சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்ரி நிக்கோல்ஸ் இன் அபார இணைப்பாட்டத்தோடு வலுப் பெற்றிருக்கின்றது.
>> சிறப்பான ஆரம்பத்தினைப் பெற்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி
வெலிங்டன் நகரில் இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகின்றது. ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் அடங்கும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது நியூசிலாந்து அணி 155 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த கேன் வில்லியம்சன் 26 ஓட்டங்களுடனும், ஹென்ரி நிக்கோல்ஸ் 18 ஓட்டங்களுடனும் இருந்தனர்.
தொடர்ந்து போட்டியின் இரண்டாம் நாளில் இன்று துடுப்பாட தொடங்கிய நியூசிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்ததோடு, அவ்வணிக்கு இரண்டாம் நாளின் ஆரம்பம் முதலே கேன் வில்லியம்சன், ஹென்ரி நிக்கோல்ஸ் ஜோடி பலம் சேர்க்கத் தொடங்கியது.
அதன்படி இலங்கைப் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்யத் தொடங்கிய வில்லியம்சன், நிக்கோல்ஸ் ஆகிய இருவரும் சதங்களை விளாசியதோடு நியூசிலாந்து அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக இமாலய இணைப்பாட்டம் ஒன்றினையும் உருவாக்கினர். இரண்டு வீரர்களது இணைப்பாட்டமும் இரண்டாம் நாளின் மதிய போசணம், தேநீர் இடைவேளை என்பவற்றினை தாண்டி நீடித்ததோடு, இறுதியில் இந்த இணைப்பாட்டம் கேன் வில்லியம்சனின் இரட்டைச்சதத்தினை அடுத்து முடிவுக்கு வந்தது.
பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் பதில் களத்தடுப்பு வீரராக களம் நுழைந்த ரமேஷ் மெண்டிஸிடம் பிடிகொடுத்த கேன் வில்லியம்சன் 23 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 215 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இதேநேரம் வில்லியம்சன் இந்த இரட்டைச்சதம் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஆறாவது முறையாக இரட்டைச் சதம் விளாசியதோடு, டெஸ்ட் போட்டிகளில் ஆறு இரட்டைச்சதங்களை விளாசி சாதனை செய்த துடுப்பாட்ட ஜாம்பவன்களான மார்வன் அத்தபத்து, ஜாவேட் மியான்டாட், விரேந்திர ஷேவாக், யூனூஸ் கான் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பட்டியலிலும் இணைந்து கொண்டார்.
அத்துடன் மூன்றாம் விக்கெட்டுக்காக நிக்கோல்ஸ் உடன் இணைந்து 363 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த கேன் வில்லியம்சன், நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் மூன்றாம் விக்கெட்டுக்காக பெற்ற இரண்டாவது அதிகூடிய இணைப்பாட்டத்தினையும் பதிவு செய்தார்.
கேன் வில்லியம்சனின் விக்கெட்டின் பின்னர் ஹென்ரி நிக்கோல்ஸ் உம் இரட்டைச்சதம் விளாச, நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 580 ஓட்டங்களுடன் தமது ஆட்டத்தை இடை நிறுத்தியது.
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த ஹென்ரி நிக்கோல்ஸ் தன்னுடைய கன்னி டெஸ்ட் இரட்டைச் சதத்தோடு 240 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 15 பெளண்டரிகள் அடங்கலாக 200 ஓட்டங்கள் பெற்றார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித 2 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூரிய மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர்.
>> “அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரால் வீரர்களுக்கு மகிழ்ச்சி” – திமுத்!
பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து சற்று தடுமாற்றமான நிலையில் காணப்படுகின்றது.
அத்துடன் இரண்டாம் நாளின் நிறைவில் இலங்கை அணி தற்போது நியூசிலாந்தை விட 554 ஓட்டங்கள் பின்தங்கியும் காணப்படுகின்றது. இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸின் போது முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த ஓசத பெர்னாண்டோ 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருக்க, அடுத்த விக்கெட்டான குசல் மெண்டிஸ் ஓட்டம் எதனையும் பெறாது ஆட்டமிழந்தார். இதேநேரம் களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் திமுத் கருணாரட்ன 16 ஓட்டங்களுடனும், Nightwatchman துடுப்பாட்டவீரரான பிரபாத் ஜயசூரிய 04 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.
