இந்தியாவில் கன்னித் தொடரை தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை இளம் வீரர்கள்

331

இந்தியாவில் இடம்பெறும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான செலன்ஜர் கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் தடவையாகக் கலந்துகொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி, தமது முதல் போட்டியில் இந்திய கிரீன் அணியிடம் 7 விக்கெட்டுக்களால் தோல்வியை சந்தித்துள்ளது.

தமது நாட்டின் கனிஷ்ட வீரர்களுக்காக இந்திய கிரிக்கெட் சபை வருடாந்தம் நடாத்துகின்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான செலன்ஜர் கிண்ணப் போட்டித் தொடரில் முதற்தடவையாக கலந்துகொள்வதற்காக இலங்கை அணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற இலங்கை கிரிக்கெட் சபை தமது இளம் அணியினை அங்கு அனுப்பியது.

இந்தியாவின் செலன்ஜர் கிண்ண தொடரில் முதற்தடவையாக பங்கேற்கும் இலங்கை

அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் சம்பிரதாயபூர்வமாக..

இதன்படி, 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக இடம்பெறும் இத்தொடரில் கலந்துகொள்ள அங்கு சென்ற இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி தமது முதல் போட்டியாக மும்பையில் இந்திய கிரீன் அணியை எதிர்கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய கிரீன் அணியின் தலைவர் அபிஷேக் ஷர்மா, இலங்கை வீரர்களை முதலில் தடுப்பாடப் பணித்தார்.

இதன்படி முதலில் துடுப்பாட களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களான தனஞ்சய லக்ஷான் – விஷ்வ சதுரங்க ஜோடி முதல் விக்கெட்டுக்காக 31 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக லக்ஷான் 15 ஓட்டங்களுடன் வலது கை வேகப்பந்து வீச்சாளர் தர்ஷான் நல்கண்டே மூலம் போல்ட் செய்யப்பட, சதுரங்கவும் 21 ஓட்டங்களுடன் அவரது பந்திலேயே ஆட்டமிழந்தார்.

நல்கண்டே தொடர்ந்தும் அபாரமாகப் பந்து வீசி தொடர்ச்சியாக இலங்கை அணியின் விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, இலங்கை வீரர்கள் ஓட்டங்களைக் குவிக்க தடுமாறினர்.

87 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இலங்கை அணி போராடிக்கொண்டிருந்த நிலையில், ரவிந்து சஞ்சன மற்றும் அணித் தலைவர் அயன சிறிவர்தன ஆகியோர் ஜோடி சேர்ந்து 6ஆவது விக்கெட்டுக்காக 77 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பெரேராவின் அதிரடியால் இறுதிப் பந்தில் ராங்பூர் அணிக்கு த்ரில் வெற்றி!

தற்பொழுது நடைபெற்று வரும் 2017/2018 ஆண்டு….

இடது கை துடுப்பாட்ட வீரரான சஞ்சன 64 பந்துகளை எதிர்கொண்டு விளையாடியிருந்த போதும் ஒரு ஓட்டத்தினால் தனது அரைச் சதத்தை தவறவிட்டார். அவரோடு இணைந்த சிறிவர்தன அதிரடியாக ஆடி 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களை விலாசினார்.

எனினும் அதன் பின்னர் வந்த பின் வரிசை வீரர்கள் சிறந்த பங்களிப்பை வழங்காத காரணத்தினால் இலங்கையின் இளம் வீரர்கள் இன்னிங்ஸ் நிறைவடைய 8 பந்துகள் மீதமிருக்கையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் சஞ்சன, சிறிவர்தன தவிர்ந்த வேறு எந்த வீரரும் 30 ஓட்டங்களைத் தாண்டவில்லை. பந்து வீச்சில் மிரட்டிய தர்ஷான் நல்கண்டே 18 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை பதம்பார்த்தார். இஷான் மற்றும் சித்தார்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 221 என்ற வெற்றி இலக்கினை நோக்கி ஆடிய இந்திய இளம் வீரர்கள் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக ஆடி வெறும் 32 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியைப் பெற்றனர்.

இலகு வெற்றியுடன் ஆஷஸ் தொடரை ஆரம்பித்த அவுஸ்திரேலியா

தற்பொழுது நடைபெற்று வரும் 2017/2018 ஆண்டு..

துடுப்பாட்டத்தில் அன்குஷ், பிரியம் மற்றும் அணித் தலைவர் அபிஷேக் ஷர்மா ஆகியோர் அரைச் சதம் கடந்ததுடன், அணித் தலைவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

பந்து வீச்சில் இலங்கை தரப்பு சார்பாக நிபுன் மலிங்க, ரவிந்து சஞ்சன மற்றும் ஹரீன் புத்தில ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

முதல் போட்டியில் தோல்வி கண்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி, தொடரில் தமது இரண்டாவது போட்டியில் இந்திய ரெட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி 28ஆம் திகதி (நாளை) இடம்பெறும்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி – 220 (48.4 ஓவர்கள்) – அயன சிறிவர்தன 59, ரவிந்து சஞ்சன 49, நுவனிந்து பெர்னாண்டோ 26, தர்ஷான் நல்கந்தே 5/18  

இந்திய கிரீன் – 222/3 (32.1 ஓவர்கள்) – பிரியம் கர்க் 64, அபிஷேக் ஷர்மா 52*, அன்குஷ் சிங் 51

போட்டி முடிவு – இந்திய கிரீன் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி