மேற்கிந்திய முத்தரப்புத் தொடரிலிருந்து ஹேஸ்டிங்ஸ் விலகல்

174
Australia v India
@Getty Images

10 போட்டிகளைக் கொண்ட அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆபிரிக்கா அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்புக் கிரிக்கட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை மேற்கிந்தியத் தீவில் நடைபெறவுள்ளது.

இத்தொடரில் பங்குகொள்ளும் அவுஸ்திரேலியா அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோன் ஹேஸ்டிங்ஸ் கணுக்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக வெளியேறியுள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டித் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த ஜோன்  ஹேஸ்டிங்ஸ் பயிற்சியின் போது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டிருந்தமையால் ஐ.பி.எல் தொடரின் ஆரம்பத்திலேயே தாய்நாட்டிற்கு திரும்பிச் சென்றிருந்தார். இந்நிலையில் மேற்கிந்திய முத்தரப்புக் கிரிக்கட் தொடரிற்கு ஜோன் ஹேஸ்டிங்ஸிற்குப் பதிலாக அவரது விக்டோரியா அணியின் சக வீரர், இவ்வருட ஆரம்பத்தில் இந்திய அணிக்கெதிராக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஸ்கொட் பொலண்ட் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொடருக்கு முன் அவுஸ்ரேலிய அணியில் ஏற்படும் மாற்றம்

அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்ஆபிரிக்கா அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்புக் கிரிக்கட் தொடர் போட்டிகள் பற்றிய அட்டவணை

ஜூன் 3 – தென் ஆபிரிக்கா எதிர் மேற்கிந்திய தீவுகள்

ஜூன் 5 – அவுஸ்திரேலியா  எதிர் மேற்கிந்திய தீவுகள்

ஜூன் 7 – தென் ஆபிரிக்கா எதிர் அவுஸ்திரேலியா

ஜூன் 11 – தென் ஆபிரிக்கா எதிர் அவுஸ்திரேலியா

ஜூன் 13 – அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள்

ஜூன் 15 – அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள்

ஜூன் 19 – தென் ஆபிரிக்கா எதிர் அவுஸ்திரேலியா

ஜூன் 21 – அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள்

ஜூன் 24 – தென் ஆபிரிக்கா எதிர் மேற்கிந்திய தீவுகள்

ஜூன் 26 – இறுதிப் போட்டி

மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்