உலக ஸ்னூக்கர் போட்டியில் இலங்கையின் மொஹமட் இர்ஷாத்

100

தேசிய ஸ்னூக்கர் (Snooker) சம்பியனான மொஹமட் தாஹா இர்ஷாத், அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான உலக ஸ்னூக்கர் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பினை இலங்கையில் இருந்து பெற்றிருக்கின்றார்.

இந்த ஆண்டின் ஜூலை மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த உலக ஸ்னூக்கர் விளையாட்டுப் போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை இர்ஷாத் தாஹா கட்டாரில் ஒழுங்கு செய்யப்பட்ட IBSF உலக ஸ்னூக்கர் சம்பியன்ஷிப் தொடரில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்தின் மூலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாலைதீவின் ‘Sports Icon’ விருதை வென்ற சனத், தர்ஜினி

கனிஷ்ட, சிரேஷ்ட பிரிவுகளில் இலங்கையின் ஸ்னூக்கர் மற்றும் பில்லியார்ட் (Billiard) சம்பியனாக காணப்படுகின்ற இர்ஷாத், கட்டாரில் நடைபெற்றிருந்த 21 வயதின் கீழ்ப்பட்ட போட்டியாளர்களுக்கான உலக ஸ்னூக்கர் சம்பியன்ஷிப் தொடரிலும் அடுத்தடுத்த வெற்றிகளுடன் இலங்கையின் நாமத்தினை உலகறியச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக பிலியார்ட் மற்றும் ஸ்னூக்கர் சம்மேளத்தினால் (IBSF) ஒழுங்கு செய்யப்பட்ட 21 வயதின் கீழ்ப்பட்ட போட்டியாளர்களுக்கான உலக ஸ்னூக்கர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை, தாய்லாந்து, ஈரான், இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, எகிப்து, சவூதி அரேபியா, ஆஸ்திரியா, சிரியா, ஜேர்மனி மற்றும் கட்டார் போன்ற முன்னணி நாடுகளின் 18 போட்டியாளர்கள் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<