தென்னாபிரிக்காவுடனான தொடரே என்னை துடுப்பாட்ட வீரராக மாற்றியது – இசுரு உதான

75

ஒருநாள் மற்றும் T20i போட்டிகளில் கடைசி ஓவர்களில் களமிறங்குவதால் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்த இலங்கை அணியின் பந்துவீச்சு சகலதுறை வீரரான இசுரு உதான, இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான தொடரில் துடுப்பெடுத்தாட அதிக நேரம் கிடைத்ததன் பிரதிபலனாகவே தன்னை ஒரு துடுப்பாட்ட வீரராக நிரூபிக்க முடிந்ததாக தெரிவித்தார்.  

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட T20i தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது T20i போட்டி இன்று (07) லாஹூரில் ஆரம்பமாகவுள்ளது.  

மூன்றாவது போட்டிக்கு முன்னர் T20i தொடரை கைப்பற்ற வேண்டும் – தனுஷ்க

இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியாக ………

இந்த நிலையில், முதல் போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியின் பிறகு வீரர்களின் மனநிலை என்ன என்பது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட இசுரு உதான

”உண்மையில் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சிறந்த மனநிலையுடன் உள்ளனர். நாங்கள் உலகின் முதல்நிலை T20i அணியைத் தான் வீழ்த்தினோம். அவர்களும் பலமிக்க அணியொன்றைத் தான் களமிறக்கியிருந்தார்கள்.  

அதேபோல, நாங்களும் இந்தப் போட்டித் தொடருக்கு சிறந்த முறையில் தயாராகினோம். அதற்காக நிறைய விடயங்கள் பற்றி பேசிக் கொண்டோம். எனினும், எமது அணியில் சிரேஷ்ட வீரர்கள் இல்லாத குறையை இளம் வீரர்கள் சிறப்பாக நிவர்த்தி செய்தார்கள்

எதுஎவ்வாறாயினும், மைதானத்துக்குச் சென்றால் அங்குள்ள நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பதைத் தான் நாங்கள் செய்ய வேண்டும். எனவே, முதலாவது போட்டியில் 90 சதவீதமான பங்களிப்பு பந்துவீச்சாளர்களிடம் இருந்து கிடைத்தது. இதுதான் எமது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது” என்றார்

முதல் T20i போட்டியில் வெளிப்படுத்திய திறமை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு இசுரு உதான பதிலளிக்கையில்

உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அணிக்ககாக பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் ஏதாவது செய்வதற்கு தான் நான் எப்போதும் முயற்சி செய்வேன். ஆனால், அது எல்லா போட்டிகளிலும் நடக்கலாம் அல்லது நடக்காமல் விடலாம். எனவே, எதிர்வரும் காலங்களிலும் அணிக்காக எனது 100 சதவீத பங்களிப்பினை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன்””

இளம் வீரர்களின் தன்னம்பிக்கை வெற்றிக்கு உதவியது – தசுன் ஷானக்க

பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்ற ………..

இந்த நிலையில், தனது துடுப்பாட்ட திறமையை வளர்த்துக் கொள்வதற்காக எவ்வாறான பயிற்சிகளை மேற்கொள்கின்றீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த இசுரு உதான

அதற்காக நான் நிறைய பயிற்சிகளை எடுத்து வருகிறேன். அதிலும் குறிப்பாக தென்னாபிரிக்காவுடனான தொடரில் எனக்கு நிறைய நேரம் துடுப்பெடுத்தாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஏழாவது அல்லது எட்டாவது இலக்க வீரரொருவருக்கு போட்டியின் 7ஆவது அல்லது 8ஆவது ஓவரில் இருந்து துடுப்பெடுத்தாடக் கிடைப்பதென்பது மிகவும் அரிது

ஆனாலும் அந்த இடத்தில் களமிறங்கி மிகப் பெரிய ஓட்டங்களைக் குவிப்பது மிகவும் கடினமான விடயம் தான். ஆனாலும், தனிப்பட்ட முறையில் எனது திட்டத்துக்கு அமைய போட்டியை முன்நகர்த்திச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனவே எனது அண்மைக்கால துடுப்பாட்ட முன்னேற்றம் தொடர்பில் நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன்

ஏனெனில் பொதுவாக எனக்கு எப்போதும் கடைசி 2 ஓவர்களில் தான் துடுப்பெடுத்தாடக் கிடைக்கின்றது. உதாரணமாக, கடந ஜனவரி மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரிலும் எனக்கு கடைசி ஓவர்களில் தான் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது

எனவே, அவ்வாறான நேரத்தில் விக்கெட்டில் நீண்ட நேரம் இருந்து பொறுமையாக விளையாடுவதென்பது மிகவும் கடினமான விடயம். ஏனெனில் அந்த நிலைமையில் அணிக்குத் தேவையானதை மாத்திரம் தான் நான் பெற்றுக் கொடுக்க வேண்டும்

எனவே எதிர்வரும் காலங்களில் தென்னாபிரிக்காவுடனான தொடரைப் போல ஆரம்பத்திலேயே துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு கிடைத்தால் எனது துடுப்பாட்டத் திறமையை இன்னும் வெளிக்காட்டுவேன்” என்றார். 

இதேநேரம், பாகிஸ்தானுடன் இன்று (07) நடைபெறவுள்ள 2ஆவது  T20i போட்டிக்கான ஆயத்தம் குறித்து கருத்து வெளியிட்ட அவர்,  

வீரர்கள் அனைவரும் நல்ல மனநிலையுடன் உள்ளனர். நாங்கள் உலகின் நம்பர் 1 T20i அணியைத் தான் தோற்கடித்தோம். நீண்ட காலங்களாக செய்ய முடியாமல் போனதை ஒரு சிறிய அணியாக இங்கு வந்து வீழ்த்தினோம். இந்தத் தோல்வியை பாகிஸ்தான் அணியும் எதிர்பார்த்திருக்காது.  

எனவே அந்தப் போட்டி முடிவடைந்துவிட்டது. இன்று புதிய போட்டி ஒன்று உள்ளது. இந்தப் போட்டியிலும் சிறப்பாக விளையாடி தொடரைக் கைப்பற்றுவதே அனைவரது எதிர்பார்ப்பாகும்” என அவர் தெரிவித்தார்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<