2018 உலகக் கிண்ணத்தின் கதைகள்

193

குரோஷியாவுடனான பரபரப்பான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை சூடிக்கொள்ள, 21 ஆவது பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் முடிவுக்கு வந்தது.

உலகின் மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி புதிய நட்சத்திரங்களின் பிறப்பு, அற்புதமான கதைகள் மற்றும் தமது திறமைகளால் உலகளவில் பிரபலமடையும் வீரர்களை கொண்டதாக அமைவது வழக்கம். இவ்வாறு 2018 ரஷ்யாவில் கவர்ந்திழுத்த சில கதைகளை பார்ப்போம்,

ஐஸ்லாந்தின் எழுச்சி

செர்கியோ அகுவேரா பெனால்டி எல்லைக்குள் விழ, நடுவர் பெனால்டி கிக் சமிக்ஞை செய்கிறார். சந்தேகமின்றி உலகின் மிகச் சிறந்த வீரரான லியோனல் மெஸ்ஸி அந்த பெனால்டி வாய்ப்பை உதைக்க தயாரானார். மெஸ்ஸி இடது பக்கமாக உதைத்தார், கோல்காப்பாளர் ஹான்ஸ் ஹல்டேரசன் வலது பக்கம் என கணித்து பாய, மெஸ்ஸியின் உதை தடுக்கப்பட, அது ஆர்ஜன்டீனாவின் முன்னேற்றத்தையும் தடுத்தது.

கால்பந்து போட்டியின் பாதிநேரம் அமைதிக்காத்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள்

இத்தாலியில் நடைபெற்று வரும் சீரி ஏ கால்பந்தாட்ட தொடரில் ஜியனோ மற்றும்…

2016 ஆம் ஆண்டிலேயே உலகின் மிகச்சிறிய நாடாகா ஐரோப்பாவில் இருந்து ஐஸ்லாந்து உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது. அப்போது குரோஷியா, உக்ரைன் மற்றும் துருக்கி அணியுடனான போட்டியை சமநிலை செய்தே ரஷ்யா வரை செல்ல அது தன்னை தகுதியாக்கிக் கொண்டது.  

2016 ஐரோப்பிய கிண்ணத்தில் காலிறுதிவரை முன்னேறிய அந்த அணி மேலும் நம்பிக்கை தருவதாகவே உலகக் கிண்ணம் வரை முன்னேறியது.

Image Courtesy – Getty Images

வெறுமனே 330,000 மக்கள் தொகை கொண்ட அந்த நாடு, 2016 ஐரோப்பிய கிண்ணத்தில் சம்பியனான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்த்துக்கல் அணிக்கு அந்த தொடரில் சவால் கொடுத்ததோடு, இங்கிலாந்தையும் அந்தத் தொடரில் வெளியேற்றி உலகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தது.  

உலகக் கிண்ண குழுநிலையில் தனது குழுவில் கடைசி இடத்தை பெற்றாலும், 2012 ஆம் ஆண்டு உலகத் தரவரிசையில் 131 ஆவது இடத்தில் இருந்த ஐஸ்லாந்து இப்படி எழுச்சி பெறும் என்று யார் நம்பினார்கள்? அதன் சிறந்த காலம் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது.

தந்தையைப் போல் மகன்

1998, ஜுன் 24 ஆம் திகதி டென்மார்க் கோல்காப்பாளர் பீட்டர் ஸ்ச்மைகல் வலைக்கு முன்னால் பெரும் அரணாக நின்றிருந்தார். எதிரே பிரான்ஸின் யூரி ஜோர்கைப் அந்த பெனால்டி வாய்ப்பை கொண்டு பிரான்ஸை முன்னிலை பெறச் செய்ய எதிர்பார்த்தார். தனது எதிராளியை விடவும் ஸ்ச்மைகல் உயரமாக இருந்தார்.

என்றாலும் ஜோர்கைப் வேகமாக உதைக்க பந்து ஸ்ச்மைகலை மீறி வலைக்குள் சென்றது. அப்போது உலக சம்பியனான பிரான்ஸ் கடைசி குழுநிலை போட்டியில் 1-0 என முன்னிலை பெற்றது. அந்தப் போட்டியில் பிரான்ஸ் 2-0 என வென்றது.

