புதுப்பொலிவுடன் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி

3425
Image Courtesy - Getty Images

தமது நியூசிலாந்து சுற்றுப் பயணத்தினை டெஸ்ட் தொடரில் கிடைத்த தோல்வியுடனேயே ஆரம்பித்திருக்கும் இலங்கை அணி, மலர்ந்திருக்கும் புதிய வருடத்தினை மீண்டும் நியூசிலாந்து அணியுடனான ஓரு நாள் தொடரின் முதல் போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

போட்டி விபரம்

இடம் – பேய் ஓவல் (Bay Oval) மைதானம், மவுன்ட் மவுங்னைய்
திகதி – ஜனவரி 3 (வியாழன்)
நேரம் – மதியம் 2 மணி (இலங்கை நேரப்படி காலை 6.30 மணி)

இலங்கை அணியின் புதிய தலைவராக லசித் மாலிங்க

நியூசிலாந்து அணிக்கு எதிராக…

நியூசிலாந்துடன் இலங்கை அணி டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததனை கடந்த ஆண்டோடு சேர்த்து மறந்து விடுவோம். மலர்ந்திருக்கும் புதிய ஆண்டினை பார்ப்போம். இந்த ஆண்டில் இலங்கை அணி புதிய அணித்தலைவர், புதிய தேர்வாளர்கள் தெரிவு செய்த புதிய வீரர்கள் குழாம் என புதுப் பொலிவுடன் நியூசிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தம்முடைய புதிய சவாலினை எதிர்கொள்கின்றது.

இலங்கை அணி இந்த ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை கருத்திற் கொண்டு செயற்படுவதால், உலகக் கிண்ணத்திற்கு முன்னர் தாம் பங்குபெறும் ஒவ்வொரு ஒரு நாள் தொடரிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இத்தொடர்களின் மூலமே உலகக் கிண்ணத்திற்கான ஒரு சிறந்த அணியினை கட்டியெழுப்ப முடியும்.

தமது இறுதி இரண்டு ஒரு நாள் தொடர்களினையும் இலங்கை அணி பறிகொடுத்திருந்த போதிலும், தற்போது அணியில் புதிய மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதனால், இலங்கை அணி நாளை ஆரம்பமாகும் ஒரு நாள் போட்டியில் சவால்களை சிறந்த முறையில் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2020 டி-20 உலகக் கிண்ண நேரடித் தகுதியை இழந்த இலங்கை அணி

அவுஸ்திரேலியாவில் 2020 ஆம் ஆண்டு…

மறுமுனையில் நியூசிலாந்து அணியினை நோக்கும் போது அவர்கள் உலகக் கிண்ணத்தினை வெல்லக்கூடிய அணி என கிரிக்கெட் வல்லுனர்கள் எதிர்வுகூறும் ஒரு படையாக இருக்கின்றனர். அதோடு .சி.சி. இன் ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசையிலும் 3ஆம் இடத்தில் காணப்படும் நியூசிலாந்து அணி தமது சொந்த மண்ணில் இன்னும் வலிமையாகவே இருப்பார்கள். எனவே, இலங்கை அணி இதனையும் கருத்திற்கொண்டு நாளைய போட்டியில் கவனமாக இருக்க வேண்டும்.

இலங்கை அணி

டெஸ்ட் தொடருடன் ஒப்பிடும் போது இலங்கையின் ஒரு நாள் அணிக்குழாமில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. நியூசிலாந்துடனான ஒரு நாள் போட்டிகளுக்கான இலங்கை அணியில், புதிய தலைவராக செயற்படும் பொறுப்பு தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக இலங்கையின் வேகப்புயல் லசித் மாலிங்கவுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

அதேநேரம், இலங்கை அணியினை சில சாதனை வெற்றிகளுக்காக அழைத்துச் சென்ற அசேல குணரத்னவுக்கும் நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் போட்டிகளில் விளையாட சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும், இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரில் உபாதைக்கு ஆளாகிய அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா, சீக்குகே பிரசன்ன மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோரும் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளனர்.  

எனினும், நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உபாதைக்கு ஆளாகிய அஞ்செலோ மெதிவ்ஸ் இல்லாதது நடைபெறப்போகும் ஒரு நாள் தொடரில் இலங்கை அணிக்கு பேரிழப்பாகும். மெதிவ்ஸின் இடத்தினை இலங்கை அணியில் இளம் துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரம எடுத்துக் கொள்கின்றார்.

அஞ்செலோ மெதிவ்ஸிற்கு பதிலாக இலங்கை அணியில் சதீர சமரவிக்ரம

உபாதைக்குள்ளாகியிருக்கும் இலங்கை…

இருக்கும் வீரர்களில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் வீரர்களாக குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோரினை கருத முடியும். இவர்களுக்கு மத்திய வரிசை அதிரடி மூலம் திசர பெரேரா மற்றும் தசுன் சானக்க ஆகியோர் பலம் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நியூசிலாந்து ஆடுகளங்கள் பொதுவாக வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானவை என்பதால் இலங்கையின் வேகப்பந்துவீச்சுத்துறையினை லசித் மாலிங்க முன்னெடுக்க அவருக்கு துஷ்மந்த சமீர, நுவன் பிரதீப் மற்றும் லஹிரு குமார ஆகியோர் உறுதுணையாக இருக்கவுள்ளனர்.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குனதிலக்க, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, திசர பெரேரா, அசேல குணரத்ன, சீக்குகே பிரசன்ன, தசுன் சானக்க, லசித் மாலிங்க (அணித்தலைவர்), நுவன் பிரதீப்  


நியூசிலாந்து அணி

நியூசிலாந்து அணியினை நோக்கும் போது அவர்கள் டெஸ்ட் தொடரில் விளையாடிய அதே அணியில் சில மாற்றங்கள் செய்து இலங்கை அணியுடனான ஒரு நாள் போட்டிகளில் ஆடவிருக்கின்றனர்.

