அஷான் பிரியஞ்சன் சகலதுறையிலும் அசத்த இலங்கை A அணிக்கு இலகு வெற்றி

179

பங்களாதேஷ் A அணியுடன் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் அஷான் பிரயஞ்சனின் சகலதுறை ஆட்டத்தால் இலங்கை A அணி 7 விக்கெட்டுகளினால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது. 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் A அணி, லங்கை A அணியுடன் நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி வருகின்றது.

பெதும், சங்கீத்தின் சிறந்த துடுப்பாட்டத்தோடு சமநிலையடைந்த இரண்டாவது டெஸ்ட்

சுற்றுலா பங்களாதேஷ் A கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை A அணிகளுக்கு…

இவ்விரண்டு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற 2 போட்டிகளைக் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் சமநிலையில் நிறைவுக்கு வந்தது. இந்த நிலையில், இலங்கை Aபங்களாதேஷ் A அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (09) கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் A அணி முதலில் துடுப்பெடுத்தாடியது

இதன்படி, பங்களாதேஷ் A அணி தங்களுடைய முதல் விக்கெட்டினை 8 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நியாம் ஷேக் (02) ஷிரான் பெர்னாண்டோவின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.

பின்னர் சயிப் ஹசனுடன் நஜ்முல் ஹொசைன் இணைந்தார். இருவரும் 2ஆவது விக்கெட்டுக்காக நிதானமாக ஆடி 44 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக் கொண்டனர்.

இதில் நஜ்முல் ஹொசைன் 24 ஓட்டங்களை எடுத்திருந்தபோது சாமிக்க கருணாரத்னவின் பந்துவீச்சில் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார்

>>Photos: Bangladesh A tour of Sri Lanka 2019 | 1st Unofficial ODI<<

தொடர்ந்து வந்த இனாமுல் ஹக் 5 ஓட்டங்களுடன் மீண்டும் சாமிக்க கருணாரத்னவின் பந்துவீச்சில் வெளியேற, 32 ஓட்டங்களை பெற்று ஓரளவு நம்பிக்கை கொடுத்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சயிப் ஹசன் அமில அபோன்சோவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார்

இதைத் தொடர்ந்து அஷான் பிரியஞ்சன் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் சுழல் பந்துவீச்சில் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர். விக்கெட் சரிவுக்கு மத்தியில் போராடிய மொஹமட் மிதுன் (21 ஓட்டங்கள்) அஷான் பிரியஞ்சனின் பந்துவீச்சில் அமில அபோன்சோவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்

தொடர்ந்து வந்த ஆரிபுல் ஹக் (5), அபூ ஹைதர் (1), மெஹெடி ஹசன் மீராஸ் (0) மற்றும் அபூ ஜெயிட் (0) ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, பங்களாதேஷ் A அணி 33.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.  

பங்களாதேஷ் A அணியில் அதிகபட்சமாக சயிப் ஹசன் 32 ஓட்டங்களையும், நஜ்முல் ஹொசைன் 24 ஓட்டங்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் இலங்கை A அணி சார்பில் அணித் தலைவர் அஷான் பிரயஞ்சன் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, சாமிக்க கருணாரத்ன மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்

பின்னர், 117 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணிக்கு முதலாவது ஓவரிலே அதிர்ச்சி காத்திருந்தது.  

பங்களாதேஷ் A அணியுடனான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் சதம் மற்றும் அரைச்சதமடித்து அசத்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க ஒரு ஓட்டத்துடன் முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார்

ஆறாவது ஓவரை வீசிய அபூ ஹைதரின் முதல் பந்தில் 16 ஓட்டங்களை எடுத்திருந்த சந்துன் வீரக்கொடி போல்ட் ஆகி வெளியேறினார்

அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ், அணித் தலைவர் அஷான் பிரியஞ்சனுடன் இணைந்தார். இருவரும் இணைந்து ஓரளவு பொறுப்புடன் ஆடினர். 23 ஓட்டங்களை எடுத்த கமிந்து மெண்டிஸ் மெஹெடி ஹசன் மீராஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

எனினும், 4ஆவது விக்கெட்டுக்காக அஷான் பிரியஞ்சனுடன் ஜோடி சேர்ந்த பிரியமால் பெரேரா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இலங்கை A அணி சரிவில் இருந்து மீண்டது

இலங்கை அணிக்கு வர 10 வருடங்கள் காத்திருந்தேன் – பானுக்க ராஜபக்ஷ

இலங்கை தேசிய அணிக்காக விளையாடுவதற்கு சுமார் 10 வருடங்கள்…

இதில் சிறப்பாக விளையாடிய அஷான் பிரியஞ்சன் அரைச் சதமடித்து அசத்த, இலங்கை A அணி 25.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதன்படி, 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற இலங்கை A அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 – 0 என முன்னிலை பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் அபூ ஹைதர், அபூ ஜெயிட் மற்றும் மெஹெடி ஹசன் மீராஸ் ஆகியோரர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்

இவ்விரு அணிகளுக்குமிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை (10) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<