Shadow Players திட்டத்தினை ஆரம்பித்துள்ள இலங்கை கிரிக்கெட்

168

திறமையான வீரர்களுக்கு தேசிய கிரிக்கெட் அணியில் வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்குடன், இலங்கை A கிரிக்கெட் அணி மற்றும் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி ஆகியவற்றினை விருத்தி செய்யவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளரான பிரமோத்ய விக்ரமசிங்க தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருக்கின்றார்.  

பங்களாதேஷ் அணியுடன் இணைந்துக்கொண்ட சகீப், முஷ்தபிசூர்

இவ்வாறு விருத்தி செய்யப்படவுள்ள இலங்கை A கிரிக்கெட் அணி மற்றும் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி ஆகியவற்றில் காணப்படும் வீரர்கள், நிழல் வீரர்கள் (Shadow Players) திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு தேவையேற்படும் போது இலங்கை தேசிய அணியில் உதிரி வீரர்களாக உபயோகம் செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது. 

கொவிட்-19 வைரஸ் கடந்த 15 மாதங்களாக இலங்கை A கிரிக்கெட் அணி மற்றும் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி ஆகிய இரண்டு அணிகளதும் சுற்றுத் தொடர்களை இரத்துச் செய்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், நிழல் வீரர்கள் திட்டம் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாக காணப்படுகின்றது. 

இந்த நிழல் வீரர்கள் திட்டத்திற்குள் உள்வாங்கப்படவுள்ள வீரர்கள் அனைவரும் கொவிட்-19 வைரஸ் தொடர்பிலான PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், உடற்தகுதி சோதனைகளை அடுத்து தமக்கான பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளனர். 

கொவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கிண்ணம்

அதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இவ்வாறு நிழல் வீரர்கள் திட்டத்தில் தெரிவு செய்யப்படும் வீரர்கள் கொண்ட இலங்கை A கிரிக்கெட் அணியினை எதிர்வரும் ஜூலை மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ள வைப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுவது குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

இதேநேரம், நிழல்வீரர்கள் திட்டத்தில் உள்வாங்கப்படும் வீரர்கள் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் அமைந்துள்ள உயர்செயற்திறன் நிலையத்தில் தமது பயிற்சிகளை முன்னெடுப்பர் எனக் கூறப்பட்டிருக்கின்றது. 

பயிற்சிக் குழாத்தில் உள்வாங்கப்படும் வீரர்கள் 

அஷைன் டேனியல், சாமிக்க டி சில்வா, அம்ஷி டி சில்வா, சரித் அசலன்க, தனன்ஞய லக்ஷான், இஷான் ஜயரட்ன, ஜனித் லியனகே, லஹிரு உதான, கலன பெரேரா, கல்ஹார செனரத்ன, கமில் மிஷார, மஹேஷ் தீக்ஷன, நுவான் துஷார, சம்மு அஷான், மொஹமட் சிராஸ், நிமேஷ் விமுக்தி, நிஷான் மதுஷ்க, நிஷான் பீரிஸ், நுவனிந்து பெர்னாண்டோ, பவன் ரத்நாயக்க, ப்ரமோத் மதுவன்த, சசிந்து கொலம்பகே, சதீர சமரவிக்ரம, சஷிக்க துல்ஷான், சஹான் ஆராச்சிகே, சமிந்த பெர்னாண்டோ, சங்கீத் கூரே

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…