இரண்டாம் வார வெற்றியையும் பதிவு செய்த பார்சிலோனா, ரியல் மட்ரிட் அணிகள்

139

லா லிகா கால்பந்து சுற்றுப் போட்டிகளின் இரண்டாம் வார நிறைவில் ரியல் மட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் தொடராக பெற்ற வெற்றிகளின் மூலம் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. எதிரணியினரின் அரங்கில் நடைபெற்ற இவ்வார போட்டியில் இரு அணியினரும் வெற்றி பெற்றுள்ளனர்.

ரியல் வெலாடோலிட் எதிர் பார்சிலோனா

ரியல் வெலாடோலிட் அணியின் அரங்கமான ஸ்டாடியோ ஜோஸே ஸோரில்லா அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

நியூகாஸிலின் ஓன் கோலால் செல்சிக்கு தொடர்ந்து மூன்றாவது வெற்றி

நியூகாஸில் யுனைடெட் அணி கடைசி நேரத்தில் பெற்றுக் …

போட்டியை ஆரம்பித்த பார்சிலோனா அணி முதல் 5 ஆம் நிமிடத்திலே எதிரணிக்கு சவால் விடுத்தது. இதன்போது ஓஸ்மானே டேம்பளே கோலை நோக்கி உதைந்த பந்து கோல் கம்பங்களிற்கு மேலால் சென்றது.

அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கெதிராக ரியல் வெலாடோலிட் அணி பல முயற்சிகளை எடுத்த போதும் பார்சிலோனா அணியின் கோல் காப்பாளரான டெர் ஸ்டேர்ஐன் அவற்றை சிறப்பாக தடுத்தாடினார்.

தொடர்ந்து போட்டியை ஆக்கிரமித்த பார்சிலோனா அணிக்கு 42 ஆம் நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பின் போது லியொனல் மெஸ்ஸி உதைந்த பந்து கோலுக்கு அருகாமையால் சென்றது. இதனால், இரு அணிகளும் எந்த வித கோல்களும் பெறாத நிலையில் முதல் பாதி நிறைவுற்றது.

முதல் பாதி: ரியல் வெலாடோலிட் 0 – 0 பார்சிலோனா

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 12 நிமிடங்களின் பின்னர் பார்சிலோனா அணியின் முன்களத்தில் நிலவிய சிறந்த பந்துப் பரிமாற்றத்தினால் அவ்வணிக்கு ஒஸ்மானே டேம்பளே மூலம் முதல் கோல் பெறப்பட்டது.

UEFA யின் சிறந்த வீரர் விருதிற்கு தெரிவாகியுள்ள வீரர்கள்

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஓன்றியமான …

போட்டியை சமப்படுத்த முயன்ற ரியல் வெலாடோலிட் அணியினர் சிறந்த பந்து பரிமாற்றங்களை எதிரணியின் எல்லையில் நிகழ்த்திய போதும் அவை சிறப்பாக பார்சிலோனா அணியினரால் தடுத்தாடப்பட்டன. போட்டியின் 76 ஆம் நிமிடத்தில் ரியல் வெலாடோலிட் அணியினருக்கு கோலிற்கான சிறந்த வாய்ப்பு ஓன்று கிட்டிய போதும் கோல் நிலையில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை.

இறுதியாக பார்சிலோனா அணியினர் பெற்ற ஒரு கோலின் மூலம் ரியல் வெலாடோலிட் அணி போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

முழு நேரம் ரியல் வெலாடோலிட் 0 –  1பார்சிலோனா

ஜிரோனா எதிர் ரியல் மட்ரிட்

கடந்த பருவகால இறுதியில் ஜிரோனா அணியின் அரங்கில் இரு அணிகளும் சந்தித்த இறுதிப் போட்டியில் ரியல் மட்ரிட் அணி தோல்வியுற்ற நிலையில் இப்பருவகாலத்திற்கான லா லிகா சுற்றுப் போட்டியின் ஆரம்பத்திலே மீண்டும் இவர்கள் பலப்பரீட்சை நடாத்தினர்.

ரியல் மட்ரிட் அணியின் மத்திய களத்தில் நிலவிய முறையற்ற பந்து பரிமாற்றத்தின் பின்னர் ஜிரோனா அணியின் முன்கள வீரரான பொர்ஹா கார்ஸியா மூலம் அவ்வணிக்கான முதல் கோல் போட்டியின் 16 ஆம் நிமிடத்தில் பெறப்பட்டது.

ரியல் மட்ரிட் அணியினர் சற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் வேளையில் எதிரணி வீரர்கள் விடும் தவறை பயன்படுத்தி ஜிரோனா அணியினர் ரியல் மட்ரிட் அணிக்கு சவால் விடுக்கும் வண்ணம் விளையாட ஆரம்பித்தனர். எனினும், அவற்றை ரியல் மட்ரிட் அணியின் கோல் காப்பாளர் கெய்லர் நவாஸ் சிறப்பாக தடுத்தாடினார்.

காணொளிகளைப் பார்வையிட  

ஆட்டத்தின் 39ஆம் நிமிடத்தில் ரியல் மட்ரிட் அணியினருக்கு கிடைக்கப் பெற்ற பெனால்டி வாய்ப்பின் போது அணித் தலைவர் ஸர்ஜியோ ராமோஸ் மூலம் ஒரு கோல் பெறப்பட்டது. அத்துடன் போட்டி சமனுற்ற நிலையில் முதல் பாதி நிறைவுற்றது.

முதல் பாதி ஜிரோனா 1 – 1 ரியல் மட்ரிட்

இரண்டாம் பாதி ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்களுக்குள் கிடைக்கப் பெற்ற பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்தி ரியல் மட்ரிட் அணியின் முன்கள வீரரான கரீம் பென்ஸிமா அவ்வணியை போட்டியில் முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து இஸ்கோ மற்றும் க்ரேத் பேலுக்கு இடையில் நிலவிய சிறந்த பந்துப் பரிமாற்றத்தினால் போட்டியின் 59 ஆம் நிமிடத்தில் க்ரேத் பேல் மூலம் மூன்றாவது கோலும் மட்ரிட் அணிக்கு பெறப்பட்டது.

தொடராக இரண்டு கோல்கள் பெறப்பட்ட நிலையிலும் சளைக்காது பல முயற்சிகளை எதிரணியின் எல்லையில் இருந்து ஜிரோனா அணி வீரர்கள் மேற்கொண்டனர். எனினும், கெய்லர் நவாஸின் வேகமான பந்துத் தடுப்பாட்டத்தை தாண்டி எந்த வித கோலையும் அவ்வணி வீரர்களால் பெற முடியவில்லை.

நிறைவில் கரீம் பென்ஸமா மூலம் பெறப்பட்ட நான்காவது கோலின் காரணமாக ஜிரோனா அணி ரியல் மட்ரிட் அணியிடம் 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

முழு நேரம் ஜிரோனா 1 – 4 ரியல் மட்ரிட்

மேலும் சில போட்டி முடிவுகள்

கெடாவெய் 2 – 2 ஏய்பர்   

லெகனேஸ் 2 – 2 ரியல் ஸொஸிடட்

அலவெஸ் 0 – 0 ரியல் பெடிஸ்

அட். மட்ரிட் 1 – 0 ராயோ வெலக்கேனோ

ஸ்பான்யோல் 2 – 0 வெலன்ஸியா

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…