சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி ஆகியவை இடையே கொழும்பு NCC மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது இளையோர் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில், இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியை விட 39 ஓட்டங்களால் பின்தங்கி காணப்படுகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பமான இந்த இளையோர் டெஸ்ட் போட்டியின் நேற்றைய (17) இரண்டாம் நாள் நிறைவில் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸை (309) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 65 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் நவோத் பராணவிதான 35 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் நிப்புன் தனன்ஞய 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றனர்.
எனது தந்தையே எனது நாயகன்; முன்னாள் வீரர்களுக்கான கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம்
இன்று போட்டியின் மூன்றாம் நாளில், தமது எதிரணியினை விட 244 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி நிப்புன் தனன்ஞயவின் விக்கெட்டினை 11 ஓட்டங்களுடன் பறிகொடுத்தது. தொடர்ந்து, நவோத் பராணவிதான 40 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.
இதனை அடுத்து சற்று தடுமாற்றத்தை காண்பித்த இலங்கை 19 வயதின் கீழ் அணிக்கு கொழும்பு மஹநாம கல்லூரியின் சொனால் தினுஷ மற்றும் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் மொஹமட் சமாஸ் ஆகியோர் நான்காம் விக்கெட்டுக்காக 90 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து நம்பிக்கை அளித்தனர்.
இதனை அடுத்து சமாஸின் விக்கெட் 31 ஓட்டங்களுக்கு பறிபோன போதிலும் சிறப்பாக துடுப்பாடிய சொனால் அரைச்சதம் கடந்தார். தொடர்ந்து இலங்கை அணியின் பின்வரிசையில் துடுப்பாடிய வீரர்கள் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.
எனினும் களத்தில் நின்ற சொனால் தினுஷ சதம் ஒன்றினை கடந்து தனது தரப்பினை வலுப்படுத்தியதோடு, குறித்த சதத்தின் உதவியோடு இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸில் 113 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 288 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
இலங்கை இளையோர் கிரிக்கெட் அணிக்காக சதம் கடந்த சொனால் தினுஷ 100 ஓட்டங்களினை குவித்தவாறு ஆட்டமிழந்திருந்தார்.
இதேநேரம், பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக அதன் அணித்தலைவர் தவ்ஹீத் ரித்தோய் மற்றும் ரகிபுல் ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருக்க, சஹின் அலம் மற்றும் சரிபுல் இஸ்லாம் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் எடுத்திருந்தனர்.
பின்னர், 21 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் அணி போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுறும் போது 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது.
பயிற்றுவிப்பாளராகும் கனவுடன் பயிற்சிப் பாடநெறிகளை முன்னெடுக்கும் இலங்கை வீரர்கள்
களத்தில் நவ்ரோஷ் நபில் 7 ஓட்டங்களுடனும், மஹ்மதுல்லாஹ் ஹசன் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருக்கின்றனர். பங்களாதேஷ் தரப்பில் பறிபோயிருந்த விக்கெட்டை அஷேன் டேனியல் கைப்பற்றியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
போட்டியின் நான்காவதும் இறுதியுமான நாள் நாளை தொடரும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