SAFF கிண்ண தொடருக்கான இலங்கை கால்பந்து குழாம் அறிவிப்பு

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை பங்களாதேஷில்….

வேகமாக முன்னோக்கி வந்ததால் 2018, ஜூலை முதலாம் திகதி மற்றொரு மத்தியகள வீரர் பெனால்டி உதை ஒன்றுக்கு காத்திருந்தார். இப்போது அந்த உதைக்கு தயாரானவர் லூகா மொட்ரிக், டென்மார்க்குடனான 16 அணிகள் மோதும் சுற்று போட்டியின் மேலதிக நேரத்தில் குரோஷியா இந்த தீர்க்கமான தருணத்தை எதிர்கொண்டது. இந்த தருணத்தில் ஸ்ச்மைகல் தனது மகனான டென்மார்க் கோல்காப்பளர் கெஸ்பரை பரபரப்போடு பார்த்துக் கொண்டிருந்தார். மொட்ரிக் பந்தை உதைக்க அவர் இடது பக்கமாக பாய்ந்தார், தடுத்துவிட்டார்.

Image Courtesy – @aakashbhatt97 Twitter Photo

ரசிகர்கள் தன்னிலை மறந்து ஆரவாரித்தார்கள். கஸ்பர் இரண்டு பெனால்டி ஷூட் அவுட்களை தடுத்தபோதும் கடைசியில் குரேஷியா 3-2 என வெற்றியை தன்வசமாக்கியது.

என்ன கூறுவதென்று தெரியவில்லை. எனது நாடு, எனது மகன், அவனது சக அணி வீரர்கள், அனைத்து ஊழியர்கள் மற்றும் தேசிய பயிற்சியாளர் ஏஜ் ஹரெய்ட் பற்றி அதிகம் பெருமை கொள்கிறேன். அனைத்து கண்ணீரும் வற்றிவிட்ட பின் நாம் எத்தனை சிறப்பாக ஆடினோம் என்பதை புரிந்துகொண்டோம்என்கிறார் பீட்டர் ஸ்ச்மைகல்.     

ஹர்வஜே கஸ்டிக் நினைவாக

உலகக் கிண்ணத்தின் 16 அணிகள் சுற்றில் டென்மார்க் மற்றும் குரோஷிய அணிகள் சந்தித்தபோது, நடந்த அளவுக்கு பரபரப்பு தரும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. முதல் ஐந்து நிமிடத்திற்குள் 2 கோல்கள் புகுத்தப்பட, மேலதிக நேரத்தின் கடைசி 5 நிமிடங்களில் பெனால்டி தடுக்கப்பட, அனைவரையும் இருக்கை நுணிக்கு எடுத்துச் சென்ற பெனால்டி ஷூட் அவுட்டில் முடிவு தீர்மானிக்கப்பட்டது.

கஸ்பர் ஸ்ச்மைகல் டென்மார்க் அணிக்காக தனது அனைத்து முயற்சிகளையும் செய்தபோதும் அவரையும் மீறி எதிரணி கோல்காப்பாளர் டனிஜல் சுபசிக் மூன்று பெனால்டிகளை தடுக்க குரோஷியாவுக்கு 3-2 என வெற்றி உறுதியானது.   

உலகக் கிண்ணத்தினால் உலகையே ஈர்த்த நாயகர்கள்

ரியெல் மெட்ரிட் வாழ்வை முடித்து ஜுவண்டஸுடன் இணைந்தார் ……..

33 வயதுடைய சுபசிக் கடைசி பெனால்டி ஷூட் அவுட்டை தடுத்து குரோஷியாவின் வெற்றியை உறுதி செய்தபின் தனது ஜெர்சியை கழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். உள்ளே அவர் அணிந்திருந்த டீசேர்ட்டில் அறிமுகம் இல்லாத கால்பந்து வீரர் ஒருவரின் புகைப்படம் இருந்தது. அந்த வீரரின் பெயர் ஹர்வஜே கஸ்டிக். அவர் சுபசிக்கின் முன்னாள் சக அணி வீரர். அவர் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு சோகமான நிகழ்வில் உயிரிழந்தார்.

