முதல் T20யில் இலங்கை மகளிர் அணியை போராடி வென்றது பாகிஸ்தான்

405

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் மகளிர் அணி, இன்று (29) நடைபெற்ற இலங்கை மகளிர் அணியுடனான முதலாவது T-20 போட்டியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.

[rev_slider LOLC]

130 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகளை இலங்கை மகளிர்களால் வேகமாக வீழ்த்த முடிந்தபோதும் கடைசி விக்கெட்டுக்கு வந்த குலாம் பாத்திமா கடைசி ஓவரில் பௌண்டரி ஒன்றை பெற்று பாக். அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார்.

இலங்கை மகளிர் அணிக்கு மீண்டும் ‘வைட்வொஷ்’ தோல்வி

பாகிஸ்தான் மகளிர் அணியுடனான மூன்றாவதும்..

பாகிஸ்தானுடனான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை முழுமையாக தோற்ற நிலையிலேயே சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி T20 தொடரில் களமிறங்கியது.

கொழும்பு, SSC மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாக். அணித் தலைவி பிஸ்மாஹ் மஹ்ரூப் இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

இதன்படி ஆரம்ப வீராங்கனை அனுஷ்கா சஞ்சீவ சிறப்பாக துடுப்பெடுத்தாடியபோதும் மறுமுனை விக்கெட்டுகள் மளமளவென்று பறிபோயின. சமரி அத்தபத்து 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு அடுத்து வந்த ஹாசினி பெரேரா மற்றும் இம்கா மெண்டிஸ் ஓட்டம் இன்றியே வெளியேறினர்.

தொடர்ந்து வந்த ரொபெகா வன்டோர்ட் (05) மற்றும் சசிகலா சிறிவர்தனவும் (02) நிலைக்கவில்லை. இதனால் இலங்கை மகளிர் அணி 38 ஓட்டங்களுக்கே முதல் 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

மாகாணங்களுக்கு இடையிலான கிரிக்கெட் திருவிழா புதுப்பொழிவுடன்

இலங்கை அணிக்கு திறமையான வீரர்களை..

எனினும் 6ஆவது விக்கெட்டுக்கு அனுஷ்கா சஞ்சீவனியுடன் ஜோடி சேர்ந்த நிலக்ஷி டி சில்வா 84 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று வலுச் சேர்த்தார். இதன்போது வேகமாக ஆடிவந்த சஞ்சீவனி 58 பந்துகளில் 8 பௌண்டரிகளுடன் 61 ஓட்டங்களை பெற்ற நிலையில் கடைசி ஓவரில் வைத்து ரன் அவுட் ஆனார். இதுவரை 8 T20 போட்டிகளில் ஆடியிருக்கும் சஞ்சீவனியின் அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும். இதற்கு முன்னர் அவர் அதிகபட்சம் 16 ஓட்டங்களையே பெற்றிருந்தார்.

மறுமுனையில்  நிலக்ஷி டி சில்வா 34 பந்துகளில் ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை பெற்றது. மிதவேகப்பந்து வீச்சாளரான டயானா பாயிக் மற்றும் சுழற்பந்து வீராங்கனை சானா மிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணியும் ஓட்டங்கள் பெற போராடியது. 19 ஓட்டங்களுக்கு முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் 3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மிஸ்பாஹ் மஹ்ரூப் மற்றும் ஜவெய்ரியா கான் 60 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று வலுச் சேர்த்தனர்.

சுதந்திரக் கிண்ணத் தொடரில் இலங்கை எந்த உத்தியை தவறவிட்டது?

நடைபெற்று முடிந்த சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T20…

எனினும், 42 ஓட்டங்களை பெற்றிருந்த மிஸ்பாஹ் மஹ்ரூம் ரன் அவுட் ஆனதை அடுத்து ஆட்டம் திசைதிரும்பியது. அடுத்து வந்த வீராங்கனைகள் வந்த வேகத்திலேயே வெளியேறினார்கள். இந்நிலையில் சிறப்பாக ஆடிவந்த ஜவெய்ரியா கானின் விக்கெட்டை சுகன்திக்கா குமாரி வீழ்த்தினார். 36 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 8 பௌண்டரிகளுடன் 52 ஓட்டங்களை பெற்றார்.

ஜவெய்ரியா ஆட்டமிழக்கும்போது பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றி பெற மேலும் 9 ஓட்டங்களையே எடுக்க வேண்டி இருந்தது. எனினும் அதற்குள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்த இலங்கை பந்துவீச்சாளர்களால் முடிந்தது. இதனால் கடைசி விக்கெட்டை காத்துக் கொண்ட பாக். அணியால் ஒரு திரில் வெற்றியை பெற முடிந்தது.

இறுதியில் பாக். மகளிர் அணி 19.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. பந்துவீச்சில் குமாரி 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

முதல் போட்டியில் தோற்ற இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 சர்வதேச போட்டி 30ஆம் திகதி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.