சென். லூசியா நகரில் நடைபெற்று வந்த சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஆட்டத்தின் இறுதி நாளில் ஏற்பட்ட மழை, போதிய வெளிச்சமின்மை போன்ற காலநிலை சீர்கேடுகள் காரணமாக சமநிலையில் முடிந்துள்ளது.
இரண்டு அணிகளுக்குமிடையிலான இந்தப் போட்டி சமநிலை அடைந்த காரணத்தினால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது.
மேற்கிந்திய தீவுகளுக்கு கடின இலக்கொன்றை நிர்ணயிக்கும் முயற்சியில் இலங்கை
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள்..
கடந்த வியாழக்கிழமை தொடங்கியிருந்த இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை (253) மற்றும் மேற்கிந்திய தீவுகள் (300) ஆகிய அணிகளின் முதல் இன்னிங்ஸ்களை அடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸில் மீண்டும் துடுப்பாடிய இலங்கை அணி, போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தின் நிறைவில் குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியோடு 89 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 342 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது. களத்தில் அகில தனன்ஞய 16 ஓட்டங்களுடனும், சுரங்க லக்மால் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.
இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகளினை விட 287 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற காரணத்தினால் போட்டியின் நேற்றைய (18) இறுதி நாளுக்கான ஆட்டத்தில் இந்த முன்னிலையினை இன்னும் அதிகரித்து எதிரணிக்கு சிரமமான வெற்றி இலக்கு ஒன்றினை நிர்ணயிக்கும் நோக்கத்தோடு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இலங்கை வீரர்கள் தொடர்ந்தனர்.
எனினும், இறுதி நாளுக்கான ஆட்டத்தில் இலங்கை அணியினால் மூன்று ஓவர்களை கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. 91.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை அணி 342 ஓட்டங்களை இரண்டாம் இன்னிங்ஸ்க்காக பெற்றுக் கொண்டது.
மேற்கிந்திய தீவுகள் அணியில் பந்துவீச்சு சார்பாக வலதுகை வேகப்பந்து வீச்சாளரான ஷன்னோன் கேப்ரியல் அதிசிறப்பான முறையில் செயற்பட்டு 62 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். கடந்த இரண்டு தசாப்தங்களில் மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சாளர் ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படுத்திய சிறப்பான பந்து வீச்சாக இது அமைந்திருந்தது.
பந்தை சேதப்படுத்திய விடயத்தில் தினேஷ் சந்திமால் மீது குற்றத்தை நிரூபித்துள்ள ஐ.சி.சி.
மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட்..
இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து ஆட்டத்தின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 296 ஓட்டங்களை பெற தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை மேற்கிந்திய தீவுகள் அணி டெவோன் ஸ்மித், கிரைக் ப்ராத்வைட் ஆகியோருடன் ஆரம்பித்தது.
கடினமான இலக்கு ஒன்றினை நோக்கி துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்த இன்னிங்ஸின் நான்காவது ஓவரினை வீசிய இலங்கையின் வேகப்பந்து வீச்சாளரான கசுன் ராஜித இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி அடுத்தடுத்த அதிர்ச்சிகளை தந்தார். ராஜிதவின் வேகத்திற்கு இரையாகிய மேற்கிந்திய தீவுகளின் டெவோன் ஸ்மித், கெய்ரன் பொவேல் ஆகியோர் ஐந்து ஓட்டங்களை கூட தாண்டியிருக்கவில்லை.
தொடர்ந்த ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக பொறுமையான முறையில் கிரைக் ப்ராத்வைட் மற்றும் சாய் ஹோப் ஆகியோர் துடுப்பாடத் தொடங்கினர்.
எனினும், இந்த இன்னிங்ஸில் 13 ஆவது ஓவரினை வீசிய லஹிரு குமாரவுடைய பந்து உடம்பில்பட்டு உபாதைக்குள்ளாகிய காரணத்தினால் 6 ஓட்டங்களுடன் காணப்பட்ட சாய் ஹோப் மைதானத்தினை விட்டு வெளியேறினார். ஹோப்புக்கு பதிலாக துடுப்பாட களம் வந்த புதிய துடுப்பாட்ட வீரரான ரோஸ்டன் சேஸின் விக்கெட்டும் 13 ஓட்டங்களுடன் சுரங்க லக்மாலினால் கைப்பற்றப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கையை சங்கா, அரவிந்த நிராகரிப்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசகராக…
சேஸினை அடுத்து, களத்தில் இருந்த கிரைக் ப்ராத்வைட்டுடன் கைகோர்க்க புதிய துடுப்பாட்ட வீரராக சேன் டோவ்ரிச் வந்திருந்தார். இறுதி நாளின் மதிய போசனத்திற்கு பின்னர், டோவ்ரிச்சின் விக்கெட்டினை அகில தனன்ஞய கைப்பற்றினார். டோவ்ரிச் ஆட்டமிழக்கும் போது 8 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. டோவ்ரிச் ஓய்வறை நடந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலையில் காணப்பட்டிருந்தது.
இதற்கு பின்னர், உபாதையினால் மைதானத்தினை விட்டு வெளியேறிய சாய் ஹோப் களத்திற்கு மீண்டும் துடுப்பாட வந்திருந்தார். ப்ராத்வைட்டுடன் இணைந்த ஹோப் ஆட்டத்தினை சமநிலைப்படுத்தும் நோக்கோடு நிதானமான முறையில் துடுப்பாடினார். இவர்களது இணைப்பாட்டம் (53) இறுதி நாளின் தேநீர் இடைவேளையினை தாண்டி சிறிது நேரம் நீடித்தது. பின்னர் இந்த இணைப்பாட்டத்தினை சுரங்க லக்மால் ஹோப்பின் விக்கெட்டோடு முடிவுக்கு கொண்டு வந்தார். சாய் ஹோப் ஆட்டமிழக்கும் போது 39 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.
ஹோப் ஆட்டமிழந்து ஓய்வறை நடக்க போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு இலங்கை அணிக்கு அதிகரித்திருந்தது. எனினும், தொடர்ந்த போட்டியில் மழை குறுக்கிட்டது. மழையினால் ஆட்டம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கு தடைப்பட்டது. நிலைமகள் சீராகிய பின்னர் ஆரம்பித்த ஆட்டத்தில் போதிய வெளிச்சம் இல்லாதிருந்தது. இந்நிலையில், மைதான நடுவர்கள் இலங்கை அணித்தலைவரிடம் கலந்துரையாடிய பின்னர் ஐந்தாம் நாளுக்குரிய ஆட்ட நேரம் முடிவடைந்ததாக அறிவித்தனர். இதனால் போட்டியும் சமநிலையில் முடிந்தது.
ஆட்டம் சமநிலை அடையும் போது மேற்கிந்திய தீவுகள் அணி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 147 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் அரைச்சதம் எட்டிய கிரைக் ப்ராத்வைட் 59 ஓட்டங்களுடனும், ஜேசன் ஹோல்டர் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர். இப்போட்டி சமநிலை அடைந்த காரணத்தினால் மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் தொடர் ஒன்றினை வெற்றி கொள்ளும் இலங்கையின் எதிர்பார்ப்பானது இந்த தடவையும் வீணாகியுள்ளது.
ஆட்ட நாயகனாக இந்தப் போட்டியில் மொத்தமாக 13 விக்கெட்டுக்களை சாய்த்த மேற்கிந்திய தீவுகளின் ஷன்னோன் கேப்ரியல் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக பர்படோஸில் வருகின்ற சனிக்கிழமை (23) நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<