கிரிக்கெட் உலகை உலுக்கியுள்ள ஷேன் வோர்னின் மரணச் செய்தி

129

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவானான ஷேன் வோர்ன் தன்னுடைய 52ஆவது வயதில் மரணமடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் வோர்ன் தாய்லாந்தில் வைத்து அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பின் மூலம் மரணமடைந்திருக்க முடியும் என அவுஸ்திரேலிய ஊடகமான Fox நிறுவனம்  செய்தி வெளியிட்டிருக்கின்றது.

வோர்ன் தனது வீட்டில் நாதியற்றுக் கிடந்தது இனங்காணப்பட்டிருந்ததோடு, பின்னர் அவரினை காப்பற்ற மருத்துவர்கள் முயற்சிகள் மேற்கொண்டு அவை பலனின்றி போனதன் பின்னரே ஷேர்ன் வோர்ன் மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் வோர்ன் மரணமடைந்த செய்தி கிரிக்கெட் இரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திருப்பதோடு, அவரது மரணம் தொடர்பிலான மேலதிக செய்திகள் விரைவில் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அவுஸ்திரேலிய அணி உருவாக்கிய மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் வோர்ன் டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுக்களையும், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 293 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<