18 வயதிற்குட்பட்ட இலங்கை அணியின் இறுதி 12 வீரர்கள்

227
SL Under 18 Squad Final

எதிர்வரும் ஆசியப் பாடசாலை மட்டத்திலான அணிக்கு 7 பேர் கொண்ட றக்பி கிண்ணத்திற்கான 12 வீரர்களைக் கொண்ட குழாமை இலங்கை அணியை, இலங்கை றக்பி யூனியன் (SLRFU)  இன்று தெரிவு செய்தது.

ஆசிய பாடசாலை மட்டத்திலான அணிக்கு 7 பேர் கொண்ட றக்பி கிண்ணமானது 22ஆம் திகதியிலிருந்து 26ஆம் திகதி வரை ஹொங்கொங், கிங்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

ஆசிய பாடசாலை மட்டத்திலான அணிக்கு 7 பேர் கொண்ட றக்பி போட்டிகள் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடைபெற இருக்கின்றது. இப்போட்டிகளில் 10 அணிகள் 2 குழுக்களாகப் பிரிந்து போட்டியிடுகின்றன. 11ஆம் திகதி குழுக்களுக்கான அணிகள் தீர்மானிக்கப்படும் பொழுது, இலங்கை அணி குழு Bயில் இடம்பெற்றுள்ளதோடு இலங்கை அணியுடன் மலேசியா, கம்போடியா, தாய்லாந்து மற்றும் மொங்கோலியா அணிகள் இடம்பிடித்துள்ளன .

ஜூலை 15ஆம் திகதி இடம்பெற்ற தெரிவின் பொழுது 60 வீரர்களைக் கொண்ட குழாமானது 21 வீரர்களுக்கு குறைக்கப்பட்டு, தற்போது பயிலுனர் மற்றும் தெரிவு சபையின் உதவியுடன் இறுதி 12 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்டுள்ள அணியானது வியாழக்கிழமை ஹொங்கொங் நாட்டை நோக்கிப் பயணமாகவுள்ளது.

புனித தோமஸ் கல்லூரியின் தலைவர் நவீன் ஹெனகங்கணமகே ஹொங்கொங் செல்லும் இலங்கை 18 வயதிற்கு உட்பட்ட அணிக்கு தலைமை தாங்கவுள்ளதோடு, லீக் வெற்றியாளர்களான இசிபதன கல்லூரியின் முக்கிய வீரர்  சுமுது ரன்கொத்கே உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் 3 திரித்துவக் கல்லூரி மற்றும் இசிபதன கல்லூரி வீரர்களும், 2 ஜோசப் மற்றும் தோமஸ் கல்லூரி வீரர்களும், பீட்டர்ஸ் மற்றும் அந்தோனியர் கல்லூரிகளிலிருந்து தலா 1 வீரரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

12 வீரர்களைக் கொண்ட குழாம்

நவீன் ஹெனகங்கணமகே ( தலைவர் ) – புனித தோமஸ் கல்லூரி
சுமுது ரன்கொத்கே( துணை தலைவர் ) – இசிபத்தன கல்லூரி
தியத் பெர்னாண்டோ – புனித பீட்டர்ஸ் கல்லூரி
சதுர செனவிரத்ன – புனித ஜோசப் கல்லூரி
ஹரித் பண்டார – இசிபத்தன கல்லூரி
திழுக்ஷ தங்கே – திரித்துவக் கல்லூரி
அணுக போயகொட – திரித்துவக் கல்லூரி
கிறிஸ்டியன் டி லைல் – புனித தோமஸ் கல்லூரி
சமோத் பெர்னாண்டோ – இசிபத்தன கல்லூரி
வினுல் பெர்னாண்டோ – புனித ஜோசப் கல்லூரி
தினுக் அமரசிங்க – புனித அந்தோனியார் கல்லூரி
அவிஷ்க ஷீக் – திரித்துவக் கல்லூரி