2008 மார்ச் 29 ஆம் திகதி என்.கே. சதார் அணி தனது சொந்த மைதானத்தில் எச்.என்.கே. சிபாலியா அணியை எதிர்த்தாடியது. இலக்கு இல்லாமல் வந்த பந்தை பெற்ற சதார் கோல்காப்பாளர் சுபசிக் தனது சக வீரரை நோக்கி நீண்ட தூரம் உதைத்தார்.

Image Curtesy – Getty image

துள்ளி வரும் பந்து கோட்டுக்கு வெளியே செல்வதற்கு முன் அதனை பெறுவதற்கு ஹர்வஜே கஸ்டிக் அதனை நோக்கி ஓடி வந்தார். ஆனால் தடுக்கி விழுந்த அவர் கொன்க்ரீட் சுவரில் தலை பட்டு மைதானத்திற்கு வெளியே தூக்கி எறியப்பட்டார். விபத்து நிகழ்ந்து ஐந்து தினங்களில் அவர் உயிரிழந்தார்.  

பத்து ஆண்டுகள் கழித்து அந்த பந்தை உதைத்த நண்பர், உலகக் கிண்ணத்தின் முக்கியமான வெற்றித் தருணத்தில் அவரை நினைவுகூர தவறவில்லை.   

அந்தப் போட்டிக்குப் பின்னர் வெளியேறி விட்டடேன். அமெரிக்கா சென்றபோது உறக்கம் இன்றி தடுமாறினேன், பயணக்களைப்பு வேதனை தந்தது. நான் விழித்தெழும் ஒவ்வொரு நேரமும், இருண்ட பொழுதாக இருக்கும். என்ன நடந்தது என்று ஞாபகத்திற்கு வரும், நான் ஏன் அவனுக்கு பந்தை செலுத்தினேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன், ஏன் நடுவே செலுத்தவில்லை. நான் அப்படி செய்திருந்தால் ஒருவேளை அப்படி ஏற்பட்டிருக்காது. அது நடக்க வேண்டும் என்று விதியா? எனவே, அது தொடக்கம் நான் எப்போதும் எனது மேலாடைக்கு கீழால் அவனது படத்தை அணிந்திருக்க தீர்மானித்தேன். எனது கால்பந்து வாழ்வின் ஒவ்வொரு போட்டியிலும் அதனை செய்வேன். சதாரில் அதனை நான் செய்தேன். ஹஜ்துக் ஸ்பிலிட்டுக்கு, இப்போது சம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பிய லீக்கில் மொனாகோவுக்கு, தொடர்ந்து ரஷ்யாவிலும் நான் அதனை செய்தேன்என்கிறார் டனிஜல் சுபசிக்.

கால்பந்தில் ஆபாச பார்வையை காண்பிக்க முயற்சிக்கும் கெமராக்கள்

நேரடி கால்பந்து ஒளிபரப்புகளின்போது அழகான பெண்களை காண்பிப்பது……

கோல்களை தடுத்த நாடோடி

அலிரேசா பெய்ரதன்வாண்ட் ஈரானின் லோரஸ்தான் மாகாணத்தின் லரபியாவில் 1993 ஆம் அண்டு நாடோடி குடும்பம் ஒன்றில் பிறந்தவர். தனது மூத்த மகனுக்கு கால்பந்து சரிப்பட்டு வராது என்று நம்பிய அவரது தந்தை கால்பந்தை விட்டுவிட்டு உருப்படியாக வேலைக்குச் செல்லும்படி ஒரே நச்சரிப்பார். குடும்பத்தின் தொந்தரவால் கால்பந்தை விட்ட அலிரேசா நல்ல வாழ்வை தேடி தலைநகர் டெஹ்ரானுக்கு புறப்பட்டு வந்தார்.  

அலிரேசாவுக்கு தலைநகரில் வாழ்வது இலகுவாக இருப்பவில்லை. உண்பதற்குக் கூட வழியில்லாத நிலையில் பெரும்பாலான நேரங்களில் தெருவோரங்களிலும், தான் வேலை பார்க்கும் இடங்களிலுமேயே உறங்க வேண்டி ஏற்பட்டது. அந்த சிறுவன் ஆடைத்தொழிற்சாலை, கார் கழுவும் இடம், வீதியை கூட்டுபவனாகக் கூட இருந்திருக்கிறான்.   