அதேவேளை நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் டோக் பிரஸ்வெல் மற்றும் மேட் ஹென்ரி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tom Latham | c Prabath Jayasuriya b Kasun Rajitha | 21 | 73 | 0 | 0 | 28.77 |
Devon Conway | c & b Dhananjaya de Silva | 78 | 108 | 13 | 0 | 72.22 |
Kane Williamson | c b Prabath Jayasuriya | 215 | 296 | 23 | 2 | 72.64 |
Henry Nicholls | not out | 200 | 240 | 15 | 4 | 83.33 |
Daryl Mitchell | c & b Kasun Rajitha | 17 | 12 | 1 | 1 | 141.67 |
Tom Blundell | not out | 17 | 17 | 0 | 0 | 100.00 |
Extras | 32 (b 2 , lb 17 , nb 8, w 5, pen 0) |
Total | 580/4 (123 Overs, RR: 4.72) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 32 | 6 | 126 | 2 | 3.94 | |
Asitha Fernando | 26 | 6 | 110 | 0 | 4.23 | |
Lahiru Kumara | 25 | 1 | 164 | 0 | 6.56 | |
Dhananjaya de Silva | 19 | 3 | 75 | 1 | 3.95 | |
Prabath Jayasuriya | 21 | 1 | 86 | 1 | 4.10 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c Tom Blundell b Matt Henry | 6 | 32 | 0 | 0 | 18.75 |
Dimuth Karunaratne | c Tom Latham b Michael Bracewell | 89 | 188 | 9 | 0 | 47.34 |
Kusal Mendis | c Devon Conway b Doug Bracewell | 0 | 10 | 0 | 0 | 0.00 |
Prabath Jayasuriya | c Daryl Mitchell b Tim Southee | 4 | 17 | 1 | 0 | 23.53 |
Angelo Mathews | c Tom Blundell b Matt Henry | 1 | 10 | 0 | 0 | 10.00 |
Dinesh Chandimal | st Tom Blundell b Michael Bracewell | 37 | 92 | 4 | 0 | 40.22 |
Dhananjaya de Silva | c Tim Southee b Michael Bracewell | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Nishan Madushka | c Michael Bracewell b Matt Henry | 19 | 31 | 3 | 0 | 61.29 |
Kasun Rajitha | run out (Tom Latham) | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Lahiru Kumara | not out | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Asitha Fernando | c Kane Williamson b Blair Tickner | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 7 (b 4 , lb 1 , nb 1, w 1, pen 0) |
Total | 164/10 (66.5 Overs, RR: 2.45) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tim Southee | 15 | 6 | 22 | 1 | 1.47 | |
Matt Henry | 20 | 6 | 44 | 3 | 2.20 | |
Doug Bracewell | 12 | 7 | 19 | 1 | 1.58 | |
Michael Bracewell | 12 | 1 | 50 | 3 | 4.17 | |
Blair Tickner | 6.5 | 1 | 21 | 1 | 3.23 | |
Daryl Mitchell | 1 | 0 | 3 | 0 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c WA Young b Doug Bracewell | 5 | 36 | 0 | 0 | 13.89 |
Dimuth Karunaratne | c Devon Conway b Tim Southee | 51 | 83 | 4 | 0 | 61.45 |
Kusal Mendis | c Kane Williamson b Matt Henry | 50 | 106 | 8 | 0 | 47.17 |
Angelo Mathews | c Michael Bracewell b Blair Tickner | 2 | 44 | 0 | 0 | 4.55 |
Dinesh Chandimal | c Doug Bracewell b Blair Tickner | 62 | 92 | 8 | 0 | 67.39 |
Dhananjaya de Silva | c Henry Nicholls b Michael Bracewell | 98 | 185 | 12 | 1 | 52.97 |
Nishan Madushka | c Tim Southee b Blair Tickner | 39 | 93 | 4 | 1 | 41.94 |
Kasun Rajitha | c Kane Williamson b Tim Southee | 20 | 110 | 1 | 0 | 18.18 |
Prabath Jayasuriya | c Blair Tickner b Michael Bracewell | 2 | 45 | 0 | 0 | 4.44 |
Lahiru Kumara | c Michael Bracewell b Tim Southee | 7 | 45 | 1 | 0 | 15.56 |
Asitha Fernando | not out | 0 | 15 | 0 | 0 | 0.00 |
Extras | 22 (b 0 , lb 6 , nb 2, w 14, pen 0) |
Total | 358/10 (142 Overs, RR: 2.52) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tim Southee | 27 | 13 | 51 | 3 | 1.89 | |
Matt Henry | 29 | 8 | 59 | 1 | 2.03 | |
Michael Bracewell | 42 | 14 | 100 | 2 | 2.38 | |
Doug Bracewell | 18 | 3 | 58 | 1 | 3.22 | |
Blair Tickner | 26 | 6 | 84 | 3 | 3.23 |
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<