இலங்கை கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு இம்மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
>>இலங்கையின் மாபெரும் விளையாட்டுத் திருவிழா இந்த மாதம் ஆரம்பம்
அதன்படி இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 21ம் திகதி முதல் 25ம் திகதிவரை மென்செஸ்டரின் ஓல்ட் ட்ரெபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 29ம் திகதி முதல் செப்டம்பர் 02ம் திகதிவரை லண்டனின் லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளதுடன், மூன்றாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 6ம் திகதி முதல் 10ம் திகதிவரை கியா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த இந்த மூன்று போட்டிகளுக்கு முன்னர் இலங்கை அணி பயிற்சிப்போட்டியொன்றில் விளையாடவுள்ளது. இந்தப் பயிற்சிப்போட்டி இம்மாதம் 14ம் திகதி முதல் 17ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
போட்டி அட்டவணை
- பயிற்சிப்போட்டி – ஆகஸ்ட் 14 – 17
- முதல் டெஸ்ட் – ஆகஸ்ட் 21 – 25 (ஓல்ட் ட்ரெபோர்ட்)
- இரண்டாவது டெஸ்ட் – ஆகஸ்ட் 29 – செப்டம்பர் 02 (லோர்ட்ஸ்)
- மூன்றாவது டெஸ்ட் – செப்டம்பர் 6 – 10 (கியா ஓவல்)
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<