என்றாலும் ஈரானிய கால்பந்து ஆட்டத்தில் படிப்படியாக முன்னேறிய அவர் கடைசியில் 2015 ஆம் ஆண்டு ஈரானின் முதல்நிலை கோல்காப்பளராக மாறிவிட்டார். 12 போட்டிகளில் எதிரணிக்கு எந்த கோலும் விட்டுக்கொடுக்காத அலிரேசா ஈரான் உலகக் கிண்ண போட்டிக்காக ரஷ்யா செல்ல உதவினார்.     

Image Courtesy – Getty image

அவரது இந்த கதையை மறக்கமுடியாமல் செய்யும் வகையில் போர்த்துக்கல்லுடனான உலகக் கிண்ண குழுநிலை ஆட்டம் இருந்தது. வீடியோ உதவி நடுவர் மூலம் போர்த்துக்கல்லுக்கு பெனால்டி வழங்கப்பட கிறிஸ்டியானோ ரொனால்டோ அதனை உதைக்க தயாரானார்.  

ஏற்கனவே கோல் பெற்றிருந்த ரொனால்டோ மேலும் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த எதிர்பார்த்தபோதும் அவர் உதைத்த பந்தை அலிரேசா தடுத்து தனது அணியின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டார்.

ஜோன் ஒபி மிகேலின் மன உறுதி

உலகக் கிண்ணம் கடைசி கட்ட குழுநிலை போட்டிகளை எதிர்கொண்டபோது, தமக்கு பாரிய சவால் இருப்பதை நைஜீரியா புரிந்துகொண்டது. 16 அணிகள் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் அந்த அணி லியோனல் மெஸ்ஸி மற்றும் செர்கியோ அகுவேரோ போன்ற வீரர்கள் இருக்கும் அணியை வீழ்த்த வேண்டும்.

தெருவில் வாழ்ந்து உலகக் கிண்ண வீரராக வந்தவரின் கதை

நான்கு ஆண்டுகளுக்கு முன் 2014 உலகக் கிண்ணத்தில் நைஜீரிய அணிக்கு எதிராக…..

அந்த சவாலில் வெற்றிபெற வேண்டும் என்றால் நைஜீரிய அணியின் தலைவரும் மத்தியகள வீரருமான ஜோன் ஒபி மிகேல் சோபிப்பது அவசியம். ஆர்ஜன்டீன அணியை மெஸ்ஸி முன்னிலை பெறச் செய்ய விக்டர் மோஸஸின் பெனால்டி ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மார்கோஸ் ரோஜோவின் கோல் நைஜீரியாவை உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற்றியது.

போட்டி ஆரம்பிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் தனது தந்தை கடத்தப்பட்டிருப்பது பற்றி போட்டிக்கு பின்னரே மிகேல் கூறினார். கடத்தல்காரர்கள் மீட்புப் பணம் கேட்டிருப்பதோடு அது பற்றி வெளியே கூறினால் தந்தையை சுட்டுவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்கள்.

அந்த செய்தி பெரும் அதிர்ச்சியை தரக்கூடியது, மிகேல் அது பற்றி மௌனமாக இருந்து போட்டிக்கு முன்னர் தனது அணியினருக்கு அழுத்தம் கொடுக்காமல் தவிர்த்துக் கொண்டார். நைஜீரியா அந்தப் போட்டியில் 2-1 என தோற்றபோதும் மிகேலின் தந்தையை நைஜீரிய பொலிஸாரால் பாதுகாப்பாக மீட்க முடிந்தது.

