கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் மீண்டும் ஆரம்பமாகும் முகமாக, சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஏஜஸ் போவ்லில் இன்று நடைபெறுகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் ஜோ ரூட், அவரது மனைவி இரண்டாவது குழந்தையை பிரசவிக்கவுள்ளதால், இந்தப் போட்டியில் விளையாடாத நிலையில், இங்கிலாந்து அணியின் 81வது டெஸ்ட் அணி தலைவராக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Dates confirmed for Sri Lanka domestic cricket resumption
Sri Lanka Cricket (SLC) will recommence the stalled 2019/2020 domestic cricket season from 14th July…
சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்திய கொவிட்-19 வைரஸ் காரணமாக, சுமார் 115 நாட்களுக்கு பின்னர் இரண்டு நாடுகள் சந்திக்கும் டெஸ்ட் போட்டியொன்று இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.
இங்கிலாந்து அணி இறுதியாக கொழும்பில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்கு எதிரான இறுதி பயிற்சிப் போட்டியில் விளையாடியிருந்தது. எனினும், இந்தப் போட்டி கொவிட்-19 வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி நாடு திரும்பியிருந்தது.
இதற்கு பிற்பட்ட காலப்பகுதியில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடராக நடைபெற்ற போதும், குறித்த தொடரும் கொவிட்-19 காரணமாக தடைப்பட்டது.
அதன் பின்னர் கொவிட்-19 காரணமாக ஒவ்வொரு தொடர்களும் பிற்போடப்பட்டு வர, தற்போது சர்வதே கிரிக்கெட் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதன் முதற்படியாகவே மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் மீண்டும் ஆரம்பமாகியுள்ள போதும், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இந்தப் போட்டி சற்று புதுமையுடன் நடைபெறுகிறது. குறிப்பாக ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, மிக நுணுக்கமான பாதுகாப்பு முறைகளுடன் நடைபெறுகிறது.
இதேவேளை, கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக புதிய பல விதிமுறைகளும் சர்வதேச கிரிக்கெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மேலதிகமாக ஒரு DRS முறைமை ஒவ்வொரு அணிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், எச்சில் இட்டு பந்தினை புதிதாக்கும் முறை தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சில புதிய கட்டுப்பாடுகளுடன் சர்வதேச கிரிக்கெட் இன்று மீண்டும் ஆரம்பமாகிறது.
மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க