கொழும்பு ஸாஹிரா ரக்பி அணியின் புதிய தலைவராக முஅம்மர் டீன்

153
Zahira Appoint new captain

நடைபெறவுள்ள 2018ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள கொழும்பு ஸாஹிரா கல்லூரி ரக்பி அணியின் புதிய தலைவராக முஅம்மர் டீனை கல்லூரி ரக்பி நிர்வாகம் நியமித்துள்ளது.

கடந்த 3 வருடங்களாக ஸாஹிரா கல்லூரி ரக்பி அணியில் அங்கம் வகித்து அவ்வணிக்காக விளையாடி வந்த முஅம்மர் டீன், 5.9 அடி உயரத்தையும், 86 கிலோ கிராம் நிறையையும் கொண்டவர். அது போன்றே முன்வரிசை வீரராக 8ஆம் இலக்கத்தில் விளையாடுகின்ற அதிரடி வீரராகவும் அவர் விளங்குகிறார்.

மேலதிக புள்ளியுடன் பொலிஸ் அணியை வீழ்த்திய இராணுவம்

கழகங்களுக்கு இடையிலான டயலொக் ரக்பி லீக் தொடரின்..

இந்நிலையில், அவ்வணியின் துணைத் தலைவராக 5.10 அடி உயரத்தைக் கொண்ட மற்றுமொரு அனுபவமிக்க வீரரான மின்ஹாஜ் சம்சுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். ஸாஹிரா ரக்பி அணிக்காக மத்திய வரிசையில் அதிரடியாக விளையாடுகின்ற இவர், கடந்த 3 வருடங்களாக பாடசாலையின் வர்ண விருதையும் தட்டிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த பருவகாலத்துக்கான பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி தொடர் மற்றும் 2016இல் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான சுப்பர் 7 ரக்பி தொடரிலும் அபாரமாக விளையாடி முன்னிலை அணியாக வலம்வந்த அக்கல்லூரியானது அனைவரது கவனத்தையும், கௌரவத்தையும் பெற்றுக்கொண்டது.

எனவே, இளம் வீரர்களைக் கொண்ட ஸாஹிரா ரக்பி அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் பொறுப்பு அனுபவமிக்க வீரர்களான முஅம்மர் டீனுக்கும், மின்ஹாஜ் சம்சுதீனுக்கும் வழங்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் பருவகாலம் அக்கல்லூரிக்கு சவால்மிக்கதாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.