உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023: இலங்கைக்கு 13 டெஸ்ட் போட்டிகள்

World Test Championship - 2023

329

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சியின்) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்துக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஒருநாள், T20 கிரிக்கெட்களுக்கு இணையாக டெஸ்டை பிரபலப்படுத்தத் தீவிரமாக முயற்சி செய்துவந்த ஐசிசி, இறுதியில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை அறிமுகம் செய்தது

2019ஆம் ஆண்டு ஆரம்பமாகிய .சி.சியின் அங்குரார்ப்பண டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தூக்கியது

தவறுகளை திருத்திக்கொண்டு ஒருநாள் தொடரில் களமிறங்கும் இலங்கை

இந்த நிலையில், தற்போது 2021-2023ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது

டெஸ்ட் விளையாடும் 9 நாடுகளும் தலா 6 தொடர்களில் ஆட வேண்டும், ஒவ்வொரு அணியும் மூன்று முறை உள்நாட்டிலும், மூன்று முறை வெளிநாட்டிலும் விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றிபெற்று அதிக புள்ளிகள் பெரும் முதல் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

கிக்கெட் உலகின் பிக் 3 என அழைக்கப்படுகின்ற இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர்களை தங்களுக்கு இடையே ஆட மற்ற அணிகளுகு 3 டெஸ்ட்கள் கொண்ட தொடர் அல்லது 2 டெஸ்ட்கள் கொண்ட தொடர்கள் வழங்கப்பட்டுள்ளமை எப்படி அந்த அணிகள் இறுதிக்கு முன்னேற முடியும் என்ற கேள்வி எழுகிறது.

புதிய வீரர்கள் வரிசையில் வனிந்து ஹஸரங்க முன்னேற்றம்

இதனிடையே, இரண்டாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்து 21 டெஸ்ட் போட்டிகளிலும், இந்தியா 19 டெஸ்ட் போட்டிகளிலும், அவுஸ்திரேலியா 18 டெஸ்ட் போட்டிகளிலும், தென்னாபிரிக்கா 15 போட்டிகளிலும் விளையாடவுள்ளன.

நடப்பு டெஸ்ட் உலக சம்பியனான நியூசிலாந்து அணி 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடும். மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகள் 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடும்

அதேபோல, பாகிஸ்தான் அணி 14 டெஸ்ட் போட்டிகளில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் விளையாடும். இதனிடையே, பங்களாதேஷ் அணிக்கு 6 தொடர்கள் இருந்தாலும் ஒரு தொடருக்கு 2 டெஸ்ட் போட்டிகள்தான் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

UAE மற்றும் ஓமானுக்கு மாற்றப்பட்ட ICC T20I உலகக் கிண்ணம்

எதுஎவ்வாறாயினும், இந்தியாஇங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பட்டௌடி கிண்ணத்துக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 4ஆம் திகதி ஆரம்பமாகிறது. இதன்மூலம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது அத்தியாயம் ஆரம்பமாகுகின்றன.

இந்த நிலையில், இலங்கை அணி விளையாடவுள்ள டெஸ்ட் தொடர்கள் பற்றிய முழுமையான விபரங்களைப் பார்ப்போம்.

2021 டிசம்பர்இலங்கை அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணம்

அட்டவணையின்படி, இலங்கை அணிக்கு முதல் தொடரே வெளிநாட்டு மண்ணில்தான். பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி பங்கேற்று விளையாட உள்ளது

2022 பெப்பரவரிஇலங்கை அணியின் இந்தியா சுற்றுப்பயணம்

பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடர் நடைபெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி இந்தியா செல்லவுள்ளது. இந்தத் தொடர் IPL தொடருக்கு முன் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஜுன்அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணம்

அடுத்த வருடம் ஜுன் மாதம் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது.

2022 ஜுலைபாகிஸ்தான் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 

ஜுலை மாதத்தில் பாகிஸ்தான் அணி, இலங்கை வந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடும்.

2022 ஒக்டோபர்மேற்கிந்திய தீவுகளின் இலங்கை சுற்றுப்பயணம்

இதனைத் தொடர்ந்துக்டோபர்நவம்பர் மாதங்களில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாடும். இலங்கை அணி தனது சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் கடைசி டெஸ்ட் தொடர் இதுவாகும்.

2022 நியூசிலாந்துஇலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம்

கடைசியாக நியூசிலாந்து செல்லும் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.

இதேவேளை, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இரண்டாம் தொடருக்கான இறுதிப் போட்டி மற்றும் இடங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…