ஆசிய விளையாட்டு விழா நீச்சலில் மெத்யூ அபேசிங்க புதிய தேசிய சாதனை

262
Matthew Abeysinghe

இந்தோனேஷியாவில் நடைபெற்றுவருகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று காலை (19) நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் மெத்யூ அபேசிங்க இலங்கை சாதனையை முறியடித்தாலும் இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை தவறவிட்டார்.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங்கில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. 45 ஆசிய நாடுகள் பங்கேற்றுள்ள இவ்விளையாட்டு விழா நேற்று இரவு (18) மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது.

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஆசிய விளையாட்டு விழா அமர்க்களமாக ஆரம்பம்

உங்களை அன்புடன் வரவேற்கிறோம்…

இந்நிலையில், நீர்நிலைப் போட்டிகளின் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் இன்று காலை ஜகார்த்தாவிலுள்ள கலேரா பங் கர்னோ விளையாட்டரங்கின் நீச்சல் தடாகத்தில் ஆரம்பமாகியது.

இதில் இலங்கை அணியின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்யூ அபேசிங்க, ஆண்களுக்கான 200 மீற்றர் சாதாரண நீச்சல் (Freestyle) போட்டியின் 3ஆவது தகுதிச் சுற்றில் பங்குபற்றியிருந்தார்.

குறித்த போட்டியை 1:50:97 செக்கன்களில் நிறைவுசெய்த மெத்யூ, 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், ஒட்டுமொத்த நிலையில் 12ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை இழந்தார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் மெத்யூ அபேசிங்க, புதிய தேசிய சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கான 200 மீற்றர் நீச்சல் போட்டிகளின் தகுதிச்சுற்று முடிவுகள்

இதேபோட்டிப் பிரிவின் 2ஆவது தகுதிச் சுற்றில் பங்குபற்றிய மற்றுமொரு இலங்கை வீரரான கவிந்திர நுகவெல, 1:56:01 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், ஒட்டுமொத்த நிலையில் 26ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கவிந்திர நுகவெலவுக்கும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆசிய விளையாட்டு விழாவுக்குச் சென்று இந்தோனேஷியாவில் உயர்தரப் பரீட்சை எழுதிய அகலங்க

நீர்நிலைப் போட்டிகளில் இளம் வயதில்…

இதேநேரம், இலங்கை அணியின் மற்றுமொரு நட்சத்திர நீச்சல் வீரரான சிரன்ந்த டி சில்வா, இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் Butterfly நீச்சல் போட்டியில் கலந்துகொண்டார்.

நான்காவது தகுதிச் சுற்றில் கலந்துகொண்ட அவர், போட்டியை 2:05:90 செக்கன்களில் நிறைவுசெய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். எனினும், ஒட்டுமொத்த நிலையில் 14ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட சிரன்ந்த டி சில்வா இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை இழந்தார்.

இதேவேளை, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்டவரும், இந்தோனேஷியாவில் தற்போது உயர்தரப் பரீட்சைக்கு முகங்கொடுத்து வருகின்ற இளம் நீச்சல் வீரருமான அகலங்க பீரிஸ் நாளை (20) காலை ஆண்களுக்கான 50 மீற்றர் பின்நோக்கிய நீச்சல் (Backstroke) போட்டியில் பங்குபற்றவுள்ளார்.

இலங்கை நேரப்படி நாளை காலை 8.59க்கு தனது தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ள அகலங்க பீரிஸ், அதன்பிறகு ஜகார்த்தவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானியர் காரியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட பரீட்சை நிலையத்தில கா.பொ.த உயர்தரப் பரீட்சையின் ஆங்கில மொழி வினாப்பத்திரத்துக்கும் முகங்கொடுக்கவுள்ளார்.

>>காணொளிகளைப் பார்வையிட<<