திமுத் எதிர்காலத்தில் சிறந்த அணி ஒன்றை உருவாக்குவார் – திரிமான்ன

68

திமுத் எதிர்காலத்தில் சிறந்த அணி ஒன்றை உருவாக்குவார்” என்று பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் லஹிரு திரிமான்ன நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இன்றியே இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. திமுத் உட்பட இலங்கை அணியின் 10 வீரர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சுற்றுபயணத்தில் பங்கேற்கவில்லை. எனினும் திமுத் கருணாரத்ன சிறந்த அணி ஒன்றை உருவாக்கி வருவதாக திரிமான்ன குறிப்பிட்டார். 

“நூறு சதவீத பாதுகாப்பை இந்தியாவாலும் வழங்க முடியாது” – ருமேஷ் ரத்நாயக்க

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சிறந்த…………..

“அணித்தலைவராக திமுத் சிறந்த பணி ஒன்றை செய்து வருகிறார். உலகக் கிண்ணத்தில் நாம் நன்றாக செயற்பட்டோம். சில போட்டிகளில் நாம் வெற்றி பெற்றோம். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அணி கட்டியெழுப்பப்பட்டு வருவதாக நான் நினைக்கிறேன். திமுத் எதிர்காலத்தில் சிறந்த அணி ஒன்றை உருவாக்குவார் என்று நான் நினைக்கிறேன்” என திரிமான்ன கராச்சியில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை (27) நடைபெறவிருந்த முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி கராச்சியில் பகலிரவு ஆட்டமாக நாளை (01) நடைபெறவுள்ளது. 

“கராச்சி ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு சாதகமானது என்று நான் கேட்டிருக்கிறேன். ஆடுகளத்தை நாம் பார்த்தோம். இங்கு கடந்த சில நாட்களாக மழை பெய்துள்ளது. ஆடுகளத்தில் சற்று ஈரலிப்புத் தன்மையும் புற்களும் இருந்தன. 

பந்துவீச்சாளர்களுக்கும் போதுமான அளவு செயற்பட முடியும் என்று நான் நினைக்கிறேன். மழையால் தடங்கல் ஏற்படாமல் இருந்தால் இரு தரப்புக்கும் சாதகமான ஆடுகளம் ஒன்றை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அஞ்செலோ மெத்திவ்சுக்கு காயம் ஏற்பட்டபோது நான் தலைவராக செயற்பட்டிருக்கிறேன். அப்போது உப தலைவராக நான் இருந்தேன். அதனாலேயே நான் தலைவராக பொறுப்பேற்றேன். அணித்தலைவர் என்பதை தலைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. வீரராக உச்ச திறமையை வெளிப்படுத்துவதே எனது எதிர்பார்ப்பாக உள்ளது. அதேபோன்று சிரேஷ்ட வீரர் என்ற வகையில் அணியை ஒன்றாக இணைத்து எதிரணிக்கு சவால் கொடுக்கவே நான் எதிர்பார்க்கிறேன்” என்று திரிமான்ன குறிப்பிட்டார். 

இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து விலகுவதற்கு சில வீரர்கள் எடுத்து முடிவு பற்றி கருத்து வெளியிட்ட திரிமான்ன,

“இது ஒரு தனிப்பட்ட முடிவு. எல்லோரும் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. சில வீரர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்க விரும்பினாலும் அவர்களின் தாய், தந்தையர், குடும்பத்தினர் விரும்பாமல் இருந்தால் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்க முடியாமல்போகும். பெரும்பாலான வீரர்கள் மறுத்தது இதன் காரணமாகத்தான். 

பாகிஸ்தான் வராத வீரர்கள் இலங்கை அணியில் தமது இடத்தை இழக்கலாம்

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில்…………..

அதற்காக நாம் அவர்களின் முடிவுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். வந்த வீரர்களிடம் இருந்து உச்ச பலனை பெறவே எதிர்பார்க்க வேண்டும். திமுத், அஞ்செலோ ஆகிய அனைத்து வீரர்களும் இங்கு வருபவர்களை வாழ்த்தினார்கள். இருக்கின்ற அணியை வைத்து உச்ச திறமையை வெளிப்படுத்துமாறு தான் அவர்கள் எம்மிடம் கூறினார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<