Image Coutesy – Getty image

நான் கலக்கமடைந்திருந்தேன், போட்டியில் ஆடுவதற்கு உளரீதியாக நான் தயாராக இருக்கிறேனா என்ற முடிவை எடுக்க வேண்டி இருந்தது. நான் குழப்பம் அடைந்திருந்தேன். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, 180 மில்லியன் நைஜீரியர்களை கைவிட முடியாது என்பது எனக்குத் தெரியும். எனது நாட்டை முதன்மைப் படுத்தி சிந்தனையை ஒருநிலைப் படுத்தினேன். முக்கியமான போட்டியை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் இதுபற்றி பயிற்சியாளருடனும் (கெர்னொட் ரோஹ்ர்) பேசி அணியினரின் நினைப்பை திசை திருப்ப நான் விரும்பவில்லைஎன்றார் ஜோன் ஒபி மிகேல்.       

சர்தார் அகதி முகாமில் இருந்து தங்கப் பந்து வரை

மைதானத்தில் களைப்பில்லாமல் ஆடிய லூகா மொட்ரிச் உலகக் கிண்ணத்தில் தங்கப் பந்து விருதை தட்டிச் சென்றார். டியாமோ சக்ரப்பில் இருந்து ரியல் மெட்ரிட் வந்து தொடர்ச்சியாக மூன்று சம்பியன்ஸ் லீக் பட்டங்களுக்குப் பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மொட்ரிச்சின் பயணம் சர்தாரில் இருக்கும் அகதி முகாமில் இருந்து நெடுந்தூரம் கொண்டது. அவரது பயணம் அந்த அகதி முகாமில் இருந்தே ஆரம்பமானது.   

FA கிண்ண 64 அணிகள் சுற்றின் போட்டி விபரம்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த….

1990களின் ஆரம்பத்தில் குரோஷிய சுதந்திரப் போர் வெடித்தபோது இடம்பெயர்ந்த பல வீரர்களும் குரோஷிய அணியில் உள்ளனர். அவர்களில் இவான் ரகிடிக், மரியோ மொன்ட்சுகிக் மற்றும் டேஜான் லவ்ரேன் போன்ற வீரர்களும் அடங்குகின்றனர். செர்பியப் படை முன்னேறி வந்தபோது ஆபத்தில் இருந்து தப்ப மொட்ரிச்சின் குடும்பம் கூட சர்தார் அகதி முகாமில் அடைக்கலம் பெற்றது. மொட்ரிச்சின் தாத்தா கூட போரில் கொல்லப்பட்டார்.  

உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிவரை முன்னேறி அதில் தோற்று ஏமாற்றம் கண்டாலும் மொட்ரிச் இத்தனை தூரம் வந்த அவரது பயணம் வேதனைகள் நிரம்பியது.    

 

தொண்டு செய்யும் அதிசய சிறுவன்

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கோல் பெற்ற இரண்டாவது பதின்ம வயது வீரர் என்ற சாதனையுடன் கைலியன் ம்பாப்பே தலை நிமிர்ந்தபடியே உலகக் கிண்ணத்தை முடித்தார். இவ்வாறு கோல் புகுத்திய முதலாமவர் பிரேசில் ஜாம்பவான் பீலே என்பது ம்பாப்பேவின் புகழை அதிகரிக்க மற்றொரு காரணம். எதிரணி தற்காப்பு அரணை முறியடித்து பந்தை வேகமாக எடுத்துச் செல்லும் அவரது ஆட்டத்திறமை உலகக் கிண்ணத்தில் அனைவராலும் கவரப்பட்டது.     

ரொமெலு லுகாகுவின் வீட்டில் இப்போது எலிகள் இல்லை

‘எனது தாய் குளிர்சாதனப் பெட்டிக்கு அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தது ….

அந்த 19 வயது வீரர் போட்ட கோல் குரோஷியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் வென்று பிரான்ஸ் இரண்டாவது முறை உலகக் கிண்ணத்தை முத்தமிட பெரிதும் உதவியது.  

அவரது ஆட்டத்திறமைக்கு அப்பால் தனது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் சக வீரர் நெய்மார் போன்று மைதானத்தில் கீழே விழுந்து நாடகமாடுவது விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த விமர்சனங்களுக்கு அப்பால் அந்த பதின்ம வயது வீரர் உலகக் கிண்ணத்தில் தான் சம்பாதித்த பணத்தை பிரிமியர் டி கோர்டீ என்ற தொண்டு அமைப்புக்கு கொடுத்துவிட்டார். இந்த தொண்டு அமைப்பானது நோய்வாய்ப்பட்ட மற்றும் வலது குறைந்த சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி தொண்டு செய்கிறது. அந்த நற்பணியில் ம்பாப்பேவும் 2017 ஜுன் தொடக்கம் ஈடுபட்டு வருகிறார்.    

