Home Tamil இலங்கை அணிக்கு வலுவளித்த மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ் ஜோடி

இலங்கை அணிக்கு வலுவளித்த மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ் ஜோடி

102
AFP

சுற்றுலா இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (21) நிறைவுக்கு வந்தது. இன்றைய நாளுக்கான போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இலங்கை அணி அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களோடு வலுவடைந்துள்ளது.  

ஜிம்பாப்வே ஹராரே நகரில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (20) நிறைவுக்கு வரும் போது, ஜிம்பாப்வே அணியின் முதல் இன்னிங்ஸை (358) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 42 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில், அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 12 ஓட்டங்களோடும், குசல் மெண்டிஸ் 6 ஓட்டங்களோடும் ஆட்டமிழக்காது காணப்பட்டிருந்தனர்.

ஜிம்பாப்வே அணியின் ஆதிக்கத்தை சுழலால் கட்டுப்படுத்திய எம்புல்தெனிய

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள்….

இன்று (21) போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி, ஜிம்பாப்வே அணியினை விட 316 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்தது. இன்றைய நாளின் முதல் விக்கெட்டாக மாறிய இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன சிறந்த தொடக்கம் ஒன்றினை வழங்கிய நிலையில் ஆட்டமிழந்தார். அறிமுக வேகப்பந்துவீச்சாளர் விக்டோர் ந்யோச்சியின் கன்னி டெஸ்ட் விக்கெட்டாக மாறிய திமுத் கருணாரத்ன 37 ஓட்டங்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திமுத் கருணாரத்னவின் விக்கெட்டினை அடுத்து இலங்கை அணிக்கு களத்தில் நின்ற குசல் மெண்டிஸ் புதிய துடுப்பாட்ட வீரராக களம் வந்த அஞ்செலோ மெதிவ்ஸ் உடன் இணைந்து பெறுமதியான இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கினார். பின்னர், 92 ஓட்டங்கள் வரை நீடித்த இந்த இணைப்பாட்டம் குசல் மெண்டிஸின் விக்கெட்டோடு முடிவுக்கு வந்தது. ஆட்டமிழக்கும் போது டெஸ்ட் போட்டிகளில் தனது 11 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்த குசல் மெண்டிஸ் 8 பௌண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

மெண்டிஸின் பின்னர், புதிய வீரராக வந்த தினேஷ் சந்திமால் பிரகாசிக்கத் தவறினார். எனினும், மத்திய வரிசையில் களம் வந்த தனன்ஞய டி சில்வா பொறுமையான முறையில் துடுப்பாடி அஞ்செலோ மெதிவ்ஸ் உடன் இணைந்து இலங்கை அணியினைப் பலப்படுத்தினார். 

175 கிலோமீட்டர் வேகத்தில் பந்தினை வீசினாரா மதீஷ பத்திரன?

தற்போது இடம்பெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்….

பின்னர், தனன்ஞய டி சில்வா – மெதிவ்ஸ் ஜோடியின் துடுப்பாட்ட உதவியோடு உறுதியடைந்த இலங்கை அணி, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 106 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 295 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. 

மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் 63 ஓட்டங்கள் மாத்திரமே ஜிம்பாப்வே அணியினை விட பின்தங்கிக் காணப்படும் இலங்கை அணி சார்பில் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய அஞ்செலோ மெதிவ்ஸ் தனது 35 ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 92 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் உள்ளார். இதேநேரம், தனன்ஞய டி சில்வா 42 ஓட்டங்களுடன் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சு சார்பில் திறமையினை வெளிப்படுத்திய விக்டர் ந்யோச்சி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்க, ஜிம்பாப்வே அணித்தலைவர் சோன் வில்லியம்ஸ் மற்றும் டொனால்ட் ட்ரிபானோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் எடுத்திருந்தனர்.

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka
515/9 (176.2) & 14/0 (3)

Zimbabwe
358/10 (148) & 170/10 (92)

Batsmen R B 4s 6s SR
Prince Masvaure c Dimuth Karunaratne b Lasith Embuldeniya 55 149 7 0 36.91
Kevin Kasuza lbw b Lahiru Kumara 63 214 5 1 29.44
Craig Ervine b Suranga Lakmal 85 187 5 3 45.45
Brendan Taylor lbw b Suranga Lakmal 21 47 1 1 44.68
Sean Williams c Niroshan Dickwella b Lasith Embuldeniya 18 46 1 1 39.13
Sikandar Raza st Niroshan Dickwella b Lasith Embuldeniya 41 65 6 0 63.08
Regis Chakabva c Angelo Mathews b Lasith Embuldeniya 8 20 1 0 40.00
Donald Tiripano not out 44 103 3 0 42.72
Kyle Jarvis b Lasith Embuldeniya 1 5 0 0 20.00
Ainsley Ndlovu c Kusal Mendis b Lahiru Kumara 5 25 1 0 20.00
Victor Nyauchi c Lakshan Sandakan b Suranga Lakmal 11 29 1 0 37.93


