Home Tamil இரண்டாவது டெஸ்ட்டில் வலுப்பெற்றுள்ள இந்திய அணி

இரண்டாவது டெஸ்ட்டில் வலுப்பெற்றுள்ள இந்திய அணி

174
BCCI

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்த நிலையில் இந்திய அணி இலங்கை அணிக்கு 447 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

இந்திய – இலங்கை இரண்டாவது டெஸ்ட்; முதல் நாளில் 16 விக்கெட்டுக்கள்

பெங்களூரில் பகலிரவு மோதலாக நடைபெறுகின்ற இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று நிறைவுக்கு வரும் போது, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை (252) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 86 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலையில் காணப்பட்டிருந்தது.

இலங்கை அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காமல் நின்ற நிரோஷன் டிக்வெல்ல 13 ஓட்டங்களுடன் நிற்க, லசித் எம்புல்தெனிய ஓட்டமேதுமின்றி நின்றிருந்தார்.

இதன் பின்னர் போட்டியின் இன்றைய இரண்டாம் நாளில் தன்னுடைய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி, இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பித்து அரை மணி நேரத்திற்குள் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 109 ஓட்டங்களை மாத்திரம் முதல் இன்னிங்ஸில் எடுத்தது. அத்துடன் இது இலங்கை அணி இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் எடுத்த மூன்றாவது குறைந்த ஓட்டங்களாகவும் பதிவானது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இன்றைய நாளில் நம்பிக்கை தருவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிரோஷன் டிக்வெல்ல 21 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் ஜஸ்பிரிட் பும்ரா வெறும் 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்ததோடு, டெஸ்ட் போட்டிகளில் பும்ராவிற்கு இது 8ஆவது 5 விக்கெட்டுக்கள் பிரதியாகவும் பதிவானது. மறுமுனையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் மொஹமட் சமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.

பின்னர் 143 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இந்திய அணிக்கு ஆரம்ப வீரர்களில் ஒருவரான மயான்க் அகர்வால் பிரகாசிக்காது போயினும் ஏனைய ஆரம்ப வீரரான ரோஹிட் சர்மா, இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளை வரை நிதானமான முறையில் ஓட்டங்கள் எடுத்து பெறுமதி சேர்ந்திருந்தார்.

இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளையினை அடுத்து தொடர்ந்த போட்டியில் இந்திய அணியின் இரண்டாம் விக்கெட்டாக ரோஹிட் சர்மா ஆட்டமிழந்தார். தனன்ஞய டி சில்வாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த ரோஹிட் சர்மா 4 பௌண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

ரோஹிட் சர்மாவின் விக்கெட்டின் பின்னர் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி உருவாக்க ஹனுமா விஹாரி மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுக்கள், விரைவான முறையில் பறிபோயிருந்தது. பிரவீன் ஜயவிக்ரமவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த இந்த வீரர்களில் ஹனுமா விஹாரி 35 ஓட்டங்களுடன் ஓய்வறை நடக்க, விராட் கோலி 13 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

அதிக ஒப்பந்த தொகையைப் பெறும் வனிந்து, சமீர

பின்னர் புதிதாக களம் வந்த ரிசாப் பாண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டத்தோடு, இரண்டாம் நாளின் இராப் போசணத்தின் பின்னர் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இந்திய அணி 303 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து இடைநிறுத்தியது.

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரிசாப் பாண்ட் 31 பந்துகளுக்கு 7 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 50 ஓட்டங்கள் பெற்றிருந்ததோடு, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிவிரைவாக அரைச்சதம் (30 பந்துகளில்) பெற்ற வீரராகவும் மாறினார். மறுமுனையில் அரைச்சதம் விளாசிய ஸ்ரேயாஸ் அய்யர் 9 பௌண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் பிரவீன் ஜயவிக்ரம 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, லசித் எம்புல்தெனிய 3 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொக்குவில் இந்துக் கல்லூரியை வீழ்த்திய ஸ்கந்தவரோதய கல்லூரி

இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 447 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைவதற்காக இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணி, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 28 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்படுகின்றது.

இலங்கை அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காமல் நிற்கும் திமுத் கருணாரட்ன 10 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் காணப்படுகின்றனர்.

போட்டியின் மூன்றாம் நாளில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடரவுள்ள இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 419 ஓட்டங்கள் தேவையாக உள்ளது.

போட்டியின் சுருக்கம்


Result


Sri Lanka
109/10 (35.5) & 208/10 (59.3)

India
252/10 (59.1) & 303/9 (68.5)

Batsmen R B 4s 6s SR
Rohit Sharma c Dhananjaya Lakshan b Lasith Embuldeniya 15 25 1 1 60.00
Mayank Agarwal run out (Niroshan Dickwella) 4 7 1 0 57.14
Hanuma Vihari c Niroshan Dickwella b Praveen Jayawickrama 31 81 4 0 38.27
Virat Kohli lbw b Dhananjaya de Silva 23 48 2 0 47.92
Rishab Pant b Lasith Embuldeniya 39 26 7 0 150.00
Shreyas Iyer st Niroshan Dickwella b Praveen Jayawickrama 92 98 10 4 93.88
Ravindra Jadeja c Lahiru Thirimanne b Lasith Embuldeniya 4 14 1 0 28.57
Ravichandran Ashwin c Niroshan Dickwella b Dhananjaya de Silva 13 33 1 0 39.39
Axar Patel b Suranga Lakmal 9 7 0 1 128.57
Mohammed Shami c Dhananjaya de Silva b Praveen Jayawickrama 5 8 1 0 62.50
Jasprit Bumrah b 0 10 0 0 0.00


