லிவர்பூல் அணிக்கு வெற்றி மேல் வெற்றி

87

ப்ரீமியர் லீக் கிண்ணத்தை நோக்கி தொடர்ச்சியாக முன்னேறி வரும் லிவர்பூல் அணி வொல்வர்ஹம்டன் வொன்டரர்ஸ் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இதன்மூலம் லிவர்பூல் அணி ப்ரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகள் முன்னிலையுடன் முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு அதிர்ச்சி தோல்வி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய ………

தனது சொந்த மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று (24) அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் வொன்டரர்ஸ் எதிரணிக்கு கடைசி வரை சவால் கொடுத்தபோதும் லிவர்பூல் இறுதி நேரத்தில் பெற்ற கோல் மூலமே போட்டியில் வெற்றியீட்டியது

போட்டியின் எட்டாவது நிமிடத்தில் ட்ரென்ட் அலெக்சாண்டர் ஆர்னோல்டின் கோனர் கிக்கை அணித்தலைவர் ஜோர்டன் ஹென்டர்சன் தலையால் முட்டி லிவர்பூலுக்கு முதல் கோலை பெற்றுக்கொடுத்தார். இதன்மூலம் அந்த அணிக்கு முதல் பாதியில் முன்னிலை பெற முடிந்தது.

முதல் பாதி: லிவர்பூல் 1 – 0 வொல்வர்ஹம்டன் வொன்டரர்ஸ் 

எனினும் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே வொன்டரர்ஸ் அணிக்கு பதில் கோல் திருப்ப முடிந்தது. அலிசன் பரிமாற்றிய பந்தை ராவுல் ஜிமனஸ் வேகமாக தலையால் வலையை நோக்கி திருப்பினர். இந்த கோலை அடுத்து அரங்கில் நிரம்பிவழிந்த வொன்டரர்ஸ் ரசிகர்கள் உற்சாக கோசம் எழுப்பினர்

வாய்ப்புக்கள் வீணாக பாரோ அணியை சமன் செய்த டிபெண்டர்ஸ்

பூட்டானின் பாரோ கால்பந்து கழகத்திற்கு எதிராக………

வொன்டரர்ஸின் பதில்கோலை அடுத்து போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட்டதோடு வொன்டரர்ஸ் அணி லிவர்பூலுக்கு சரிக்கு சமமாக ஆடியது. அந்த அணி கடைசி நிமிடங்களில் நெருக்கமான கோல்வாய்ப்புகளை தவறவிட்டதை காணமுடிந்தது.

மறுபுறம் தனது தொடர்ச்சியான வெற்றிகளை தக்கவைத்துக் கொள்ள போராடிய லிவர்பூல் அணிக்காக முன்களத்தில் மொஹமட் சலாஹ் அடிக்கடி எதிரணி பெனால்டி எல்லையை ஆக்கிரமித்தபோதும் அவரால் கோல் பெற முடியவில்லை

எனினும் இந்த பருவத்தில் அபாரமான திறமையை வெளிப்படுத்தி வரும் லிவர்பூல் அணியால் கடைசி நேரத்தில் வெற்றி கோலை பெற முடிந்தது. போட்டியின் முழு நேரம் முடிவதற்கு ஆறு நிமிடங்கள் இருக்கும்போது ரொபார்டோ பர்மினோ மின்னல் வேகத்தில் லிவர்பூலுக்கு வெற்றி கோலை பெற்றுக் கொடுத்தார்.    

லிவர்பூல் இந்தப் பருவத்தில் தனது 23 லீக் போட்டிகளில் பெறும் 22ஆவது வெற்றி இதுவாகும்

முழு நேரம்: லிவர்பூல் 2 – 1 வொல்வர்ஹம்டன் வொன்டரர்ஸ் 

கோல் பெற்றவர்கள்

லிவர்பூல் ஜோர்டன் ஹென்டர்சன் 8’, ரொபார்டோ பிர்மினோ 84’

வொல்வர்ஹம்டன் வொன்டரர்ஸ் ராவுல் ஜிமனஸ் 51

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<