Home Tamil ஒரு நாள் தொடரினை கைப்பற்றிய பங்களாதேஷ் அணி

ஒரு நாள் தொடரினை கைப்பற்றிய பங்களாதேஷ் அணி

70

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் 4 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

>> 3ஆவது ஒருநாள் போட்டியை தவறவிடும் டில்ஷான் மதுஷங்க?

முன்னதாக சட்டோக்ரமில் ஆரம்பித்த இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் இப்போட்டியில் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.

இந்த ஒருநாள் தொடரினை கைப்பற்ற இப்போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்திருந்த இலங்கை அணி உபாதைக்குள்ளான வேகப்பந்துவீச்சாளர் டில்சான் மதுசங்கவிற்குப் பதிலாக மகீஷ் தீக்ஷன உள்வாங்கியிருந்தது.

இலங்கை XI

குசல் மெண்டிஸ், (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, துனித் வெல்லாலகே, ப்ரமோத் மதுசான், மகீஷ் தீக்ஷன, லஹிரு குமார

பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பம் அமைந்திருக்கவில்லை. அணியின் ஆரம்பவீரர்களாக களமிறங்கியவர்களில் பெதும் நிஸ்ஸங்க ஒரு ஓட்டத்துடன் ஓய்வறை நடக்க, அவிஷ்க பெர்னாண்டோ 04 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து மூன்றாவது முறையாக இந்த ஒருநாள் தொடரில் ஏமாற்றியிருந்தார்.

இதன் பின்னர் இலங்கை அணியின் முன்வரிசை வீரர்களிடம் இருந்து  எதிர்பார்த்த துடுப்பாட்டம் வெளிப்பட்டிருக்கவில்லை. இலங்கை அணியின் முன்வரிசை வீரர்களில் சதீர சமரவிக்ரம 14 ஓட்டங்களுடன் ஏமாற்ற, அணித் தலைவர் குசல் மெண்டிஸ் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் சரித் அசலன்க சற்று பொறுப்புடன் ஆடி 37 ஓட்டங்கள் பெற்ற போதிலும் அவரின் விக்கெட்டினை பறிகொடுத்த இலங்கை அணி ஒரு கட்டத்தில் 136 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இந்த நேரத்தில் இலங்கை அணிக்கு மத்திய வரிசையில் கைகொடுத்த ஜனித் லியனகேவின் ஆட்ட உதவியோடு இலங்கை 50 ஓவர்களில் அனைத்து  விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த ஜனித் லியனகே 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக தன்னுடைய கன்னி ஒருநாள் சதத்தோடு 102 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்கள் பெற்றார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மட் 3 விக்கெட்டுக்களையும் முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் மெஹிதி ஹஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 236 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி குறித்த வெற்றி இலக்கை 40.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களுடன் அடைந்தது.

பங்களாதேஷ் அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் தன்சித் ஹஸன் 81 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 84 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் இறுதிநேர அதிரடி காட்டிய ரிசாத் ஹொசைன் 18 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகளோடு 48 ஓட்டங்கள் பெற்றார்.

>> 3ஆவது ஒருநாள் போட்டியை தவறவிடும் டில்ஷான் மதுஷங்க?

இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 4 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்த போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக ரிசாட் ஹொசைன் தெரிவாக தொடர் நாயகனாக நஜ்முல் ஹொசைன் ஷன்டோ தெரிவாகியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

Result


Bangladesh
237/6 (40.2)

Sri Lanka
235/10 (50)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Taskin Ahmed 1 8 0 0 12.50
Avishka Fernando c Mushfiqur Rahim b Taskin Ahmed 4 6 1 0 66.67
Kusal Mendis c Mushfiqur Rahim b Rishad Hossain 29 51 3 0 56.86
Sadeera Samarawickrama c Mushfiqur Rahim b Mustafizur Rahman 14 15 2 0 93.33
Charith Asalanka c Mushfiqur Rahim b Mustafizur Rahman 37 46 5 0 80.43
Janith Liyanage  not out 101 102 11 2 99.02
Dunith Wellalage c Soumya Sarkar b Mehidy Hasan Miraz 1 18 0 0 5.56
Wanidu Hasaranga b Mehidy Hasan Miraz 11 8 0 1 137.50
Maheesh Theekshana c Tanzid Hasan b Soumya Sarkar 15 40 0 0 37.50
Pramod Madushan c Anamul Haque b Taskin Ahmed 3 6 0 0 50.00
Lahiru Kumara run out (Towhid Hridoy) 1 1 0 0 100.00


Extras 18 (b 0 , lb 0 , nb 1, w 17, pen 0)
Total 235/10 (50 Overs, RR: 4.7)
Bowling O M R W Econ
Shoriful Islam 10 0 55 0 5.50
Taskin Ahmed 10 1 42 3 4.20
Mustafizur Rahman 9 1 39 2 4.33
Soumya Sarkar 2 0 10 1 5.00
Mehidy Hasan Miraz 10 1 38 2 3.80
Rishad Hossain 9 0 51 1 5.67


Batsmen R B 4s 6s SR
Anamul Haque c Avishka Fernando b Lahiru Kumara 12 22 1 0 54.55
Tanzid Hasan c Charith Asalanka b Wanidu Hasaranga 84 81 9 3 103.70
Najmul Hossain Shanto c Kusal Mendis b Lahiru Kumara 1 5 0 0 20.00
Towhid Hridoy c Pramod Madushan b Lahiru Kumara 22 36 0 0 61.11
Mahmudullah c Kusal Mendis b Lahiru Kumara 1 4 0 0 25.00
Mushfiqur Rahim not out 37 36 3 1 102.78
Mehidy Hasan Miraz c Pramod Madushan b Wanidu Hasaranga 25 40 3 0 62.50
Rishad Hossain not out 48 18 5 4 266.67


Extras 7 (b 0 , lb 0 , nb 0, w 7, pen 0)
Total 237/6 (40.2 Overs, RR: 5.88)
Bowling O M R W Econ
Maheesh Theekshana 9.2 1 35 0 3.80
Pramod Madushan 7 0 52 0 7.43
Lahiru Kumara 8 0 48 4 6.00
Wanidu Hasaranga 9 0 64 2 7.11
Dunith Wellalage 6 0 30 0 5.00
Charith Asalanka 1 0 8 0 8.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<