கோஹ்லி – விஜய் இணைப்பாட்டம் மூலம் இந்திய அணி அபாரம்

598
Photo by Deepak Malik / BCCI

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய தரப்பு, அணித்தலைவர் விராத் கோஹ்லி மற்றும் முரளி விஜய் ஆகியோரின் சதங்களோடு வழங்கிய உறுதியான இணைப்பாட்டம் (283) மூலம் தமது தரப்பினை வலுப்படுத்தியுள்ளது.

இலங்கையை வீழ்த்தி சாதனை புத்தகத்தில் இடம்பெற காத்திருக்கும் இந்தியா

டெல்லி, பெரோஸ் ஷாஹ் கொட்லா மைதானத்தில் நாளை (02)..

முன்னதாக டெல்லி பெரோஸ் ஷாஹ் கோட்லா மைதானத்தில் இன்று (02) ஆரம்பமாகியிருந்த இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது.

நாக்பூரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வரலாற்றில் தமது மோசமான டெஸ்ட் தோல்வியினை பதிவு செய்திருந்தது. அதோடு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது. இவற்றின் காரணமாக இந்தப் போட்டியில் நல்ல முடிவுகளை எதிர்பார்த்து இந்தியாவுக்கு சென்றுள்ள விருந்தாளிகள் தமது குழாத்தில் சில மாற்றங்களைச் செய்திருந்தனர்.

முதல்தரப் போட்டிகளில் பல வருட அனுபவத்தினைக் கொண்ட துடுப்பாட்ட வீரரான ரொஷேன் சில்வா இலங்கை அணியில்  அறிமுக வீரராக லஹிரு திரிமான்னவுக்குப் பதிலாக இணைக்கப்பட்டதோடு, தனன்ஞய டி சில்வா மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் தசுன் சானக்க மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரின் இடத்தினை பிரதியீடு செய்திருந்தனர்.

மறுமுனையில் இந்திய அணியிலும் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சமி, சிக்கர் தவான் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியிருந்ததோடு அவர்களுக்கு பதிலாக லோக்கேஷ் ராகுல் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான முரளி விஜய் மற்றும் சிக்கர் தவான் ஆகியோருடன் தொடங்கியது.

திரிமான்ன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் சந்தேகம்

இந்த வாரத்தின் முற்பகுதியில் வரலாற்றில் மிகவும் மோசமான டெஸ்ட் தோல்வியை…

இந்திய அணிக்கு விரைவான ஆரம்பம் ஒன்றினைத் தந்த சிக்கர் தவான் 23 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது, தில்ருவான் பெரேராவின் பந்துவீச்சில் சதீர சமரவிக்ரமவிடம் பிடிகொடுத்து வீழ்ந்தார். தவானின் இந்த விக்கெட்டினை கைப்பற்றியதன் மூலம் இலங்கை சார்பாக அதிகுறைந்த டெஸ்ட் போட்டிகளில் (24) 100 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக சுழல்பந்துவீச்சாளரான பெரேரா புதிய சாதனை ஒன்றினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தவானின் விக்கெட்டினை அடுத்து களம் நுழைந்த செட்டெஸ்வர் புஜாரா இந்திய அணிக்கு நல்லதொரு ஆட்டத்தினை வெளிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் சோபிக்கத் தவறியிருந்தார்.

எனினும் மூன்றாம் விக்கெட்டுக்காக, ஏனைய ஆரம்ப வீரராக வந்த முரளி விஜய் மற்றும் அணித்தலைவர் விராத் கோஹ்லி ஆகியோர் ஒன்று சேர்ந்து பெறுமதியான இணைப்பாட்டம் ஒன்றினை பெறத் தொடங்கினர். போட்டியின் மதிய போசன இடைவேளை, தேநீர் இடைவேளை என்பவற்றினை தாண்டி இவர்களது இணைப்பாட்டம் நீடித்தது.

தேநீர் இடைவேளைக்காக மைதானத்தினை விட்டு வீரர்கள் வெளியேறும் போது, முரளி விஜய் தனது 11 ஆவது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்திருந்தார். தேநீர் இடைவேளை முடிந்த பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி தனது 14 ஆவது டெஸ்ட் சதத்தினை கடந்திருந்தார். கோஹ்லிக்கு இத்தொடரில் இது தொடர்ச்சியான மூன்றாவது சதமாகும்.

இரண்டு வீரர்கள் மூலமும் 283 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்ட பின்னர் இந்திய அணியின் 3ஆம் விக்கெட்டாக முரளி விஜய் லக்ஷான் சந்தகனின் சுழலில் வீழ்ந்தார்.

தனது திட்டங்களை விளக்கும் புதிய அணித் தலைவர் திசர

எமது ஒவ்வொரு வீரர்களது திறமையையும் ஒப்பிட்டால் இந்திய அணி கூட எமக்கு…

முரளி விஜய் ஆட்டமிழக்கும் போது, 267 பந்துகளுக்கு 13 பெளண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 155 ஓட்டங்களினை குவித்திருந்தார்.

போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைய சிறிது நேரத்துக்கு முன்னர், இந்தியா இன்னுமொரு விக்கெட்டினை பறிகொடுத்தது.

எனினும், அணித் தலைவர் விராத் கோஹ்லியின் அபாரத்தினால் முதல் நாள் ஆட்ட முடிவின் போது இந்தியா 90 ஓவர்கள் நிறைவுக்கு 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 371 ஓட்டங்களினைப் பெற்று வலுப்பெற்றிருக்கின்றது.

இந்தப் போட்டி மூலம் தனது 5,000 ஆவது டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்த கோஹ்லி 156 ஓட்டங்களுடனும் ரோஹித் சர்மா 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில்,  இன்றைய நாளில் லக்ஷான் சந்தகன் 2 விக்கெட்டுக்களையும் லஹிரு கமகே மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.  

போட்டியின் சுருக்கம்