Home Tamil ஜடேஜாவின் அசத்தல் துடுப்பாட்டம்; தடுமாறும் இலங்கை கிரிக்கெட் அணி

ஜடேஜாவின் அசத்தல் துடுப்பாட்டம்; தடுமாறும் இலங்கை கிரிக்கெட் அணி

178
Sri Lanka Tour of India 2022 - 1st Test Day 02

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் இந்திய அணி ரவிந்திர ஜடேஜாவின் அசத்தல் சதம் மற்றும் பந்துவீச்சாளர்களின் அபாரம் என சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி முன்னிலை அடைந்திருக்கின்றது.

>> பாண்ட், விஹாரியின் ஆட்டத்தோடு வலுப்பெற்றுள்ள இந்திய அணி

நேற்று (04) மொஹாலியில் ஆரம்பித்திருந்த இந்த டெஸ்ட் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 357 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தது.

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆட்டமிழக்காது நின்ற ரவிந்திர ஜடேஜா 45 ஓட்டங்களுடன் காணப்பட்டிருக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் 10 ஓட்டங்களுடன் களத்தில் நின்றிருந்தார்.

இன்று போட்டியின் இரண்டாம் நாளில் முதல் இன்னிங்ஸினைத் தொடர்ந்த இந்திய அணிக்கு களத்தில் இருந்த ஜடேஜா – அஸ்வின் ஜோடி 7ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக இரண்டாம் நாள் மதிய போசண இடைவேளை வரை 130 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருந்தது. இந்திய அணியின் 7ஆம் விக்கெட்டாக சுரங்க லக்மாலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 12ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 8 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பின்னர் ரவிந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக்கொண்ட அவரின் இரண்டாவது சதத்துடன் இரண்டாம் நாளின் மதிய போசண இடைவேளையைத் தொடர்ந்து அணிக்கு பலம் சேர்த்தார். தொடர்ந்து இந்திய அணியின் 9ஆவது விக்கெட்டுக்காக மொஹமட் சமியுடன் அவர் 103 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர இந்திய அணி இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளை வருவதற்கு முன்னர் 8 விக்கெட்டுக்களை இழந்து 574 ஓட்டங்கள் பெற்றவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இடைநிறுத்தியது.

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆட்டமிழக்காமல் இருந்த ரவிந்திர ஜடேஜா 228 பந்துகளில் 17 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 175 ஓட்டங்களை எடுத்திருக்க, ஆட்டமிழக்காமல் இருந்த ஏனைய வீரரான மொஹமட் சமி 20 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையை அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணி தமது எதிர்பார்ப்பு வீரர்களான திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமான்ன, அஞ்சலோ மெதிவ்ஸ் ஆகியோர்களது விக்கெட்டுக்களை துரதிஷ்டவசமான LBW மூலம்  பறிகொடுத்து போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.

>> கிரிக்கெட் உலகை உலுக்கியுள்ள ஷேன் வோர்னின் மரணச் செய்தி

இரண்டாம் நாள் ஆட்டநேர நிறைவில் இந்திய அணியினை விட 466 ஓட்டங்கள் பின்தங்கியிருக்கும் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை நோக்கும் போது திமுத் கருணாரட்ன 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதேநேரம் இரண்டாம் நாள் நிறைவில் ஆட்டமிழக்காமல் நிற்கும் பெதும் நிஸ்ஸங்க 26 ஓட்டங்களுடன் நிற்க, சரித் அசலன்க ஒரு ஓட்டத்துடன் காணப்படுகின்றார். தற்போது களத்தில் ஆட்டமிழக்காமல் நிற்கும் இரு வீரர்களுக்கும் இலங்கை அணியினை போட்டியின் மூன்றாம் நாளில் சரிவிலிருந்து மீட்க வேண்டிய கட்டாய நிலை காணப்படுகின்றது.

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுக்களையும், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்


Result


Sri Lanka
174/10 (65) & 178/10 (60)

India
574/8 (129.2)

Batsmen R B 4s 6s SR
Mayank Agarwal lbw b Lasith Embuldeniya 33 49 5 0 67.35
Rohit Sharma c Suranga Lakmal b Lahiru Kumara 29 28 6 0 103.57
Hanuma Vihari b Vishwa Fernando 58 128 5 0 45.31
Virat Kohli b Lasith Embuldeniya 45 76 5 0 59.21
Rishabh Pant b Suranga Lakmal 96 97 9 4 98.97
Shreyas Iyer lbw b Dhananjaya de Silva 27 48 3 0 56.25
Ravindra Jadeja not out 175 228 17 3 76.75
Ravichandran Ashwin c Niroshan Dickwella b Suranga Lakmal 61 82 8 0 74.39
Jayant Yadav c Lahiru Thirimanne b Vishwa Fernando 2 18 0 0 11.11
Mohammed Shami not out 20 34 3 0 58.82