Extras 17 (b 7 , lb 8 , nb 2, w 0, pen 0)
Total 252/10 (59.1 Overs, RR: 4.26)
Fall of Wickets 1-10 (1.3) Mayank Agarwal, 2-29 (9.3) Rohit Sharma, 3-76 (26.2) Hanuma Vihari, 4-86 (27.3) Virat Kohli, 5-126 (32.4) Rishab Pant, 6-148 (36.4) Ravindra Jadeja, 7-183 (47.1) Ravichandran Ashwin, 8-215 (49.6) Axar Patel, 9-229 (53.5) Mohammed Shami, 10-252 (59.1) Shreyas Iyer,

Bowling O M R W Econ
Vishwa Fernando 3 0 18 0 6.00
Suranga Lakmal 8 3 12 1 1.50
Lasith Embuldeniya 24 2 94 3 3.92
Praveen Jayawickrama 17.1 3 81 3 4.74
Dhananjaya de Silva 7 1 32 2 4.57
Batsmen R B 4s 6s SR
Kusal Mendis c Shreyas Iyer b Jasprit Bumrah 2 7 0 0 28.57
Dimuth Karunaratne b Mohammed Shami 4 13 1 0 30.77
Lahiru Thirimanne c Shreyas Iyer b Jasprit Bumrah 8 6 2 0 133.33
Angelo Mathews c Rohit Sharma b Jasprit Bumrah 43 85 3 2 50.59
Dhananjaya de Silva lbw b Mohammed Shami 10 24 1 0 41.67
Charith Asalanka c Ravichandran Ashwin b Axar Patel 5 8 1 0 62.50
Niroshan Dickwella c Rishab Pant b Jasprit Bumrah 21 38 1 0 55.26
Lasith Embuldeniya c Rishab Pant b Jasprit Bumrah 1 16 0 0 6.25
Suranga Lakmal b Ravichandran Ashwin 5 9 0 0 55.56
Praveen Jayawickrama not out 1 1 0 0 100.00
Vishwa Fernando st b 8 8 0 0 100.00


Extras 1 (b 1 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 109/10 (35.5 Overs, RR: 3.04)
Fall of Wickets 1-2 (2.1) Kusal Mendis, 2-14 (4.2) Lahiru Thirimanne, 3-14 (5.1) Dimuth Karunaratne, 4-28 (11.5) Dhananjaya de Silva, 5-50 (17.3) Charith Asalanka, 6-85 (28.1) Angelo Mathews,

Bowling O M R W Econ
Jasprit Bumrah 10 4 24 5 2.40
Ravichandran Ashwin 8.5 1 30 2 3.53
Mohammed Shami 6 1 18 2 3.00
Ravindra Jadeja 6 1 15 0 2.50
Axar Patel 5 1 21 1 4.20
Batsmen R B 4s 6s SR
Mayank Agarwal c Dhananjaya de Silva b Lasith Embuldeniya 22 34 0 0 64.71
Rohit Sharma c Angelo Mathews b Dhananjaya de Silva 46 79 0 0 58.23
Hanuma Vihari b Praveen Jayawickrama 35 79 0 0 44.30
Virat Kohli lbw b Praveen Jayawickrama 13 16 0 0 81.25
Rishab Pant c & b Praveen Jayawickrama 50 31 0 0 161.29
Shreyas Iyer lbw b Lasith Embuldeniya 67 87 0 0 77.01
Ravindra Jadedja b Avishka Fernando 22 45 0 0 48.89
Ravichandran Ashwin c Niroshan Dickwella b Praveen Jayawickrama 13 25 0 0 52.00
Axar Patel b 9 10 0 0 90.00
Mohammed Shami not out 16 8 0 0 200.00


Extras 10 (b 8 , lb 1 , nb 1, w 0, pen 0)
Total 303/9 (68.5 Overs, RR: 4.4)
Bowling O M R W Econ
Suranga Lakmal 10 2 34 0 3.40
Lasith Embuldeniya 20.5 1 87 3 4.24
Vishwa Fernando 10 2 48 1 4.80
Dhananjaya de Silva 9 0 47 1 5.22
Praveen Jayawickrama 19 2 78 4 4.11


Batsmen R B 4s 6s SR
Lahiru Thirimanne lbw b Jasprit Bumrah 0 3 0 0 0.00
Dimuth Karunaratne b 107 174 0 0 61.49
Kusal Mendis st b 54 30 0 0 180.00
Angelo Mathews b 1 5 0 0 20.00
Dhananjaya de Silva c & b 4 21 0 0 19.05
Niroshan Dickwella st b 12 39 0 0 30.77
Charith Asalanka c & b 5 20 0 0 25.00
Lasith Embuldeniya lbw b 2 22 0 0 9.09
Suranga Lakmal b 1 4 0 0 25.00
Vishwa Fernando c & b 2 6 0 0 33.33
Praveen Jayawickrama not out 0 4 0 0 0.00


Extras 20 (b 16 , lb 3 , nb 1, w 0, pen 0)
Total 208/10 (59.3 Overs, RR: 3.5)
Bowling O M R W Econ
Jasprit Bumrah 9 4 23 3 2.56
Mohammed Shami 6 0 26 0 4.33
Ravichandran Ashwin 19.3 3 55 4 2.85
Ravindra Jadedja 14 2 48 1 3.43
Axar Patel 11 1 37 2 3.36



போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<