ஆசியக் கிண்ணத்துக்கான இந்திய குழாம் அறிவிப்பு!

Asia Cup 2023

434
India Squad

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 17 பேர்கொண்ட இந்திய குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

அறிவிக்கப்பட்டுள்ள இந்திய குழாத்தில், உபாதைகள் காரணமாக அணியில் இடம்பெறாமலிருந்த சிரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல். ராஹுல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். 

>> மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக லசித் மாலிங்க

இவர்கள் இருவரும் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், உலகக் கிண்ணத்தில் அணியின் மத்தியவரிசை பலமானதாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

சிரேயாஸ் ஐயர் முழு உடற்தகுதியை அடைந்துள்ள போதும், கே.எல். ராஹுலின் உபாதை முழுமையாக குணமடையவில்லை. எனவே முதல் இரண்டு அல்லது முதல் போட்டியில் இவர் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மேலதிக வீரராக சஞ்சு சம்சன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். 

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற தொடரில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தியிருந்த திலக் வர்மா முதன்முறையாக ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

இவர்களுடன் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் விளையாட ஆரம்பித்திருந்த ஜஸ்ப்ரிட் பும்ரா ஆசியக் கிண்ணத்துக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மொஹமட் சமி, மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்னா மற்றும் சர்துல் தாகூர் கியோர் வேகப் பந்துவீச்சாளர்களாக இடம்பெற்றுள்ளனர். 

சுழல் பந்துவீச்சுத்துறையை பொருத்தவரை யுஸ்வேந்திர சஹால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், குல்தீப் யாதவ் முதன்முமை சுழல் பந்துவீச்சாளராகவும், அக்ஷர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய சகலதுறை வீரர்களும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். 

இந்திய அணியானது ஆசியக் கிண்ணத்தின் தங்களுடைய முதல் போட்டியில் செப்டம்பர் 2ம் திகதி பாகிஸ்தான் அணியை கண்டிபல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்திய குழாம்  

ரோஹித் சர்மா (தலைவர்), சுப்மான் கில், விராட் கோஹ்லி, சிரேயாஸ் ஐயர், கே.எல்.ராஹுல், திலக் வர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், சர்துல் தாகூர், குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹமட் சமி, பிரசித் கிருஷ்னா, சஞ்சு சம்சன் (மேலதிக வீரர்) 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<