Extras 28 (b 4 , lb 12 , nb 12, w 0, pen 0)
Total 574/8 (129.2 Overs, RR: 4.44)
Fall of Wickets 1-52 (9.5) Rohit Sharma, 2-80 (18.3) Mayank Agarwal, 3-170 (43.3) Virat Kohli, 4-175 (46.3) Hanuma Vihari, 5-228 (61.1) Shreyas Iyer, 6-332 (80.5) Rishabh Pant, 7-462 (109.4) Ravichandran Ashwin, 8-471 (113.6) Jayant Yadav,

Bowling O M R W Econ
Suranga Lakmal 25 1 90 2 3.60
Vishwa Fernando 26 1 135 2 5.19
Lahiru Kumara 10.5 1 52 1 4.95
Lasith Embuldeniya 46 3 188 2 4.09
Dhananjaya de Silva 18.2 1 79 1 4.34
Charith Asalanka 3.1 0 14 0 4.52
Batsmen R B 4s 6s SR
Dimuth Karunaratne lbw b Ravindra Jadeja 28 71 5 0 39.44
Lahiru Thirimanne lbw b Ravichandran Ashwin 17 60 1 0 28.33
Pathum Nissanka not out 61 133 11 0 45.86
Angelo Mathews lbw b Jasprit Bumrah 22 39 1 1 56.41
Dhananjaya de Silva lbw b Ravichandran Ashwin 1 8 0 0 12.50
Charith Asalanka lbw b Jasprit Bumrah 29 64 5 0 45.31
Niroshan Dickwella c Shreyas Iyer b Ravindra Jadeja 2 10 0 0 20.00
Suranga Lakmal c Ravichandran Ashwin b Ravindra Jadeja 0 2 0 0 0.00
Lasith Embuldeniya c Mayank Agarwal b Mohammed Shami 0 5 0 0 0.00
Vishwa Fernando c Rohit Sharma b Ravindra Jadeja 0 5 0 0 0.00
Lahiru Kumara b Ravindra Jadeja 0 1 0 0 0.00


Extras 14 (b 0 , lb 6 , nb 8, w 0, pen 0)
Total 174/10 (65 Overs, RR: 2.68)
Fall of Wickets 1-48 (18.2) Lahiru Thirimanne, 2-59 (24.2) Dimuth Karunaratne, 3-96 (33.6) Angelo Mathews, 4-103 (38.1) Dhananjaya de Silva, 5-161 (57.6) Charith Asalanka, 6-164 (60.4) Niroshan Dickwella, 7-164 (60.6) Suranga Lakmal, 8-173 (63.3) Lasith Embuldeniya, 9-174 (64.5) Vishwa Fernando, 10-174 (64.6) Lahiru Kumara,

Bowling O M R W Econ
Mohammed Shami 12 5 27 1 2.25
Jasprit Bumrah 14 3 36 2 2.57
Ravichandran Ashwin 20 7 49 2 2.45
Jayant Yadav 6 2 15 0 2.50
Ravindra Jadedja 13 4 41 5 3.15


Batsmen R B 4s 6s SR
Lahiru Thirimanne c Rohit Sharma b Ravichandran Ashwin 0 9 0 0 0.00
Dimuth Karunaratne c Rishab Pant b Mohammed Shami 27 42 6 0 64.29
Pathum Nissanka c Rishab Pant b Ravichandran Ashwin 6 19 1 0 31.58
Angelo Mathews lbw b 28 75 2 1 37.33
Dhananjaya de Silva c Shreyas Iyer b Ravindra Jadeja 30 58 5 0 51.72
Charith Asalanka c Virat Kohli b Ravichandran Ashwin 20 9 2 2 222.22
Niroshan Dickwella not out 51 81 0 0 62.96
Suranga Lakmal c Jayant Yadav b Ravindra Jadedja 0 3 0 0 0.00
Lasith Embuldeniya c Rishab Pant b Ravindra Jadeja 2 42 0 0 4.76
Vishwa Fernando lbw b Mohammed Shami 0 5 0 0 0.00
Lahiru Kumara c Mohammed Shami b Ravichandran Ashwin 4 14 0 0 28.57


Extras 10 (b 4 , lb 5 , nb 1, w 0, pen 0)
Total 178/10 (60 Overs, RR: 2.97)
Fall of Wickets 1-9 (2.3) Lahiru Thirimanne, 2-19 (6.5) Pathum Nissanka, 3-45 (15.5) Dimuth Karunaratne, 4-94 (32.5) Dhananjaya de Silva, 5-121 (35.3) Charith Asalanka, 6-121 (36.2) Angelo Mathews, 7-121 (36.5) Suranga Lakmal, 8-153 (50.6) Lasith Embuldeniya, 9-170 (53.6) Vishwa Fernando, 10-178 (59.6) Lahiru Kumara,

Bowling O M R W Econ
Ravichandran Ashwin 21 5 47 4 2.24
Mohammed Shami 8 1 48 2 6.00
Ravindra Jadedja 16 5 46 4 2.88
Jayant Yadav 11 3 21 0 1.91
Jasprit Bumrah 4 1 7 0 1.75



போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<