக்கின்றார்.

உலகக் கிண்ணத்துக்கு முன் உபாதைகளால் தவிக்கும் இங்கிலாந்து அணி

உலகக் கிண்ணத் தொடருக்கான இங்கிலாந்து…

அவ்வாறு மாலிங்க குறித்த விக்கெட்டினை கைப்பற்றும் போது தனது சக அணி வீரரான  சனத் ஜயசூரியவை பின்தள்ளி ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் தரவரிசையில் பத்தாம் இடத்தினை பெற்றுக் கொள்வார்.

இன்றைய கிரிக்கெட் உலகில் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடித்தரக் கூடிய முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக உள்ள லசித் மாலிங்க, 218 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 322 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் தற்போது நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் 16 விக்கெட்டுக்களை சாய்த்த மாலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியனாக மாற இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கு எதிராக அபார பந்துவீச்சினை வெளிப்படுத்தி முழுமையான பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

இதேநேரம், கடந்த ஓக்டோபர் மாதம் தம்புள்ளையில் இடம்பெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் லசித் மாலிங்க 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறந்த பந்துவீச்சுப் பெறுதியினை வெளிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே மாலிங்கவின் பந்துவீச்சு பாணியினால் துடுப்பாட்ட வீரர்களுக்கு அவரின் பந்தினை தெரிவு செய்து ஆடுவது கடினமாக இருக்கும். கிரிக்கெட் நிபுணர்கள் பல வருடங்கள் லசித் மாலிங்கவின் பந்துவீச்சினை காணொளிகள் மூலம் ஆய்வு செய்த போதிலும் இன்றைய நாட்களிலும் கூட அவரின் யோக்கர் பந்துகளுக்கு துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறுகின்றனர்.

விக்கெட்டுக்களை எடுப்பது ஒருபோதும் கெட்ட விடயமாக அமையாது.”

.பி.எல். போட்டிகளில் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட்டதில் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அது எனக்கு நம்பிக்கையை தந்தது. ஆனால், இங்கே நிலைமைகளும் வேறு, போட்டியின் வடிவமும் வேறு. நான் விக்கெட்டுக்களை கைப்பற்றுவதற்குரிய திறமையினை கொண்டிருப்பதாக நம்புகின்றேன். இது எனக்கு நம்பிக்கையினையும் தரும்.”

இங்கிலாந்தில் விளையாடும் போது எனக்கு பிடித்த விடயம் என்னவெனில் அங்கே நாம் ஒவ்வொரு நிலைமைகளுக்கும் எம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அங்கே உஷ்ணமாகவோ அல்லது குளிராகவோ இருக்கும் போது பந்துவீச்சாளராகிய உங்களது திறமைக்கு உண்மையான சோதனை ஏற்படும்.” என லசித் மாலிங்க இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடர் பற்றி கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டிருந்தார்.

உலகக் கிண்ணத் தொடர்களை பொறுத்தவரையில் லசித் மாலிங்க தனக்கென ஒரு சிறப்பான இடத்தினை ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளார். நடைபெற்று முடிந்த 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் லசித் மாலிங்க தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் நான்கு பந்துகளுக்கு நான்கு விக்கெட்டுக்களை சாய்த்தது இன்றும் உலக சாதனையாக உள்ளது.


அதுமட்டுமின்றி லசித் மாலிங்க 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் கென்ய அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் ஹட்ரிக் சாதனை செய்ததன் மூலம், உலகக் கிண்ண போட்டிகள் வரலாற்றில் இரண்டு தடவைகள் ஹட்ரிக் சாதனை செய்த ஒரேயொரு வீரராகவும் மாறி புதிய மைல்கல்லை நிலைநாட்டியிருந்தார்.

இப்படியான சாதனைகளுக்கு சொந்தக்காரராகிய லசித் மாலிங்க இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரிலும் ஹட்ரிக் சாதனை ஒன்றினை செய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

ஏன்? என்னால் இன்னுமொரு ஹட்ரிக்கினை எடுக்க முடியாது, நான் முயற்சிகளை செய்து வருகின்றேன். (அப்படி எடுக்கப்படும் பட்சத்தில்) அது விஷேடமான ஒன்றாகவும் இருக்கும்.”

இந்நிலையில் இலங்கை அணி, 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரை வெல்லும் நோக்குடன் இளம் வீரர்களையும், அனுபவம் கொண்ட சிலரையும் தமது குழாத்திற்குள் அடக்கியிருக்கின்றது.

இந்த இலங்கை அணி, அர்ஜூன ரணதுங்க தலைமையில் 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரை வென்ற இலங்கை அணியினை முன்னுதாரணமாக கொண்டு இம்முறைக்கான உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ளதாக மாலிங்க குறிப்பிட்டார்.  

இலங்கை அணி தோல்விகளை பெற வரவில்லை – ஜெப்ரி வன்டர்செய்

இலங்கை கிரிக்கெட் அணியின் மணிக்கட்டு சுழல்…

கடந்த காலங்களில் நாம் பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பெரிய வீரர்கள் பலரை கொண்டிருந்தோம். ஆனால், இப்போது இருப்பவர்கள் திறமை கொண்டவர்கள். அதோடு இப்போதிருக்கும் அனைவரும் தங்களது பெயர்களை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள். அதற்காக செய்ய வேண்டிய விடயங்களிலும் அவர்கள் முனைப்புடன் காணப்படுகின்றனர்.

எங்களிடம் இலங்கையில் இருக்கும் 15 சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். அதோடு நாம் அனுபவம் கொண்டவர்களையும், இளம் வீரர்களையும் கலவையாக வைத்திருக்கின்றோம். இவர்கள் அனைவரும் (உலகக் கிண்ணத்திற்காக) தயாராக இருக்கின்றனர்.”

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<