ஸுபைர் ஹம்சாவின் உதவியுடன் தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணிக்கு மீண்டும் வெற்றி

220

ஸுபைர் ஹம்சாவின் தொடரும் பிரகாசத்தால் இலங்கை அபிவிருத்தி அணியினருக்கு தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணியினர் அதிர்ச்சியைக் கொடுத்தனர்.

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணிக்கும் இலங்கை அபிவிருத்தி அணியினருக்கும் இடையில் இடம்பெற்ற 7வது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணியினர் 50 ஓவர்கள் முடிவில் 248 ஓட்டங்களைக் குவித்தனர். தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணி சார்பாக அதிகபட்ச ஓட்டமாக ஸுபைர் ஹம்சா 67 ஓட்டங்களையும் மற்றும் தோமஸ் கபார் 38 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அபிவிருத்தி அணியின் சார்பாகப் பந்து வீச்சில் அனுக் பெர்னாண்டோ 35 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும், அமில அபோன்சோ 38 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும், பிரியமல் பெரேரா 36 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அபிவிருத்தி அணியினரை, தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணியினர் 42.1 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழக்கச்செய்து 182 ஓட்டங்களுக்குள் சுருட்டி கதிகலங்க வைத்தனர். இலங்கை அபிவிருத்தி அணி சார்பாக ரமேஷ் புத்திக 48 ஓட்டங்களையும், சந்தூண் வீரக்கொடி 37 ஓட்டங்களையும் பெற்றனர். தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணி சார்பாகப் பந்து வீச்சில் கெய்த் துஜான் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும், டிலனோ பொடிகேட்டர் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணி – 248/7 (50) ஸுபைர் ஹம்சா 67, தோமஸ் கபார் 38, சோலோ நிகியூனி 31*, அனுக் பெர்னாண்டோ 1/35, அமில அபோன்சோ 1/38, பிரியமல் பெரேரா 1/36

இலங்கை அபிவிருத்தி அணி – 184 (42.1) ரமேஷ் புத்திக 48, சந்தூண் வீரக்கொடி 37, சதீர சமரவிக்கரம 28, கெய்த் துஜான் 3/27, டிலனோ பொடிகேட்டர் 2/22, சோலோ நெக்வெனி 1/14

தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணி 64 ஓட்டங்களால் வெற்றியடைந்ததுடன் ஆட்டநாயகனாக ஸுபைர் ஹம்சா தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்