மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட சமர்களில் நாலந்த, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் வெற்றி

20

கிரிக்கெட்டின் பித்துக்காலமான மார்ச் மாதத்தை அலங்கரிக்கின்ற பாடசாலைகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் (50) கொண்ட இரண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் இன்று (17) நடைபெற்று முடிந்தன.

ஆனந்த கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி

பழுப்பு வர்ணங்களின் சமர் (BATTLE OF THE MAROONS) என அழைக்கப்படும் கொழும்பு ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி அணிகள் இடையிலான இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டியில் நாலந்த கல்லூரி அணி டக்வத் லூவிஸ் முறைப்படி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

தவீஷ அபிஷேக்கின் அபார துடுப்பாட்டத்தோடு றிச்மன்ட் கல்லூரி வெற்றி

இம்முறை 45 ஆவது தடவையாக இடம்பெற்ற இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆனந்த கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய ஆனந்த கல்லூரி அணி 48 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 197 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. ஆனந்த கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக கலன விஜேசிரி 46 ஓட்டங்களை குவிக்க, நதீஷ கருணாரத்ன 42 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

அதேநேரம் ரவீன் டி சில்வா நாலந்த கல்லூரி அணிக்காக 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், லக்ஷித ரசஞ்சன 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Photos: Ananda College vs Nalanda College | 45th One Day Encounter

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 198 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நாலந்த கல்லூரி அணியினர், 141 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியில் மழையின் குறுக்கீடு உருவானது. தொடர்ந்து காத்திருந்த போதிலும் நிலைமைகள் எதுவும் சீராகாத நிலையில் பழுப்பு வர்ணங்களின் சமர் வெற்றியாளர்களாக டக்வத் லூவிஸ் முறைப்படி 16  ஓட்டங்களால் நாலந்த கல்லூரி அணி மாறியது.

நாலந்த கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் ஜயோத் கல்தேரா 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நின்று தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார். அதேநேரம், ஆனந்த கல்லூரி அணியின் பந்துவீச்சுக்காக சுதீப அங்குலுகஹ மழையின் குறுக்கீடு வர முன்னர் எதிரணியில் பறிபோன 5 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அழுத்தம் தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி – 197 (48) – கலன விஜேசிரி 46, நதீஷ கருணாரத்ன 43, ரவீன் டி சில்வா 4/50, தினேத் ரசஞ்சன 3/53

நாலந்த கல்லூரி – 141/5 (33.1) – ஜயோத் கல்தேரா 38*, சுதீப அங்குலுகஹ 5/28

முடிவு – நாலந்த கல்லூரி அணி 16 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூவிஸ் முறைப்படி)

தொடர்ந்து நான்காவது முறை ஒருநாள் சமரில் வென்ற யாழ். சென் ஜோன்ஸ்


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி

மொரட்டுவையின் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மற்றும் புனித செபஸ்டியன் கல்லூரி அணிகள் இடையிலான தங்கங்களின் சமர் என அழைக்கப்படும் இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி டக்வத் லூவிஸ் முறையில் 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் பெரும் போட்டி டி சொய்ஸா மைதானத்தில் 34 ஆவது தடவையாக ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித செபஸ்டியன் கல்லூரி அணி வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தனர்.

இதன்படி முதலில் துடுப்பாடிய புனித செபஸ்டியன் கல்லூரி அணியினர் நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

செபஸ்டியன் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக அரைச்சதங்கள் பெற்ற வீரர்களான நுவனிது பெர்னாந்து 76 ஓட்டங்களையும், ஜனிஷ்க பெரேரா 54 ஓட்டங்களையும் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Photos: St. Sebastian’s College vs Prince of Wales College – 34th Limited Overs Cricket Encounter

மறுமுனையில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக, வினுஜ ரன்புல் 3 விக்கெட்டுக்களையும், பசிந்து பெதும் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனை தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்கான 220 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி 39.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது இப்போட்டியிலும் மழையின் குறுக்கீடு உருவானது.

இப்போட்டியிலும் நிலைமைகள் எதுவும் சீராகாத காரணத்தினால் போட்டி கைவிடப்பட்டு டக்வத் லூவிஸ் முறைப்படி பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் சுவாத் மெண்டிஸ் 43 ஓட்டங்களை குவித்த வண்ணம் தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார். அவருடன் தரிந்து அமரசிங்கவும் 16 ஓட்டங்களுடன் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியின் வெற்றிக்கு பக்கபலமாக காணப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி – 218/9 (50) – நுவனிது பெர்னாந்து 76, ஜனிஷ்க பெரேரா 54, வினுஜ ரன்போல் 3/37, பசிந்து பெதும் 2/27

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி – 169/6 (39.2) – சுவாத் மெண்டிஸ் 43, தரிந்து அமரசிங்க 36, பிரவீன் கூரே 1/15

முடிவு – பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி 5 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூவிஸ் முறையில்)

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க