ம்பாப்பே உலகக் கிண்ணத்தில் ஒவ்வொரு போட்டியிலும் 22,534 டொலர்களை ஈட்டியதாக கணிக்கப்படுகிறது. இது மேலதிக கொடுப்பனவுகளை தவிர்த்த தொகை மாத்திரமே. பிரான்ஸ் வெற்றிபெற்றதற்காக அவர் மேலும் 351,000 டொலர்களை மேலதிக கொடுப்பனவாக ஈட்டியுள்ளார்.   

ஜப்பானின் முன்மாதிரி

உலகக் கிண்ணத்தில் ஜப்பான் தனது முதல் போட்டியில் கொலம்பியாவை சந்தித்தபோது அந்த போட்டி நெருக்கடி கொண்டதாக இருக்கும் என்று நம்பியபோதும் கொலம்பியாவுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜப்பான் சிறப்பாக ஆடிய போட்டியை வென்றது.

போட்டிக்கு பின்னர் அரங்கில் இருந்த ரசிகர்கள் அங்கே இருக்கும் குப்பைகளை அகற்றுவதை பார்க்க முடிந்தது. இது முதல்முறையாக இருக்கவில்லை, குழுநிலை போட்டிகள் முழுவதிலும் இதனை காண முடிந்தது. ஜப்பான் அணி தோற்ற பெல்ஜியத்துடனான ஆடத்திலும் அந்த ரசிகர்கள் தனது பண்பை விட்டுவிடவில்லை.

இது ஜப்பான் ரசிகர்களோடு மாத்திரம் நின்றுவிடவுமில்லை, அந்த அணி வீரர்களும் அந்த பணியை செய்வதை புகைப்படம் காட்டுகிறது. ஜப்பான் நட்சத்திர வீரர்களும் தமது உடைமாற்று அறையை சுத்தமாக்கிவிட்டுச் செல்வதோடு மாத்திரமன்றி தம்மை உபசரிக்கும் ரஷ்யாவுக்கு நன்றி கூறும் குறிப்பை எழுதிவிட்டுச் செல்கிறார்கள்.  

டொட்டன்ஹாமிடமும் தோற்று தடுமாறும் மன்செஸ்டர் யுனைடெட்

லூகாஸ் மௌரோவின் இரட்டை கோல் மூலம் மன்செஸ்டர் யுனைடெட் அணியை….

தோல்விக்கு பின்னர் வேகமாக அரங்கிலிருந்து வெளியேறினால் ஜப்பானியர்களை யாரும் திட்டமாட்டார்கள். ஆனால் அந்த வீரர்கள் மைதானத்தில் தொடர்ந்து இருந்தார்கள், பலரும் நின்று ஊடகங்களுக்கு பேட்டிகளையும் வழங்கினார்கள்.

கிரிஸ்மனும் உருகுவேயர்களும்

உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு பின்னர் அன்டோனியோ கிரிஸ்மன் ஊடக சந்திப்பில் பங்கேற்றார். ஆனால் அவர் தனது உடலில் போர்த்தி இருந்த தேசிய கொடி பிரான்ஸ் உடையதாக இருக்கவில்லை.

கிரிஸ்மன் உருகுவேயை விரும்புகிறார் என்பது தெரிந்தது. காலிறுதியில் பிரான்ஸ் அணி உருகுவேயை சந்தித்தபோது கிரிஸ்மன் இரண்டு கோல்களை போட்டு பிரான்ஸ் அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். என்றாலும் அவர் அந்த போட்டியில் அதிகம் உணர்ச்சி பூர்வமாக வெற்றியை கொண்டாடவில்லை.

