இங்கிலாந்து லயன்ஸ் அணியிடம் இலங்கை மீண்டும் படுதோல்வி

Sri Lanka tour of England 2026

113

ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற இரண்டாவது சுற்றுலா T20 பயிற்சிப் போட்டியிலும் இலங்கையை இங்கிலாந்து லயன்ஸ் டக்வத் லூயிஸ் (DLS) முறைப்படி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி வெளியீடு

பெக்கன்ஹமில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் வீரர்களால் முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்ட இலங்கை அணி 

முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களைப் பெற்றது.  

இலங்கை துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக கமில் மிஷார 31 ஓட்டங்கள் பெற்றார். இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சில் மேசன் கிரேன், ஜேம்ஸ் ஹோல்ஸ் மற்றும் டொம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். 

பின்னர் மழை குறுக்கிட்டதால், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு டக்வத் லூயிஸ் முறைப்படி 8 ஓவர்களில் 73 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை நோக்கி ஆடிய அவ்வணி, 6.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 76 ஓட்டங்கள் எடுத்து, 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் எளிதான வெற்றியைப் பதிவு செய்தது. 

இங்கிலாந்து லயன்ஸிடம் இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வி

இந்தத் தோல்வியுடன் இலங்கை அணியின் இரண்டு போட்டிகள் கொண்ட சுற்றுலா T20 தொடரினை 2-0 என இங்கிலாந்து லயன்ஸ் கைப்பற்றியுள்ளது. 

அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் தொடங்குகின்றது. இதில் முதலாவது போட்டி செப்டம்பர் 15 செளத்தம்ப்டனிலும் (Southampton), அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகள் செப்டம்பர் 17 மற்றும் 19 திகதிகளில் மன்செஸ்டர் நகரிலும் (Manchester) நடைபெறவுள்ளன. 

ஸ்கோர் விபரம் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<