Home Tamil ரூபனின் சாதனைப் பந்துவீச்சில் நமீபியாவுக்கு முதல் வெற்றி

ரூபனின் சாதனைப் பந்துவீச்சில் நமீபியாவுக்கு முதல் வெற்றி

ICC T20 World Cup – 2021

176
GettyImages

ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்று லீக் போட்டியில் நமீபியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றில் குழு 2இல் இடம்பெற்றுள்ள நமீபியா அணி, தமது முதல் போட்டியில் ஸ்கொட்லாந்தை எதிர்கொண்டது.

அபுதாபியில் இன்று இரவு (27) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நமீபியா அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. அதிலும் ஜார்ஜ் அந்த அணியின் ஆரம்ப வீரரான ஜோர்ஜ் முன்சி, கெலம் மெக்லொய்ட் மற்றும் அணித்தலைவர் ரிச்சி பெர்ரிங்டன் ஆகிய மூன்று வீரர்களும், ரூபன் டிரம்பெல்மென் வீசிய முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளிலும் டக்அவுட் ஆகி ஏமாற்றமளித்தனர்.

<<பங்களாதேஷினை வீழ்த்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணி>>

இதன்மூலம் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் போட்டியின் முதல் ஓவரில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரராக 23 வயது வேகப்பந்துவீச்சாளரான ரூபன் டிரம்பெல்மென் சாதனை படைத்தார்.

இந்த நிலையில், 6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிறிஸ் கிரீவ்ஸ் – மைக்கல் லீஸ்க் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு வலுச்சேர்த்தனர். இதில் மைக்கல் லீஸ்க் 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அரைச்சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதன்மூலம் ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

நமீபியா அணியின் பந்துவீச்சில் ரூபன் டிரம்பெல்மென் 17 ஓட்;டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஜான் ப்ரைலின்க் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

<<அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி>>

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய நமீபியா அணிக்கு கிரைக் வில்லியம்ஸ் – மைக்கல் வான் லிங்கன் ஜோடி சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தது. இதில் மைக்கல் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஸான் கிரீன் (9), கெஹார்ட் எராஸ்மஸ் (4) ஆகிய இருவரும் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேறினர்.

அதன்பின் 23 ஓட்டங்களை எடுத்திருந்த கிரைக் வில்லியம்ஸும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும், அதைத்தொடர்ந்து களமிறங்கிய டேவிட் வீஸி – ஜொஹான்ஸ் ஸ்மித் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

<<மே.தீவுகளை வீழ்த்தி வெற்றிக் ஓட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்கா>>

இதன்மூலம் நமீபியா அணி 19.1 ஓவர்களிலேயே வெற்றியிலக்கை அடைந்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது.

T20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் தடவையாக பங்குபற்றியுள்ள நமீபியா, முதல் தடவையாக சுபர் 12 சுற்றுக்குத் தெரிவாகி, அதில் விளையாடிய முதல் போட்டியிலேயே வெற்றியீட்டி சாதனை படைத்தது.

அத்துடன், இந்த வெற்றியின் மூலம் நமீபியா அணி 2 புள்ளிகள் பெற்று குழு 2இல் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை பின்தள்ளி 3ஆவது இடத்தில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஸ்கொட்லாந்து அணி – 1090/8 (20) – மைக்கல் லீஸ்க் 44, கிறிஸ் கிரீவ்ஸ் 25, ரூபன் டிரம்பெல்மென் 17/3, ஜான் ப்ரைலின்க் 10/2

நமீபியா அணி – 115/6 (19.1) – ஜொஹான்ஸ் ஸ்மித் 32, கிரைக் வில்லியம்ஸ் 23, மைக்கல் லீஸ்க் 12/2

முடிவு – நமீபியா அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<


Result


Namibia
115/6 (19.1)

Scotland
109/8 (20)

Batsmen R B 4s 6s SR
George Munsey b Ruben Trumpelmann 0 1 0 0 0.00
Matthew Cross b Jan Frylinck 19 33 1 0 57.58
Calum MacLeod c Zane Green b Ruben Trumpelmann 0 2 0 0 0.00
Richie Berrington lbw b Ruben Trumpelmann 0 1 0 0 0.00
Craig Wallace lbw b David Wiese 4 13 0 0 30.77
Michael Leask b JJ Smit 44 27 4 2 162.96
Chris Greaves run out () 25 32 2 0 78.12
Mark Watt c Gerhard Erasmus b Jan Frylinck 3 6 0 0 50.00
Josh Davey not out 5 5 0 0 100.00


Extras 9 (b 0 , lb 5 , nb 0, w 4, pen 0)
Total 109/8 (20 Overs, RR: 5.45)
Bowling O M R W Econ
Ruben Trumpelmann 4 0 17 3 4.25
Jan Frylinck 4 0 10 2 2.50
JJ Smit 4 0 20 1 5.00
David Wiese 4 0 22 1 5.50
Bernard Scholtz 2 0 16 0 8.00
Michael van Lingen 1 0 12 0 12.00
Pikky Ya France 1 0 7 0 7.00


Batsmen R B 4s 6s SR
Craig Williams st Matthew Cross b Mark Watt 23 29 0 1 79.31
Michael van Lingen c Richie Berrington b Safyaan Sharif 18 24 2 0 75.00
Zane Green c George Munsey b Chris Greaves 9 13 1 0 69.23
Gerhard Erasmus b Michael Leask 4 6 0 0 66.67
David Wiese c Mark Watt b Michael Leask 16 14 0 0 114.29
JJ Smit not out 32 23 1 0 139.13
Jan Frylinck c Calum MacLeod b Bradley Wheal 2 4 0 0 50.00
Pikky Ya France not out 0 2 0 0 0.00


Extras 11 (b 0 , lb 9 , nb 0, w 2, pen 0)
Total 115/6 (19.1 Overs, RR: 6)
Bowling O M R W Econ
Bradley Wheal 4 0 14 1 3.50
Josh Davey 2 0 15 0 7.50
Safyaan Sharif 3.1 0 21 1 6.77
Chris Greaves 4 0 22 1 5.50
Mark Watt 4 0 22 1 5.50
Michael Leask 2 0 12 2 6.00