நாம் இரண்டு போட்டிகளிலும் சிறந்த கிரிக்கெட் ஆடவில்லை – சர்பராஸ் அஹமட்

PCB

பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது T20 போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 என கைப்பற்றியுள்ளது. 

பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக டி20 தொடரை வென்ற இலங்கை

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் …….

இவ்வெற்றி மூலம் இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியினை முதல் தடவையாக T20 தொடர் ஒன்றில் வீழ்த்தி இளம் வீரர்களுடன் சாதனை ஒன்றினையும் படைத்திருக்கின்றது. 

இவ்வாறான நிலையில் இலங்கை அணியுடன் இரண்டாவது T20 போட்டியில் தோல்வியினை தழுவியிருந்த பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட், தமது தோல்விக்கான காரணங்களை ஊடகங்களுக்கு பகிர்ந்திருந்தார்.

”நாம் நடைபெற்ற இரண்டு (T20) போட்டிகளிலும் (பந்துவீச்சு, களத்தடுப்பு, துடுப்பாட்டம்) எந்த துறையினை எடுத்த போதிலும் அங்கே சிறப்பாக செயற்பட்டிருக்கவில்லை.” என சர்பராஸ் அஹமட் குறிப்பிட்டிருந்தார். 

அதோடு மோசமாக செயற்பட்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சினையும் சர்பராஸ் அஹமட் விமர்சித்திருந்ததோடு, களத்தடுப்பும் முன்னேற வேண்டும் என தெரிவித்திருந்தார். 

”எங்களது பந்துவீச்சு நுணுக்கங்கள் குறித்து நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டி இருப்பதோடு, களத்தடுப்பிலும் சிறந்த முறையில் செயற்பட வேண்டும். நேற்று (மோசமான களத்தடுப்பினால்) மிக முக்கியமான இரண்டு ரன் அவுட் வாய்ப்புகள் தவறவிடப்பட்டிருந்தன.”  

இலங்கை அணிக்கு வர 10 வருடங்கள் காத்திருந்தேன் – பானுக்க ராஜபக்ஷ

இலங்கை தேசிய அணிக்காக விளையாடுவதற்கு ……..

இன்னும் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு துடுப்பாட்டமும் காரணம் எனக் குறிப்பிட்ட சர்பராஸ், தமது வீரர்கள் கடுமையாக முயற்சி செய்திருந்தனர் என தெரிவித்திருந்தார். 

”துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் முதல் 10 ஓவர்களுக்குள் எமது அணி, பல விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது. இது ஒரு கடினமான வேலை, எமது வீரர்கள் முயற்சி செய்திருந்தனர். இதனால், நாம் அவர்களை அதிகமாக கடிந்து கொள்ளக்கூடாது. அவர்கள் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றேன்”  

இன்னும் சர்பராஸ் அஹமட், பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் சிறப்பாக செயற்பட்ட இலங்கை வீரர்களை பாராட்டியிருந்ததோடு அடுத்த போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆறுதல் வெற்றி ஒன்றினை பெற முயற்சிக்கும் என தெரிவித்திருந்தார்.  

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி, நாளை (9) இரண்டாவது T20 போட்டி இடம்பெற்ற அதே லாஹூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<