ஸ்டோக்ஸின் தீர்மானத்தால் வேதனையடைந்த ஸ்டுவர்ட் ப்ரோட்

604
Getty Image

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டிக்கான இறுதி பதினொருவர் அணியில் தேர்வு செய்யப்படாதது மிகுந்த வேதனை அளித்ததாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஸ்டுவர்ட் ப்ரோட் தெரிவித்திருந்துடன், அப்போது ஓய்வு பெற்றுவிடலாமா என்று எண்ணியதாகவும் கூறியுள்ளார். 

117 நாட்களுக்குப் பிறகு கடந்த 8ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகியது. இந்த தொடரில் 2க்கு1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது

டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான 34 வயதுடைய ஸ்டுவர்ட் ப்ரோட் சேர்க்கப்படாத நிலையில், இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வி கண்டது

குறிப்பாக, சொந்த மண்ணில் நடைபெற்ற 51 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய அவருக்கு முதல்தடவையாக இங்கிலாந்து அணியில் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை

இதனிடையே, 2ஆவது மற்றும் 3ஆவது போட்டிகளில் அணியில் சேர்க்கப்பட்ட ஸ்டுவர்ட் ப்ரோட் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

அத்துடன், டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டி சாதனையும் படைத்தார். முன்னதாக, இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ்ன்டர்சன் இந்த சாதனையை புரிந்த நிலையில், இரண்டாவது வீரராக இந்த சாதனையை ஸ்டுவர்ட் ப்ரோட் நிகழ்த்தினார்

Video – IPL எதிர் LPL…! எது கெத்து? |Sports RoundUp – Epi 125

இதுஇவ்வாறிருக்க, முதலாவது டெஸ்ட் போட்டியில் தான் அணியில் சேர்க்கப்படாததால்ய்வை அறிவித்து விடலாமா என்று தான் தொடர்ந்து யோசித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரித்தானியாவின் டெய்லி ஊடகத்திற்கு ப்ரோட் கருத்து தெரிவிக்கையில், முதல் போட்டியில் நான் அணியில் இல்லை என்று தெரிந்தவுடன் மிகவும் சோர்ந்து போனேன். அனைத்து வீரர்களும் மைதானத்தில் சென்று விளையாடியபோது நான் ஹோட்டல் அறையில் இருந்தது எனக்கு மிகவும் வேதனையைக் கொடுத்திருந்தது

இதையடுத்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விடலாமா என்ற எண்ணமும் எனக்கு தோன்றியது. முன்னதாக இதுபோன்ற சூழல்களை சந்தித்திருந்தாலும் ஓய்வு அறிவிக்கும் எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை. அந்த நேரத்தில் எடுத்த சரியான முடிவு. உண்மையில் அதற்காக விவாதிக்க முடியாது.

டெஸ்ட் தரவரிசையில் முதல் மூன்றுக்குள் நுழைந்த ஸ்டுவர்ட் ப்ரோட்

எனினும், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நான் விளையாடவில்லை என்று தற்காலிக தலைவராக செயற்பட்ட பென் ஸ்டோக்ஸ் என்னிடம் சொன்னபோது, என் உடல் நடுங்குவதை உணர்ந்தேன். என்னால் பேசமுடியவில்லை” என அவர் தெரிவித்தார்.

இதனிடையே கொவிட் – 19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக உருவாக்கப்பட்ட உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருந்து கொண்டு விளையாடுவதென்பது மிகவும் கடினமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்

”நீங்கள் உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும்போது, நீங்கள் கிரிக்கெட் மைதானத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் ஒரு அறையில் இருக்கும்போது, மைதானத்திலேயே நீங்கள் எழுந்திருப்பீர்கள்.

நீங்கள் முழு நேரமும் கிரிக்கெட் வீரர்களால் சூழப்பட்டிருக்கிறீர்கள், எல்லாமே கிரிக்கெட்டாகும், பிறகு கிரிக்கெட் என்பது வாழ்க்கையாகவே மாறிவிடும்” என குறிப்பிட்டார்

கிரிக்கெட் உலகக் கிண்ண சுபர் லீக்கில் இங்கிலாந்துக்கு முதல் தொடர் வெற்றி

தற்போது 501 விக்கெட்டுகளை பெற்றுள்ள ஸ்டுவர்ட் ப்ரோட், அதிக டெஸ்ட் விக்கெட்டுக்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் ஜேம்ஸ்ண்டர்சனுக்கு (589) பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளார்.

”எனக்கு 600 விக்கெட்டுக்கள் கிடைக்குமா? நிச்சயமாக என்னால் முடியும் என்று நினைக்கிறேன். ஜிம்மிக்கு (ஜேம்ஸ்) 35 வயதாக ஒரு மாதம் இருக்கும் போது தான் அவர் 500 விக்கெட்டுக்களை எடுத்தார். எனக்கு 34 வயதாக ஒரு மாதம் இருக்கும் போது தான் 500 விக்கெட் மைல்கல்லை எட்டினேன்

ஜிம்மி இப்போது 600 விக்கெட்டுக்கள் மைல்கல்லை தொடும் தூரத்தில் இருக்கிறார். எனவே டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட்டுகளை நோக்கி என்னுடைய சாதனை பயணம் தொடரும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க