Extras 6 (b 0 , lb 4 , nb 2, w 0, pen 0)
Total 358/10 (148 Overs, RR: 2.42)
Fall of Wickets 1-96 (50.1) Prince Masvaure, 2-164 (75.3) Kevin Kasuza, 3-208 (91.5) Brendan Taylor, 4-247 (106.3) Sean Williams, 5-247 (107.2) Craig Ervine, 6-266 (114.2) Regis Chakabva, 7-307 (128.4) Sikandar Raza, 8-309 (130.1) Kyle Jarvis, 9-328 (139.1) Ainsley Ndlovu, 10-358 (147.6) Victor Nyauchi,

Bowling O M R W Econ
Suranga Lakmal 27 10 53 3 1.96
Kasun Rajitha 29 9 55 0 1.90
Lasith Embuldeniya 42 12 114 5 2.71
Lahiru Kumara 29 8 82 2 2.83
Dhananjaya de Silva 21 8 50 0 2.38
Batsmen R B 4s 6s SR
Dimuth Karunaratne c Ainsley Ndlovu b Victor Nyauchi 37 78 4 0 47.44
Oshada Fernando b Donald Tiripano 21 41 2 0 51.22
Kusal Mendis c Brendan Taylor b Victor Nyauchi 80 163 8 0 49.08
Angelo Mathews not out 200 468 16 3 42.74
Dinesh Chandimal c & b Sean Williams 12 32 1 0 37.50
Dhananjaya de Silva c Prince Masvaure b Victor Nyauchi 63 112 7 0 56.25
Niroshan Dickwella lbw b Sikandar Raza 63 120 3 0 52.50
Suranga Lakmal st Regis Chakabva b Sikandar Raza 27 41 0 2 65.85
Lasith Embuldeniya b Sikandar Raza 0 1 0 0 0.00
Kasun Rajitha lbw b Sean Williams 1 6 0 0 16.67


Extras 11 (b 2 , lb 5 , nb 4, w 0, pen 0)
Total 515/9 (176.2 Overs, RR: 2.92)
Fall of Wickets 1-32 (11.1) Oshada Fernando, 2-92 (28.6) Dimuth Karunaratne, 3-184 (66.2) Kusal Mendis, 4-227 (81.4) Dinesh Chandimal, 5-325 (116.2) Dhananjaya de Silva, 6-461 (160.3) Niroshan Dickwella, 7-510 (173.4) Suranga Lakmal, 8-510 (173.5) Lasith Embuldeniya, 9-515 (176.2) Kasun Rajitha,

Bowling O M R W Econ
Kyle Jarvis 37 12 84 0 2.27
Victor Nyauchi 32 7 69 3 2.16
Donald Tiripano 31 3 82 1 2.65
Ainsley Ndlovu 28 3 107 0 3.82
Sean Williams 32.2 3 104 2 3.23
Sikandar Raza 16 0 62 3 3.88
Batsmen R B 4s 6s SR
Prince Masvaure c Niroshan Dickwella b Suranga Lakmal 17 58 2 0 29.31
Brian Mudzinganyama lbw b Suranga Lakmal 16 62 2 0 25.81
Craig Ervine c Dimuth Karunaratne b Suranga Lakmal 7 13 0 0 53.85
Brendan Taylor c Kusal Mendis b Suranga Lakmal 38 58 5 1 65.52
Sean Williams c Niroshan Dickwella b Kasun Rajitha 39 79 5 0 49.37
Sikandar Raza st Niroshan Dickwella b Lasith Embuldeniya 17 55 1 0 30.91
Regis Chakabva b Lasith Embuldeniya 26 142 1 0 18.31
Donald Tiripano lbw b Lahiru Kumara 6 61 1 0 9.84
Kyle Jarvis b Lahiru Kumara 1 15 0 0 6.67
Ainsley Ndlovu b Lahiru Kumara 0 7 0 0 0.00
Victor Nyauchi not out 0 3 0 0 0.00


Extras 3 (b 2 , lb 0 , nb 1, w 0, pen 0)
Total 170/10 (92 Overs, RR: 1.85)
Fall of Wickets 1-33 (18.2) Prince Masvaure, 2-36 (20.3) Brian Mudzinganyama, 3-41 (22.3) Craig Ervine, 4-120 (44.3) Brendan Taylor, 5-120 (45.2) Sean Williams, 6-148 (62.1) Sikandar Raza, 7-159 (81.6) Donald Tiripano, 8-163 (85.6) Kyle Jarvis, 9-165 (89.4) Ainsley Ndlovu, 10-170 (91.6) Regis Chakabva,

Bowling O M R W Econ
Suranga Lakmal 20 8 27 4 1.35
Kasun Rajitha 14 6 23 1 1.64
Dhananjaya de Silva 11 6 12 0 1.09
Lahiru Kumara 21 8 32 3 1.52
Lasith Embuldeniya 26 8 74 2 2.85


Batsmen R B 4s 6s SR
Oshada Fernando not out 4 5 0 0 80.00
Dimuth Karunaratne not out 10 13 1 0 76.92


Extras 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 14/0 (3 Overs, RR: 4.67)
Bowling O M R W Econ
Donald Tiripano 2 0 8 0 4.00
Victor Nyauchi 1 0 6 0 6.00



போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<