இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முதலாவது தலைவி மரணம்

852

இலங்கை சார்பாக சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடியவரும், இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முதலாவது தலைவியுமான சின்தியா ரஸ்குய்னோ (Cynthia Rasquinho) இன்று (19) காலமானார்.

1940ஆம் ஆண்டு முதல் இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் வீராங்கனை, பயிற்சியாளர், போட்டி மத்தியஸ்தர் மற்றும் வலைப்பந்தாட்ட நிர்வாகத்தில் முக்கிய ஒரு நபர் என பல பதவிகளை வகித்த அவர் உயிரிழக்கும் போது வயது 91 ஆகும்.

கொழும்பு-03 மெதடிஸ்ட் கல்லூரியின் பழைய மாணவியான அவர், பாடசாலை காலம் முதல் முன்னணி வீராங்கனைகளில் ஒருவராக வலம்வந்தார். அதன்பிறகு அதே கல்லூரியின் விளையாட்டுப் பயிற்சியாளராகவும் செயற்பட்டார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை விபத்தில் மரணம்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையும், இலங்கை கிரிக்கெட்…

இதன்காரணமாக, மெதடிஸ்ட் கல்லூரி அணி, 1944 ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் சம்பியன் பட்டத்தையும், 1956இல் அகில இலங்கை வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தையும் அந்தக் கல்லூரி பெற்றுக் கொண்டது.

சென்னையில் உள்ள “YMCA’s Physical Education Training College” இல் மேலதிக கல்வியை மேற்கொண்ட அவர், 1944ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரை பம்பலப்பிட்டிய புனித கன்னியாஸ்திரிகள் மடத்திள் “St.Bridget’s” மெய்வல்லுனர் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகளின் பயிற்சியாளராக பணிபுரிந்தார்.

அதிலும் குறிப்பாக, குறித்த பாடசாலையில் வலைப்பந்தாட்ட விளையாட்டை அறிமுகப்படுத்தவும் முக்கிய காரணமாக சின்தியா ரஸ்குய்னோ இருந்தார்.

1956ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கெதிரான வலைப்பந்தாட்டத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை அணியின் தலைவியாக நியமிக்கப்பட்ட அவர், இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முதலாவது தலைவி என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டார்.

புதிய பயிற்சியாளரை தேடும் இலங்கை வலைப்பந்து அணி

இலங்கை வலைப்பந்து சம்மேளனம் (NFSL) தற்போது வெற்றிடமாகியுள்ள, இலங்கை வலைப்பந்து…

இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டில் மிகப் பெரிய சேவையாற்றிய அவர், 1957இல் “Shamrocks”  விளையாட்டுக் கழகத்தை அறிமுகம் செய்திருந்ததுடன், 1950 தசாப்பதத்தின் இடைப்பட்ட காலப்பகுதி மற்றும் 1960 தசாப்தத்தின் முற்பகுதியில் அந்த விளையாட்டுக் கழகமானது பல தேசிய மட்ட சம்பியன் பட்டங்களை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பாடசாலைகள் வரலாற்றில் ஒரு பயிற்சியாளராக பல சேவைகளை ஆற்றிய அவர், 1976 ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக செயற்பட்டார். இதில் குறிப்பாக 1983இல் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் பங்குபற்றிய இலங்கை அணியையும் அவர் சிறந்த முறையில் பயிற்றுவித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனையடுத்து 1994இல் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவியாக நியமிக்கப்பட்ட அவர், மேல் மாகாண வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவராகவும், அதன் தலைவியாகவும் இருந்தார்.

2021இல் இலங்கை வலைப்பந்தாட்டத்துக்கு அதிக போட்டிகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் தடைப்பட்டுள்ளன…

அதுமாத்திரமின்றி, இலங்கை வலைப்பந்தாட்ட மத்தியஸ்தர்கள் சம்மேளனத்தின் உறுப்பினராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.

இலங்கையின் விளையாட்டுத்துறையில் மிகவும் தன்னலமற்ற ஒருவராக வலம்வந்த சின்தியா ரஸ்குய்னோ அம்மையார், தனது வாழ்நாளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எந்தவொரு ஊதியத்தையும் பெற்றுக்கொள்ளாமல் தனது சேவையை வழங்கியிருந்ததுடன், வலைப்பந்தாட்ட விளையாட்டையும், அதில் விளையாடுகின்ற வீரர்களின் எதிர்காலம் குறித்தும் பல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருந்தார்.

எனவே, இந்நாட்டின் மெய்வல்லுனர் மற்றும் வலைப்பந்தாட்ட விளையாட்டுகளின் வளர்ச்சியில் மிகப் பெரிய சேவையை ஆற்றிய சின்தியா ரஸ்குய்னோ எப்பொழுதும் எமது மனதில் நிலைத்து இருப்பார்.

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் திலகா ஜினதாச இராஜினாமா

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாச தனது பதவியை இராஜினமாச்…

அவரின் குடும்பத்தாருக்கு எமது இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான பிரார்த்தனை செய்கின்றது.

 மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க