கொக்குவில் இந்துக் கல்லூரியை வீழ்த்திய ஸ்கந்தவரோதய கல்லூரி

U19 Schools Cricket 2022

255

யாழ்ப்பாணத்தின் ஸ்கந்தவரோதய மைதானத்தில் நடைபெற்ற கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு எதிரான டிவிஷன் 3 பாடசாலை 19 வயதின் கீழ் ஒருநாள் போட்டியில் ஸ்கந்தவரோதய கல்லூரி அணி  14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்துக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஸ்கந்தவரோதய அணிக்கு கடுமையான சவாலை கொக்குவில் இந்துக் கல்லூரி அணி கொடுத்தது.

>>அதிக ஒப்பந்த தொகையைப் பெறும் வனிந்து, சமீர

இந்துக் கல்லூரியின் பந்துவீச்சில் சாந்தகுமார் தினேஷ்குமார் மற்றும் ஜெயகுமார் அனோஜன் ஆகியோர் அபாரமாக பந்துவீச, ஸ்கந்தவரோதய அணி 44.3 ஓவர்கள் நிறைவில் 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ஸ்கந்தவரோதய அணியின் சார்பாக துடுப்பாட்டத்தில் அணிக்கு அதிகபட்சமாக 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, கே. சீரலன் 20 ஓட்டங்களையும், எஸ். துவிஷ்ணன் 18 ஓட்டங்களையும் மத்தியவரிசையில் பெற்றுக்கொடுத்திருந்தனர். பந்துவீச்சில், தினேஷ்குமார் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அனோஜன் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை் வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்துக் கல்லூரி அணி ஆரம்பத்தில் நிதானமாக ஓட்டங்களை குவித்துவந்த போதும், 69 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மத்தியவரிசையில், அனோஜன் 16 ஓட்டங்களையும், அபிராம் 15 ஓட்டங்களையும், தினேஷ்குமார் 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து வெற்றிக்கு சற்று அடித்தளமிட்டனர்.

இருப்பினும், அடுத்துவந்த வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுக்க 72 ஓட்டங்களுக்கு இந்துக் கல்லூரி அணி 8 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியாக வினோத் பாப்ஜாய் தனோஜன் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தாலும், இந்துக் கல்லூரி அணி 27.3 ஓவர்கள் நிறைவில் 124 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஸ்கந்தவரோதய கல்லூரி சார்பாக W ஸ்டீபன் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சுருக்கம்

  • ஸ்கந்தவரோதய கல்லூரி – 138/10, (44.3), கௌரி சங்கர் 24, சீரலன் 20, தினேஷ்குமார் 18/4, அனோஜன் 39/3
  • இந்துக் கல்லூரி – 124/10 (27.3), தனோஜ் 27, அனோஜ் 16, அபிராம் 15, ஸ்டீபன் 35/4
  • முடிவு – ஸ்கந்தவரோதய கல்லூரி அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<