முக்கிய வீரர்களின் பிரகாசிப்புடன் முடிவடைந்த டெஸ்ட் தொடர்

நியூசிலாந்து மற்றும் சுற்றுலா இலங்கை…

நியூசிலாந்து அணியை நோக்கும் போது நாளைய போட்டியில் அதனது துடுப்பாட்டத்துறையை பலப்படுத்தும் வீரர்களாக கேன் வில்லியம்சன், மார்டின் குப்டில், கொலின் முன்ரோ மற்றும் ரோஸ் டெய்லர் ஆகியோர் காணப்படுவார்கள் என நம்ப முடியும்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு துறையினை எடுத்து நோக்கும் போது டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் விடுத்த வேகப்பந்து வீச்சாளர்களான டிம் செளத்தி மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர் ஒரு நாள் குழாத்திலும் காணப்படுகின்றனர். இதனால், நாளை நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சுத்துறை மூலம் பெரிய ஆபத்து ஒன்று காத்திருக்கின்றது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருபுறமிருக்க இலங்கை அணியினை சுழல் மூலம் அச்சுறுத்த நியூசிலாந்து அணி இஷ் சோதியினையும் தம்மிடம் வைத்திருக்கின்றது.

எதிர்பார்க்கப்படும் நியூசிலாந்து அணி  

மார்டின் குப்டில், கொலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), ரோஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், லோக்கி பேர்குஸன், ஜேம்ஸ் நீஷம், இஷ் சோதி, டிம் செளத்தி, ட்ரென்ட் போல்ட், டக் ப்ரெஸ்வெல்

எதிர்பார்ப்பு வீரர்கள்

லசித் மாலிங்க (இலங்கை)கிட்டத்தட்ட ஒரு வருடம் இலங்கை அணியில் வாய்ப்பு பெறாமல் இருந்த லசித் மாலிங்க, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடர் மூலம் தேசிய அணிக்கு மீண்டதன் பின்னர் இப்போது இலங்கை அணியின் தலைவராகவும் மாறியிருக்கின்றார்.

>>காணொளிகளைப் பார்வையிட<<

மாலிங்கவுக்கு நாளைய போட்டியில் அணியினை வழிநடாத்துவது மட்டுமல்லாது விக்கெட்டுக்களைச் சாய்ப்பதும் முக்கிய பொறுப்பாக உள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை கொண்டிருக்கும் நியூசிலாந்து மண்ணில் முன்னரும் மாலிங்க ஆடியிருப்பதால் நாளைய போட்டியில் இலங்கை அணிக்காக ஜொலிக்க இருக்கும் எதிர்பார்ப்பு வீரராக அவர் இருக்கின்றார்.

Image Courtesy – Getty Images

மார்டின் குப்டில் (நியூசிலாந்து) இயற்கையாகவே அதிரடியாக துடுப்பாடும் மார்டின் குப்டில், நியூசிலாந்து அணிக்காக ஜொலிக்க இருக்கும் முக்கிய வீரராக இருக்கின்றார்.

நியூசிலாந்து அணிக்காக கடந்த ஆண்டுகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து வருகின்ற குப்டில் இலங்கை அணிக்கு எதிராக இதுவரையில் 19 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளதுடன், அவற்றில் 40 இற்கு கிட்டவான துடுப்பாட்ட சராசரியினையும் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy – Getty Images

போட்டி நடைபெறும் மைதானத்தில் இரண்டு அணிகளதும் கடந்த காலம்

நாளைய போட்டி நடைபெறவுள்ள பேய் (Bay Oval) ஓவல் மைதானத்தில் இரு அணி வீரர்களும் ஒரேயொரு ஒரு நாள் போட்டியில் மாத்திரமே இதுவரையில் விளையாடியிருக்கின்றனர். 2016ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த குறித்த ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி, இலங்கை அணியினை 36 ஓட்டங்களால் தோற்கடித்திருந்தது.

எனவே, நாளை இடம்பெறும் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் பட்சத்தில் அது இலங்கை அணிக்கு குறித்த மைதானத்தில் கிடைத்த முதல் வெற்றியாக இருக்கும்.

மைதான நிலைமைகள்

நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் வழங்கப்பட்ட மைதானங்கள் போன்று நாளைய போட்டி நடைபெறும் மைதானமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஒரு இடமாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. இதேநேரம், போட்டி நடைபெறும் நாளில் மழை வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே, நாளைய நாளில் இரண்டு அணிகளதும் கிரிக்கெட் இரசிகர்கள் தங்களுக்கு விருந்து தரக்கூடிய கிரிக்கெட் போட்டி ஒன்றை கண்டுகளிக்க முடியுமாக இருக்கும்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<