பங்களாதேஷ் 19 வயதின் கீழ் மகளிர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள நான்கு போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு போட்டிகள் கொண்ட T20 தொடர் இம்மாதம் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அடுத்த போட்டிகள் 5, 7 மற்றும் 9ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
>>குசல் பெரேராவின் அதிரடி சதத்தோடு T20I தொடரில் இலங்கை ஆறுதல் வெற்றி
இதில் முதல் இரண்டு போட்டிகளும் தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த இரண்டு போட்டிகளும் சர்ரே வில்லேஜ் மற்றும் பி.ஆர்.சி மைதானங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டிகளுக்காக இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணியின் தலைவியாக மனுதி நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளதுடன், ரஸ்மிகா செவ்வந்தி உப தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுடன் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து வரும் பல வீராங்கனைகள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலகரட்ன டில்சானின் மகள் லிமன்சா திலகரட்னவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணி
மனுதி நாணயக்கார (தலைவி), ரஸ்மிகா செவ்வந்தி (உப தலைவி), விமோக்ஷா பாலசூரிய, ஹிருனி ஹன்சிகா, சுமுது நிசன்சலா, தஹமி சந்துமா, ரஷ்மி நேத்ராஞ்சலி, சஷினி காமினி, அஷேனி தலகுனே, பிரேமுதி மெத்சரா, சமுதி பிரபோதா, சஞ்சனா காவிந்தி, தனுலி தென்னகோன், லிமன்சா திலகரட்ன, செஹேரா இந்துவரி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<