பொன் விழா கொண்டாடும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு விஷேட முத்திரை

175

இலங்கை விளையாட்டுத்துறை ஸ்தாபிக்கப்பட்டு 50 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு அதன் நினைவு முத்திரையும் முதல்நாள் அஞ்சல் உறையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் நேற்று (21) இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளர் ஜயந்த விஜேரத்னவினால் நினைவு முத்திரை மற்றும் முதல்நாள் அஞ்சல் உறை என்பன ஜனாதிபதிக்கு வழங்கிவைக்கப்பட்டன.

புதிய சாதனை நிலைநாட்டிய மாற்றுத்திறனாளி ஹேரத்

ஆர்வம் மற்றும் அதற்காக மேற்கொண்ட முயற்சிகள் என்பவற்றின் பலனாக சர்வதேச போட்டிகளில்…

இதன்போது 2012 லண்டன் ஒலிம்பிக் மற்றும் 2017 உலக பரா மெய்வல்லுனர் போட்டிகளில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தினேஸ் பிரியந்த ஹேரத்திற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து 10 இலட்சம் ரூபாவும், விளையாட்டுத்துறை அமைச்சின் நிதியத்திலிருந்து 15 இலட்சம் ரூபாவும் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் அவருடைய பயிற்சியாளரான பிரதீப் நிசாந்த அப்புஹாமியும் கலந்துகொண்டார்.

இதேவேளை, இவ்விசேட நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் சமன் பண்டார, மெய்வல்லுனர் தெரிவுக் குழுவின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விஷேட கண்காட்சியொன்று விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண பங்களிப்புடன், இம்முறை மாத்தறை கொடவில விளையாட்டு தொகுதியில் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் போது நடைபெற்றது.

இதில், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 61 விளையாட்டு சங்கங்கள் மற்றும் 9 மாகாணங்களையும் சேர்ந்த விளையாட்டு அமைச்சுக்களின் பங்குபற்றலுடன் இந்நாட்டின் விளையாட்டுத்துறையின் சாதனைகள், அடைவுமட்டங்கள், கடந்த கால வெற்றிகளை பறைசாற்றும் வகையில் கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன், பல்வேறு கல்வி, கலை, கலசார மற்றும் களியாட்ட நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றது.

தேசிய வலைப்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக திலகா ஜினதாச

இலங்கையை சர்வதேச மட்டத்தில் இரண்டு வகைப் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்திருக்கும்….

இலங்கையின் விளையாட்டு நிர்வாகம் மற்றும் விளையாட்டுத்துறை சம்பந்தமான அனைத்து விடயங்களையும் நிர்வகிக்கும் வகையில் 1967ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டது. அப்பொழுது நாட்டின் முதல் விளையாட்டுத்துறை அமைச்சராக வி. சுகதாஸ நியமனம் பெற்றார். அன்று முதல் இந்நாட்டின் விளையாட்டுத்துறையில் பல நட்சத்திர வீரர்கள் உருவாகியதுடன், இந்நாட்டிற்கு பெருமையையும் கௌரவத்தையும் அவர்கள் பெற்றுக்கொடுத்தனர்.

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஸ்மார்ட் ஸ்போர்ட்ஸ் கல்விக் கண்காட்சியும், களியாட்ட நிகழ்வும் கடந்த 15ஆம் திகதி முதல் கொழும்பில் உள்ள டொரிண்டன் மைதான வளாகத்தில் நடைபெறவிருந்தது. எனினும், உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு குறித்த நிகழ்வை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

 மேலும் பல சுவையான கிரிக்கெட் செய்திகளுக்கு