அவுஸ்திரேலியாவில் மீண்டும் களமிறங்கும் தர்ஜினி சிவலிங்கம்!

Victorian Netball League 2023

335

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் முன்னணி வலைப்பந்தாட்ட தொடர்களில் ஒன்றான விக்டோரியன் வலைப்பந்தாட்ட லீக்கின் வெஸ்ட் சிட்டி பல்கோன்ஸ் அணியில் இலங்கையின் முன்னணி வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் இணைக்கப்பட்டுள்ளார்.

விக்டோரியன் வலைப்பந்தாட்ட லீக்கின் முன்னணி அணியான வெஸ்ட் சிட்டி பல்கோன்ஸ், 2009ம் ஆண்டு இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்து 14 தடவைகள் சம்பியனாக முடிசூடியுள்ளது. அதுமாத்திரமின்றி நடப்பு சம்பியனாகவும் இந்த அணி களமிறங்குகின்றது.

இளையோர் தேசிய வலைப்பந்து அணி தெரிவு

விக்டோரியன் வலைப்பந்தாட்ட லீக் தொடரானது புதன்கிழமை (மார்ச் 15) ஆரம்பமாகவுள்ளதுடன் 19 சுற்றுகளாக நடைபெற்று ஆகஸ்ட் 9ம் திகதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

குறிப்பிட்ட இந்த தொடரில் கடந்த ஆண்டு விளையாடியிருந்த இலங்கையின் முன்னணி வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் மீண்டும் களமிறங்கவுள்ளார்.

இலங்கை வலைப்பந்தாட்டத்தில் மாத்திரம் இல்லாமல் சர்வதேச வலைப்பந்தாட்ட போட்டிகளில் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்துவரும் இவர், உலகின் சிறந்த ஷூட்டர் என்ற பெருமையை தக்கவைத்திருக்கிறார்.

இதேவேளை, கடந்த ஆண்டு மாலைத்தீவுகளில் நடைபெற்ற விளையாட்டு விருது வழங்கும் விழாவில் மதிப்புமிக்க ‘ஸ்போர்ட்ஸ் ஐகொன்’ விருதினை இவர் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் சிட்டி பல்கோன்ஸ் அணி போட்டி அட்டவணை

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<