இரண்டு முக்கிய வீரர்களின் உபாதைகளினால் அவதியுறும் இலங்கை அணி

37

பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று (06) நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவர் உபாதைக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்தவகையில், இலங்கை அணியில் உபாதைக்கு உள்ளாகிய முதல் வீரராக அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா மாறியிருந்தார். குசல் பெரேரா, இலங்கை அணிக்கு எதிரான T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாடும் போது விரலில் பந்து தாக்கியதில் உபாதைக்கு ஆளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. குசல் பெரேரா உபாதைக்கு உள்ளாகிய காரணத்தினால், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் விக்கெட்காப்பாளராக நிரோஷன் டிக்வெல்ல செயற்பட்டிருந்தார்.

உள்ளூர் போட்டிகளில் அசத்தும் தினேஷ் சந்திமால்

இலங்கை கிரிக்கெட் சபையினால்…..

இதேநேரம், இலங்கை அணி சார்பாக உபாதைக்கு உள்ளான ஏனைய வீரராக இளம் சுழல்பந்து சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்க மாறியிருந்தார். வனிந்து ஹஸரங்க பெளண்டரி ஒன்றுக்கான களத்தடுப்பினை மேற்கொள்ள முயற்சி செய்தபோது, தசை உபாதைக்கு ஆளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வனிந்து ஹஸரங்க குறித்த தசை உபாதையினை எதிர்கொண்ட பின்னர் மைதானத்தினை விட்டு வெளியேறி போட்டி நிறைவடையும் வரை மைதானத்திற்குள் மீண்டும் வராமல் போயிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, உபாதைக்கு உள்ளான வீரர்களின் உபாதைகள் பற்றிய ஏனைய விடயங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் முக்கிய விடயமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<