ஸாஹிரா சுப்பர் 16 தொடரின் சம்பியனாகியது சென். ஜோசப் கல்லூரி

70

கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவத் தலைவர்களின் ஏற்பாட்டில் 15வது தடவையாக நடைபெற்ற அணிக்கு 7 பேர்கொண்ட 16 முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான (Zahira Super 16 Soccer 7’s 2020) கால்பந்து தொடரின் சம்பியனாக சென். ஜோசப் கல்லூரி முடிசூடியுள்ளது.  

கொரோனாவினால் இலங்கையின் விளையாட்டுத் துறையில் ஏற்பட்ட மாற்றம்

சீனாவில் உருவாகி, இன்று உலகையே………………

கொழும்பு கேட்வே கல்லூரி மற்றும் சென். ஜோசப் கல்லூரி அணிகளுக்கு இடையிலான கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தய திடல் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

இரண்டு அணிகளும் ஆரம்பத்திலிருந்து தோல்வியுறாத அணிகளாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்ததுடன், இறுதிப் போட்டியில் த்ரில் வெற்றியை தக்கவைத்த சென். ஜோசப் கல்லூரி 1-0 என வெற்றியை தனதாக்கியது. 

தொடரில் ஆரம்பத்திலிருந்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய சென். ஜோசப் கல்லூரி வீரர் செனால் சந்தேஷ் தொடரின் மிகச்சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டதுடன், இறுதிப் போட்டியில் கோலடித்து அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த காவிந்த ரூபசிங்க இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகவும், சிறந்த கோல் காப்பாளருக்கான விருதினை கேட்வே கல்லூரியின் டுவைன் டி மெல்லும்  பெற்றுக்கொண்டார்.

தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஸாஹிரா கல்லூரி மற்றும் புனித தோமியர் கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  இரண்டு அணிகளும் கோல்களை பெறத்தவறிய நிலையில், பெனால்டி ஷுட்-அவுட் வழங்கப்பட்டது. இதில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் புனித தோமியர் அணி வென்று, 3வது இடத்தை பிடித்துக்கொண்டது. 

சிறையில் பிறந்த நாள் கொண்டாடிய ரொனால்டினோவுக்கு சக வீரர்கள் வாழ்த்து

பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர்…………………

சென். ஜோசப் கல்லூரி அணி தங்களுடைய நொக்-அவுட் போட்டிகளில் கந்தானை டி மெசனோட் கல்லூரி மற்றும் கல்கிஸை புனித தோமியர் கல்லூரி அணிகளை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்ததுடன், கேட்வே கல்லூரி அணி காலிறுதிப் போட்டியில் புனித பெனடிக் கல்லூரியை 3-0 என வீழ்த்தியதுடன், அரையிறுதியில் ஸாஹிரா கல்லூரி அணியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியிருந்தது.

ப்ளேட் சம்பியன்ஷிப் 

ப்ளேட் சம்பியன்ஷிப்புக்கான இறுதிப் போட்டியில் கொழும்பு புனித பெனடிக் கல்லூரி அணியை வீழ்த்திய நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லுரி அணி குறித்த பிரிவில் சம்பியனாக முடிசூடியது.

கிண்ணத்துக்கான காலிறுதிச் சுற்றிலிருந்து தோல்வியடைந்த அணிகள், ப்ளேட் சுற்றுக்கான போட்டிகளில் மோதியிருந்தன. இதில், மாரிஸ் ஸ்டெல்லா அணி, கந்தானை டி மெசனோட் கல்லூரியை 2-1  என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி ப்ளேட் சுற்றின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், புனித பெனடிக் கல்லூரி அணி, யாழ்ப்பாணம் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணியை 3-2 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

போவ்ல் சம்பியன்ஷிப்

போவ்ல் சம்பியன்ஷிப்புக்கான இறுதிப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி அணியை 2-0 என்ற பெனால்டி கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்ற வெஸ்லி கல்லூரி அணி சம்பியனாகியது.

கொரோனா வைரஸும் கால்பந்து உலகும்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின்………………

தொடரின் குழுநிலை போட்டிகளின் போது, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடிக்கும் அணிகள் போவ்ல் சம்பியன்ஷிப்புக்கான பலப்பரீட்சையில் ஈடுபட்டன. இதில், வெஸ்லி கல்லூரி அணி, கின்னியா அல் அக்ஸா தேசிய பாடசாலையை 2-1 கோல்கள் கணக்கில் வீழ்த்தியதுடன், றோயல் கல்லூரி அணி, அலீத்யா சர்வதேச கல்லூரியை 1-0 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. 

கேடயத்துக்கான சம்பியன்ஷிப்

கேடயத்துக்கான இறுதிப் போட்டியில் கொழும்பு இந்து கல்லூரி அணிக்கு எதிரான போட்டியை 1-0 என வெற்றிக்கொண்ட இசிபத்தன கல்லூரி சம்பியனாக முடிசூடியது.

குழுநிலையில் கடைசி இடங்களை பிடித்துக்கொள்ளும் அணிகள் கேடயத்துக்கான சம்பியன்ஷிப்பில் பலப்பரீட்சை நடத்தின. இதில், தங்களுடைய கேடயத்துக்கான பயணத்தில் கம்பளை ஸாஹிரா கல்லூரியை  1-0 என வீழ்த்திய இசிபத்தன கல்லூரி அணி சம்பியனாகியதுடன், டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய இந்துக் கல்லூரி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

>>மேலும் கால்பந்து செய்திகளை படிக்க <<