கிரிஸ்மன் 2005இல் ரியல் சொசிடாட் இளையோர் அணிக்கு தனது கால்பந்து வாழ்வை ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி, 2009இல் தொழில்சார் கால்பந்தில் பங்கேற்று, பின்னர் 2014இல் அட்லடிகோ அணியில் இணைந்தார். உருகுவே நாட்டு பயிற்சியாளர் மார்டின் லசார்ட்டே கிரிஸ்மனின் திறமையைக் கண்டு நேராக முதல்தர அணியில் கார்லோ புயினேவுடன் ஆடச் செய்தார். சொசிடாட் அணியில் இந்த இருவருமே கிரிஸ்மனின் கால்பந்து வாழ்வில் அதிகம் தாக்கம் செலுத்துபவர்களாக இருந்தனர்.    

அட்லடிகோவில் கிரிஸ்மனுடன் ஒன்றாக ஆடும் உருகுவேயின் பின்கள வீரர் டியாகோ கொடினை, தனது மகளின் வழிகாட்டியாகவே அவர் கருதுகிறார்.  

குரோஷியாவை வீழ்த்தி இரண்டாவது தடவையாக உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ்

குரோஷிய அணியுடனான விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் 4-2 என்ற கோல்கள்…

நான் அதிகம் கொண்டாடவில்லை ஏனென்றால் எனது கால்பந்து வாழ்வை ஆரம்பித்தது தொடக்கம் கால்பந்தில் நல்லது, கெட்டது பற்றி ஒரு உருகுவே நாட்டவர் தான் எனக்குக் கற்றுத் தந்தார். நான் உருகுவேயர்களை அதிகம் மதிக்கிறேன். நான் நண்பர்களுக்கு எதிராகவும் ஆடியிருக்கிறேன். எனவே, அது சாதாரணமான ஒன்று என்றும், கொண்டாட வேண்டியதல்லை என்றும் நான் நினைக்கிறேன்என்கிறார் அன்டோனியோ கிரிஸ்மன்.

தத்தெடுத்த நாட்டுக்கு எதிரான உதை

உலகக் கிண்ண போட்டிகளில் டெனிஸ் செரிசேவ் என்ற பெயர் ரசிகர்களுக்கு அதிகம் பரீட்சயம் இருக்காது. ஜூலை 15 ஆம் திகதி வந்தபோது அந்தப் பெயர் அறிமுகமானது, குறிப்பாக சவூதி அரேபியா மற்றும் எகிப்து அந்தப் பெயரை வேதனையுடன் நினைவில் வைத்திருக்கிறது.   

செரிசேவ் 1990 டிசம்பரில் நிஸ்னி நொவ்கொரோட்டில் பிறந்தார். ரஷ்ய அணியின் மத்தியகள வீரரான அவர் 5 வயதில் ஸ்பெயினுக்கு இடம்பெயர்ந்தார். அவரின் தந்தை 1996 ஆம் அண்டு ஸ்போடிங் கிஜோன் அணிக்கு ஒப்பந்தமானதே அவர் ஸ்பெயின் செல்லக் காரணம். அது தொடக்கம் அங்கு வாழ்ந்த காலத்தில் செரிசேவ், ரியெல் மெட்ரிட் கால்பந்து அகடமியில் இணைந்து தன்னை பாதி ஸ்பானியனாக மாற்றிக் கொண்டார்.

16 அணிகள் சுற்று வந்தபோது ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது செரிசேவுக்கு உணர்வுபூர்வமானதாக இருந்தது. அந்தப் போட்டியில் 120ஆவது நிமிடத்தில் பெனால்டி ஷூட் அவுட்டுக்காக கோல் கம்பத்திற்கு அருகில் வந்தபோது செரிசேவுக்கு ஒரே ஒரு நோக்கம் தான் இருந்திருக்க வேண்டும். எப்படியாவது பந்தை வலைக்குள் புகுத்த வேண்டும் என்பதுவே அவரது இலக்காக இருந்திருக்கும். அவர் அதனைச் செய்து ரஷ்யாவை 4-3 என முன்னிலைக்கு கொண்டுவந்தார். இதனைத் தொடர்ந்து இயாகோ ஆஸ்பாஸின் உதையை ரஷ்ய கோல்காப்பாளர் தடுத்ததை அடுத்து ரஷ்யா உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னேறியது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<