இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் இராஜினாமா

190

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமன்த தேவப்பிரிய உடன் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

முன்னாள் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான தேவப்பிரிய 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதோடு, அவரது ஒப்பந்தக் காலம் இந்த ஆண்டு ஒக்டோபருடன் முடிவடைகிறது.

தாய்லாந்திடம் இலங்கை மகளிர் அணிக்கு அதிர்ச்சித் தோல்வி

மகளிர் ஆசிய கிண்ண டி-20 தொடரில் தாய்லாந்துக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட்டுகளால் அதிர்ச்சி தோல்வியை…

தேவப்பிரியவின் சேவைகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, இலங்கை மகளிர் அணியை முன்னெடுத்துச் செல்வதற்கு SLC (இலங்கை கிரிக்கெட் சபை) புதிய பயிற்சியாளரை பெறுப்பில் அமர்த்தும் செயல்முறையை ஆரம்பித்துள்ளதுஎன்று இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் முடிவுற்ற ஆசிய கிண்ண தொடரில் இலங்கை மகளிர் அணி தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது தொடர்பில் பயிற்சியாளர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.    

ஷஷிகலா சிறிவர்தன தலைமையிலான இலங்கை மகளிர் அணி இம்முறை ஆசிய கிண்ண சம்பியனான பங்களாதேஷ் மகளிர் அணியை வீழ்த்தியபோதும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<