இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் தலைவரான பந்துல வர்ணபுர தனது 68ஆவது வயதில் மரணமடைந்திருக்கின்றார்.
நீரிழிவு நோயின் அதிக தாக்கத்திற்கு ஆளாகிய பந்துல வர்ணபுர கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், முன்னதாக அவரின் வலது கால் அகற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், நீரிழிவு நோயினால் தொடர்ந்து அவதிப்பட்ட பந்துல வர்ணபுர சிகிச்சைகள் எதுவும் பலனின்றி உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
ஸ்கொட்லாந்து அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த பங்களாதேஷ்
1981ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட பின், இலங்கை டெஸ்ட் அணியினை அதன் முதல் போட்டியில் தலைமை தாங்கிய பந்துல வர்ணபுர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும், இலங்கை கிரிக்கெட் நிர்வாக உறுப்பினராகவும் பணி புரிந்திருக்கின்றார்.
கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் போது ஆரம்பத் துடுப்பாட்டவீரராகவும், வேகப் பந்துவீச்சாளராகவும் செயற்பட்ட பந்துல வர்ணபுர 1979ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் மன்செஸ்டரில் இந்திய அணியினை இலங்கை வீழ்த்துவதற்கு முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் ஓமான் அபார வெற்றி
இதேநேரம் கொழும்பு நாலன்த கல்லூரியின் முன்னாள் மாணவரான பந்துல வர்ணபுர கிரிக்கெட் வீரராக இருந்த போது இலங்கை அணிக்காக மொத்தம் 04 டெஸ்ட் போட்டிகளிலும், 12 ஒருநாள் போட்டிகளிலும் பங்கெடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<